தெய்வங்கள்

தெய்வங்கள்

கோழையாக வாழ்ந்திடாதே

 கோழையாக வாழ்ந்திடாதே

 

 

கோழையாக வாழ்ந்திடாதே எந்த
கொடுமைக்கும் நீ பயந்திடாதே
ஏழைக்கும் கோபமுண்டு -என்பதை
யாரிடமும் மறந்தும் காட்டிடாதே

பேச்சிலே  பணிவாக இருந்தாலே
பீதியில் நடுங்கிடுவார் பார்த்தாலே
பிறப்பை ஏங்கி தவிக்காதே-வாழ்க்கை
பெருகிடும் உனது உழைப்பாலே

நேர்மையய் என்றும் மறக்காதே
நெஞ்சிலே துணிவை இழக்காதே
வஞ்சனையின்றி உழைத்தாலே -வாழ்க்கை
விஞ்சிடும் உனது அறத்தாலே

வசதியானவன் வாழ்வெல்லாம் நன்கு
வாழ்வதாய் மட்டும் எண்ணிவிடாதே
வாய் நிறைய சிரிப்பதாலே-அவன்
வாழ்கையை பெரிதாய்  நினைக்காதே

தோல்விக்கு பயந்து இருக்காதே
தொடரும் கவலைகள் மறைந்தாலே
தொட்டிடும் சிகரத்தை மனத்தாலே -அதனால்
தொடங்கிடு மகிழ்ச்சியை மனதாலே


2013-இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 


Comments

 1. மனதுககு உற்சாகம் தரும் வரிகளால், தெம்பூட்டும் கவிதையுடன் புத்தாண்டு வாழ்த்து சொல்லயிருக்கீங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ,இந்த புதுவருடத்தில் எல்லா செல்வமும் நட்புடன் பல்லாண்டு வாழ்கவென தமிழ் சொல்லாண்டுபோல் வாழ்கவென விரும்புகிறேன் ,நன்றி

   Delete
 2. ஏழையாக இருத்தாலும் கோழையாக மட்டும் இருக்கக் கூடாது

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா! நீங்கள் கூறிய செய்திதான் இது
   ,இந்த புதுவருடத்தில் எல்லா செல்வமும் நட்புடன் பல்லாண்டு வாழ்கவென தமிழ் சொல்லாண்டுபோல் வாழ்கவென விரும்புகிறேன் ,நன்றி

   Delete
 3. நம்பிக்கையூட்டும் கவிதையைத் தந்தமைக்கு நன்றி. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நீங்கலேலாம் சொல்லாததா நான் உன்கலடி பார்த்து தான் தெரிந்துகொண்டேன்
   நன்றி ஐயா ,இந்த புதுவருடத்தில் எல்லா செல்வமும் நட்புடன் பல்லாண்டு வாழ்கவென தமிழ் சொல்லாண்டுபோல் வாழ்கவென விரும்புகிறேன் ,நன்றி

   Delete
 4. மனம் கவர்ந்த பதிவு
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ,இந்த புதுவருடத்தில் எல்லா செல்வமும் நட்புடன் பல்லாண்டு வாழ்கவென தமிழ் சொல்லாண்டுபோல் வாழ்கவென விரும்புகிறேன் ,நன்றி

   Delete
 5. நம்பிக்கையை தரும் வரிகள் மிக மிக அருமை.

  இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ,இந்த புதுவருடத்தில் எல்லா செல்வமும் நட்புடன் பல்லாண்டு வாழ்கவென தமிழ் சொல்லாண்டுபோல் வாழ்கவென விரும்புகிறேன் ,நன்றி

   Delete
 6. தோல்விக்கு பயந்து இருக்காதே
  தொடரும் கவலைகள் மறைந்தாலே
  தொட்டிடும் சிகரத்தை மனத்தாலே -அதனால்
  தொடங்கிடு மகிழ்ச்சியை மனதாலே..

  சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நட்பே ,இந்த புதுவருடத்தில் எல்லா செல்வமும் நட்புடன் பல்லாண்டு வாழ்கவென தமிழ் சொல்லாண்டுபோல் வாழ்கவென விரும்புகிறேன் ,நன்றி

   Delete
 7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க,உங்களுக்கும் உங்கள் க்டும்பதினருக்கும் எனது மணம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

   Delete
 8. நல்ல கருத்து சொல்லும் வரிகள்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நட்பே ,இந்த புதுவருடத்தில் எல்லா செல்வமும் நட்புடன் பல்லாண்டு வாழ்கவென தமிழ் சொல்லாண்டுபோல் வாழ்கவென விரும்புகிறேன் ,நன்றி

   Delete
 9. உற்சாகமூட்டும் வரிகள்
  புத்தாண்டில் இப்பதிவு அமைந்திருப்பது இன்னும் சிறப்பு
  உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ,இந்த புதுவருடத்தில் எல்லா செல்வமும் நட்புடன் பல்லாண்டு வாழ்கவென தமிழ் சொல்லாண்டுபோல் வாழ்கவென விரும்புகிறேன் ,நன்றி

   Delete
 10. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ,இந்த புதுவருடத்தில் எல்லா செல்வமும் நட்புடன் பல்லாண்டு வாழ்கவென தமிழ் சொல்லாண்டுபோல் வாழ்கவென விரும்புகிறேன் ,நன்றி

   Delete

 11. வணக்கம்!

  ஏழையென வாழ்ந்திடலாம்! என்னருமை நற்றோழா!
  கோழையென என்றும் குறுகாதே! - ஊழையெண்ணி
  நொந்து கிடக்காதே! வெந்து துவளாதே!
  முந்தி எழுந்தே முழங்கு!

  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு
  01.01.2013
  kambane2007@yahoo.fr

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் கவிஞரே
   நாளான புத்தாண்டு அன்றே
   நல்வார்த்தை சொன்னமைக்கு

   Delete
 12. ''..தோல்விக்கு பயந்து இருக்காதே
  தொடரும் கவலைகள் மறைந்தாலே
  தொட்டிடும் சிகரத்தை மனத்தாலே -அதனால்
  தொடங்கிடு மகிழ்ச்சியை மனதாலே..''

  இனிய நல்வாழ்த்துடன்
  இனிய புத்தாண்டு வாழ்த்து.
  என் வலைக்கு வர நல் வரவு!
  என்ன தயக்கம்!.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 13. //என் வலைக்கு வர நல் வரவு!
  என்ன தயக்கம்!.//
  நான் வெளியூர் சென்றிருந்ததால் கடந்த நாட்களில் வரவில்லை நிச்சயம் இனி வருவேன் நிழல்போல் தொடர்வேன்
  உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. எழுச்சியான வார்த்தைகள்.என் இனிய புது வருஷ வாழ்த்துகள் !

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more