தெய்வங்கள்

தெய்வங்கள்

கல்வி (காசு பார்ப்போரின்) கடவுள்


கல்வி கடவுளென நேரில்
கண்டவர்கள் கூறுவதால்
சொல்லி கொடுத்த-நல்ல
ஆசிரியரை மறப்பது தகுமோ?
நல்லொழுக்கம்-நேர்மை
நற்பண்பை போதித்த
நம்பெற்றோரையும் -மறந்து
நாடுவது கோவில் தானோ
கல்வி கட்டணம்
அள்ளி கொடுத்தாலும்
கண்டபடி அங்கு-இருந்து
திட்டு வாங்கினாலும்

புத்தகத்தை துடைத்து-அதில்
 அழகாய் பொட்டிட்டிட்டு
விபூதி பட்டையில்-விரைவாக
குங்குமம் சந்தனம் வைத்து
அர்ச்சனை செய்தால்-படிப்பு
அனைத்தும் புரியுமோ?
தட்சனை கொடுத்தால்-படிப்பின்
தரம் கூடுமோ?
நம்பிக்கை நல்லதே!
நாளும் படித்தால்
நல்ல மதிப்பெண்-வெற்றியும்
 நன்றுகிடைக்குமே !!


Comments

 1. வித்தியாசமாக இன்றைய நிலையைச்
  சொல்லிப் போகும் பதிவு அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே
   யாரும் மறுப்பு சொல்ல முடியாது,இதையும் இந்த கடவுள்தான் ஆதரிக்கிறார்

   Delete
 2. Replies
  1. தாங்கள் வாக்களித்தமைக்கு நன்றி

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more