Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பேரழகி வட்ட நிலவு

Image
 பேரழகி வட்ட நிலவு ஊரெல்லாம் காணாது  உன்னை நான் மறைத்திருக்க உள்விளக்கு எரியாமல் உன்னோடு சேர்ந்திருக்க பாரெங்கும் சுத்திவரும் பேரழகி வட்டநிலவும் பார்த்து விட்டு போகாமல் பைந்தமிழ்லாய் பார்பதேனோ நீ  விடும் முச்சு நிம்மதியை கெடுபதாலோ நிலவுக்கே போட்டியாக நின்னலகை கண்டதாலோ மான் கூட்டமெல்லாம் மறுபடியும் பார்க்கவேண்டி மயிலிறகு தோகையுடன் மறைந்திருந்து காண்பதேனோ மலர்படுக்கை மஞ்சத்தில் பஞ்சனையும் மெதுவாக கொஞ்சனைக்க  வேண்டியே கெஞ்சுதடி வஞ்சியே வீண் பேச்சு பேசாமல் விடியும்வரை உறங்காமல் நானுன்னை பருகிடுவேன் நல்லிரவு விடியும்வரை ஊர்பார்த்து வந்தவுடன் உள்ளவர்கள் ஆசியுடன் பார்போற்ற உன் கை பற்றிடுவேன்  நங்கையே

தனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்

தனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்          தர்மம் பண்றேன் பேர்வழி என்று தனது தேவைக்கில்லாமல்  அடுத்தவருக்கு கொடுப்பது  என்பது ஏமாளித்தனம் என்று நான் சொல்லுவேன்.முதலில் தனது தேவைகளும்,தனது குடும்பத்தினர் தேவைகளையும் அறிந்து பூர்த்தி செய்துவிட்டு அதன்பின் அடுத்தவரை பற்றி யோசிப்பதுதான் உண்மையும் சிறந்ததுமாகும்.அதற்காக கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை .         முதலில் தனக்கு தேவையானதை அதாவது தன் குடுபத்திற்கும் சாப்பாட்டு செலவு,பிள்ளைகளின் கல்விக்கான செலவு வீட்டு வாடகை, மற்றும் பிற தேவையான அத்தியாவசியமான செலவுகள் போக சேமிப்பும் முதலீடுட்டுக்கும் ஒதுக்கியது போக செய்வதுதான் இன்றைய சூழ்நிலையில் புத்திசாலிதனமென சொல்லுவேன்.         தகுதிக்கு மீறி தானமோ தர்மமோ செய்தால் அதன்பின்  தானம் செய்யும் நிலையை இழப்பான் பின் அவனுக்கே உதவி செய்ய ஆளில்லாமல் அடுத்தவரை எதிர்பார்த்து இருப்பான்  அப்படி பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சும் அதனால் வேதனையும் மன உளைச்சலுமே இருக்கும்       அதற்குப்பின் அவனே ஏன் செய்தோம் என்ற நிலையில் என்னிடம் இருக்கும்போது எவ்வளோவோ யார் யாருக்கோ கொடுத்தேன் இன்று எ

கோழையாக வாழ்ந்திடாதே

Image
 கோழையாக வாழ்ந்திடாதே     கோழையாக வாழ்ந்திடாதே எந்த கொடுமைக்கும் நீ பயந்திடாதே ஏழைக்கும் கோபமுண்டு -என்பதை யாரிடமும் மறந்தும் காட்டிடாதே பேச்சிலே  பணிவாக இருந்தாலே பீதியில் நடுங்கிடுவார் பார்த்தாலே பிறப்பை ஏங்கி தவிக்காதே-வாழ்க்கை பெருகிடும் உனது உழைப்பாலே நேர்மையய் என்றும் மறக்காதே நெஞ்சிலே துணிவை இழக்காதே வஞ்சனையின்றி உழைத்தாலே -வாழ்க்கை விஞ்சிடும் உனது அறத்தாலே வசதியானவன் வாழ்வெல்லாம் நன்கு வாழ்வதாய் மட்டும் எண்ணிவிடாதே வாய் நிறைய சிரிப்பதாலே-அவன் வாழ்கையை பெரிதாய்  நினைக்காதே தோல்விக்கு பயந்து இருக்காதே தொடரும் கவலைகள் மறைந்தாலே தொட்டிடும் சிகரத்தை மனத்தாலே -அதனால் தொடங்கிடு மகிழ்ச்சியை மனதாலே 2013-இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

எதுகையே?மோனையே ?

Image
 எதுகையே மோனையே    (நன்றியுடன்) எதுகையே மோனையே என்னுயிர்ப் பேழையே தென்றலே தீண்டிடும் திருமேனிக் காரிகையே உன்னிடம் அடைக்கலம் உள்ளத்தில்  சங்கமிக்க என்விழியில் மின்சாரம் ஏற்றியது ஏனடியே அச்சாரம் போட்டதாலே அவசரமாய் தோன்றியதோ வித்தாரம் பேசவந்து விளையாட்டை தேடுவதேன் தென்னாட்டு மங்கையே தேரோடும் கங்கையே உன்வீட்டு முற்றத்தில் உன்னருகே வந்திடுவேன் ஊரெல்லாம் உறங்கியதும் உன்மடியில் தவமிருப்பேன் காணாது கண்டதை மீண்டும் கண்டெடுத்து மூழ்கிடுவேன் ஊர்கூடி ஒன்றினைத்து உன்னையே மணமுடிப்பேன் தேர்கூடும் சொந்தங்கள் தெருவெல்லாம் வாழ்த்திடவே

பழமொழிகள்-இறைக்கிற கிணறுதான் சுரக்கும்

இறைக்கிற கிணறுதான் சு ரக்கும்        "கிணற்றில் நீர் இறைக்க இறைக்க மீண்டு தண்ணீர் ஊறுகிறதோ அது போல நாம் அடுத்தவருக்கு உதவி செய்ய செய்ய நமக்கு கிடைக்கும் என்று அர்த்தம் "         எங்கப்பா அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை இது ,ரொம்பநாளா எனக்கு இதை பத்தி தெரியவே இல்லை ஏதோ பழமொழி சொல்லுகிறார் எனவும் பொழுது போக்கா சொல்லுகிறார் என்று நினைச்சிருந்தேன்         ஒருமுறை எனக்குசெலவுக்கு காசில்லை அப்போ நான் ஏன்ப்பா இருக்கறப்ப நான் எல்லாத்துக்கும் கொடுக்கிறேன் இப்ப காசில்லாமல் இருக்கும் இந்த நேரத்திலும் என்னை பணம் கெட்டு தொந்தரவு பண்றாங்க எனக்கு இருக்கிற கஷ்டத்தை விட அவங்களுக்கு கொடுக்க முடியவில்லையே என நினைக்கும் போது எனக்கு வருத்தமாய் உள்ளது என்றேன்          ஒரு இரண்டு மணிநேரம் என்னையும் என்னுடைய மன நிலையையும் கவனிச்ச அவர் , என்னை கூப்பிட்டார்  நான் அருகில் சென்று அமர்ந்தேன் அப்போ "இத்தனை நாளா  கையில இருக்கும்போது எல்லோருக்கும் நீ கொடுத்த அப்ப எல்லோரும் சந்தோசமா வாங்கினாங்க அதைத்தான் இப்பவும் உன்கிட்ட எதிர்பாக்கிறாங்க",தப்பு உன்னுதும் இல்லை அவங்கமேல குறை சொல்லவும் முடியா

தமிழக விவசாயின் வாழ்வு

Image
  தமிழக விவசாயின் வாழ்வு   ஊரெல்லாம்  ஓடுகிண்ற தண்ணீரை ஒருவருக்கும் கொடுக்காமல் அவர் வாடுகின்ற விவசாயி வாழ்வை-பாராமல் தேடுகின்றார் பாவம் நாடுகின்றார் பயிர்கள்  கருகி அழிந்தாலும் உயிர்கள் மடிந்து வீழ்ந்தாலும் உருகி கெஞ்சி கேட்டாலும்-உளறல் உண்மை என்றே உறைக்கின்றார்   பழகி  பேசி வாழ்ந்தாலும் பாவம் மக்கள் என்ன செய்வர் அழகில்லாத அரசியலால் தினம்-அரசும் அறிக்கையே  அறமாய் எண்ணுகின்றார் உழவில்லாத  நாட்களுக்கு ஊதியமாம் இழந்த  பயிருக்கு  இழப்பீடாம் மறைந்த உழவனின்  உயிரை-வாழ்வை மறுபடியும் மீட்டு யார் தருவார் ஒற்றை பயிரை வளர்ப்பதனால் உழைப்பும் வீணாய் போகிறதே பற்றை துறந்து பணமும்-வீணாய் பயிரும் கருகி சாகிறதே இச்செயல்  மறந்து இனிமேலும் இதர பயிரை வளர்த்திட்டால் இன்னல் இன்றி இருந்திடலாம்-இனிமேல் இயைந்து பயிரிட  தொடங்கிடுங்கள்

தேனடை நிறமோ?

தேனடை நிறமோ தித்திக்கும் சுவையோ நானருகில்  பார்த்ததுமே நாணமென்ன சுந்தரியே நீ அருகில் வந்ததுமே நீரூற்றாய் ஆனதேனோ திரவியமே  தேனமுதே திகட்டாத நற்சுவையே பூதொடுத்த மாலையிட்டு புதுத்தாலி  பின்னலிட்டு ஊர் உறங்கும் வேளையிலே உன்னையே சொந்தமாக்குவேன் காத்திருந்து  பார்த்திருந்து காத்திட்ட கடவுள் முன்னே ஊர்திரண்டு வாழ்த்திடவே உன்னையே மணம் முடிப்பேன் உனக்கு என்னை தந்திடுவேன் உன்னுயிரோடு கலந்திடுவேன்

ரசித்தவர்கள்