தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆயுதபூஜை - மகிழ்ச்சியா? நிகழ்ச்சியா?

 tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
முதலாளி
சொன்ன  நேரத்தில்
செய்ய முடியல
செய்த பொருளை -வியாபாரி
கேட்க ஆளில்லை

 தொழிலாளி
ஓடாத இயந்திரம்
உருகாத  வியர்வை
தேடாத பாட்டு-தொழிலாளி
தேவையில்லை  எனக்கு

குடும்ப தலைவன்
மின்சாரம்  இல்லாது
மிச்சமிருந்த  சாப்பாடும்
மிளகாய் வெங்காயம்-பழைய
கஞ்சிதான் குடிக்கணும்

 மனைவி
சாயங்காலம் செய்திட்ட
சரியா  வேகாத
சப்பாத்தி குருமா-வழியில்லை
சாப்பிட்டுத்தான் ஆகணும்

பிள்ளைகள்
சுண்டலும் இல்லை
கிண்டலும் இல்லை
கடமைக்காக இன்று -கடலைப்பொறியும்
கஷ்டமாம் என்ன சொல்ல?

Comments

 1. கால மாற்றம் வேறு என்ன சொல்ல முடியும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நட்பே,
   மின்சாரம் இல்லாததால் தான் மக்களின் கஷ்டம் இவ்வாறாக மாறியுள்ளது

   Delete
 2. Replies
  1. அனைவரும் அறிந்த நிகழ்வுதான்
   ஆயினும் தங்கள் வித்தியாசமான பார்வை
   மனம் கவர்ந்தது
   தொடர வாழ்த்துக்கள்

   Delete
  2. இன்றைய கஷ்டம்னா சூழ்நிலையில் இப்படித்தான் என்ன முடிகிறது.நன்றி ஐயா

   Delete
 3. ஒவ்வொருவருக்கும் மற்றவர் மீது குறை சொல்ல ஏதாவது ஓட்று இருக்கத்தான் செய்கிறது.என்ன செய்ய?
  நல்ல பதிவு

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!
   என்ன செய்யறது எல்லோருக்கும் இப்படிப்பட்ட பிரச்சனை

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more