தெய்வங்கள்

தெய்வங்கள்

பழமொழிகள்-இறைக்கிற கிணறுதான் சுரக்கும்

இறைக்கிற கிணறுதான் சுரக்கும்

       "கிணற்றில் நீர் இறைக்க இறைக்க மீண்டு தண்ணீர் ஊறுகிறதோ அது போல நாம் அடுத்தவருக்கு உதவி செய்ய செய்ய நமக்கு கிடைக்கும் என்று அர்த்தம் "

        எங்கப்பா அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை இது ,ரொம்பநாளா எனக்கு இதை பத்தி தெரியவே இல்லை ஏதோ பழமொழி சொல்லுகிறார் எனவும் பொழுது போக்கா சொல்லுகிறார் என்று நினைச்சிருந்தேன்

        ஒருமுறை எனக்குசெலவுக்கு காசில்லை அப்போ நான் ஏன்ப்பா இருக்கறப்ப நான் எல்லாத்துக்கும் கொடுக்கிறேன் இப்ப காசில்லாமல் இருக்கும் இந்த நேரத்திலும் என்னை பணம் கெட்டு தொந்தரவு பண்றாங்க எனக்கு இருக்கிற கஷ்டத்தை விட அவங்களுக்கு கொடுக்க முடியவில்லையே என நினைக்கும் போது எனக்கு வருத்தமாய் உள்ளது என்றேன்

         ஒரு இரண்டு மணிநேரம் என்னையும் என்னுடைய மன நிலையையும் கவனிச்ச அவர் , என்னை கூப்பிட்டார்  நான் அருகில் சென்று அமர்ந்தேன் அப்போ "இத்தனை நாளா  கையில இருக்கும்போது எல்லோருக்கும் நீ கொடுத்த அப்ப எல்லோரும் சந்தோசமா வாங்கினாங்க அதைத்தான் இப்பவும் உன்கிட்ட எதிர்பாக்கிறாங்க",தப்பு உன்னுதும் இல்லை அவங்கமேல குறை சொல்லவும் முடியாது ஏன்னா  கொடுக்கறது உனது சுபாவம் வாங்கறது அவங்க வாடிக்கை என்றார்.

         சரி, உனக்கு ஒரு யோசனை சொல்லுறேன் நீ ஏன் இப்போ அவங்களிடம் கேட்டுப்பாரேன் என்று சொன்னார் .எனக்கு ஒண்ணுமே புரியலை யாரிடம் கேட்பது கேட்டா கொடுப்பாங்களா மாட்டாங்களா என்று எனக்கு சந்தேகம் தயக்கமாய் இருந்தது ,எனக்கு இன்னொரு யோசனை தோன்றியது முதலில் அம்மாவிடம் கேட்கலாமா அல்லது அப்பாயே கேட்டு பார்ப்போமே என்று
யோசிக்கும்போதே அவரே எனக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தார்,

        அப்போதான் அவர் என்னிடம் இந்த பழமொழியை சொன்னார் ,உன்னிடம் பணம் உள்ளபோது  நீ அடுத்தவருக்கு உதவி செய்தால் மீண்டும் உனக்கு கிடைக்கும் ,நான் பணம் தராவிட்டாலும் மற்றவர்கள் உனக்கு  தானாக அவர்களே முன்வந்து உதவி செய்வார்கள் நீ கொடுத்த பணத்தில் சிறிதளவாவது உனக்கு மீண்டும் கிடைக்கும் என்றார்.

         அப்புறம் அக்கா,மமா மச்சான்  என்று அவர்களாகவே  முன்வந்து  பணத்தை வைத்துகொள் என்று திணித்தார்கள்.எனக்கு மிகப்பெரிய சந்தோசம் .அப்பத்தான் என் அப்பா தூரத்திலிருந்து பார்த்து சிரித்தது தெரிந்தது.அடிக்கடி அவர் சொல்லிவந்த பழமொழியின் அர்த்தமும் புரிந்தது

    நாம் மனமுவந்து எல்லோருக்கும் உதவி செய்தால் தானாகவே நமக்கு மீண்டும் உதவி கிடைக்கும் அல்லது அதற்கான சூழ்நிலையும் அமையும் .என்பதுதான் பழமொழியின் சாராம்சம்.


Comments

 1. அப்பாவின் வார்த்தையும் அதற்கான விளக்கமும் முற்றிலும் உண்மையே

  ReplyDelete
  Replies
  1. நானா சொல்லலை ஏற்கனவே சொல்லியதை ஞாபக படுத்தினேன்

   Delete
 2. அப்பாவின் வார்த்தை மந்திரம்தான்.ஆனால் இந்தக் காலத்தில் இது பொருத்தமாக இல்லை.என் அனுபவம் இது !

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் முற்றிலும் மறுக்க முடியாது,இன்னொரு கோணத்திலும் சொல்லலாம் அதாவது, உழைக்க வேண்டியும் அதனால் நிறைய பொருள் கிடைக்குமென்றும் கூட சொல்லி இருக்கலாமே

   Delete
 3. “இறைக்கிற கிணறுதான் சுரக்கும்“ இந்தப் பழமொழி கிணற்றுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று நினைக்கிறேன் கவியாழி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்ல முடியாது அதிகமாக செலவு செய்தால் உழைக்கும் அக்தியும் அதிகரிக்கும் கூடவே முயற்சியால் பண வசதியும் பெருகும் என்றும் எண்ணலாம்

   Delete
 4. சிந்திக்கச் சிந்திக்க புதிய புதிய
  கருத்துக்கள் ஊறும் என்பதனை
  ஒரு புதிய பாணியில் விளக்கமளித்தது
  மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை என் குடும்பத்தின் சார்பாகவும் கூறிக்கொள்கிறேன்

   Delete
 5. மனங்கள் குறுகி வருகின்றன தற்காலத்தி்ல். உங்கள் அப்பாவைப் போன்ற நபர்கள் இப்போது அரிது. உதவி என்று கேட்டால் செவிடென நடிப்பவர்களின் தொகையே அநேகம். ஆயினும் பழமொழிகள் எல்லாம் ‘கிழமொழிகள்’ என நினைக்காமல் உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே விவரித்த விதம் எனக்குப் பிடித்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே,இது எங்கேயோ இடிக்கிறதே எனக்கு அப்படி ஒன்றும் வயதில்லை ஆனால் அப்பா கூறியது என் நினைவில் வந்ததால் தான் கூறினேன்

   Delete
 6. i am always following this opinions. nice

  ReplyDelete
  Replies
  1. இதை பல நிலைகளில் ஏற்றுகொள்ள முடியும் அவரவர் எண்ணங்களை பொறுத்தே
   வருகைக்கு நன்றி

   Delete
 7. நாம் மனமுவந்து எல்லோருக்கும் உதவி செய்தால் தானாகவே நமக்கு மீண்டும் உதவி கிடைக்கும் அல்லது அதற்கான சூழ்நிலையும் அமையும் .என்பதுதான் பழமொழியின் சாராம்சம்.


  சிறப்பான பழமொழியும் ,
  தங்கள் தந்தையின் அனுபவ மொழியும் அருமை..
  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ,ஏதோ அப்பா சொன்னதை மறக்காம அடுத்தவருக்கும் சொல்லலாமேன்னுதான்

   Delete
 8. நாம் மனமுவந்து எல்லோருக்கும் உதவி செய்தால் தானாகவே நமக்கு மீண்டும் உதவி கிடைக்கும் அல்லது அதற்கான சூழ்நிலையும் அமையும் .என்பதுதான் பழமொழியின் சாராம்சம்.
  //

  உண்மைதான் அனுபவித்துள்ளேன்.

  நன்மைசெய் பலனை எதிர்பார்க்காதே! எதிர்பார்த்து செய்வது நன்மையல்லவே! மிக அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் முதன்முதலான நன்றி
   இந்தபழமொழியை அனுபவித்துள்ள நீங்கள் சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கும்

   Delete
 9. பழமொழி தந்த உங்கள் அனுபவம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அப்பாவின் அறிவுரையும் அப்படித்தான் சொல்லித்தந்தார்.வந்ததுக்கு நன்றிங்க

   Delete
 10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க அன்பரே.இந்த வருடமும் இனிப்பானா ஆண்டாக இருக்கவேண்டி வாழ்த்துகிறேன்
   வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றி

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more