Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் பதினெட்டில்.......3

பருவம் பதினெட்டில்................. ------------------------------------------ பாதியில் விட்டப் படிப்பை பட்டமேல் படிப்பில் சேர்ந்து போதிக்கும் கல்வி வேண்டி பொழுது சாய்ந்த நேரத்தில் மீதியும் படித்து முடிக்க மீசைதாடி துறக்க மறுத்து வீதிக்கும் வீட்டுக்கும் அலைந்து விதியென கருத்தாய் படித்தார் வயதில் நண்பரோ மூத்தவன் வாலிபம் முழுதாய் துறந்தவன் இதயத்தில் காதல் இன்னமும் இருப்பதை சொல்ல மறுப்பவன் படிப்பில் ஆர்வம் இருந்ததால் படிக்க மீண்டும் தொடர்ந்தார் அடிக்கடி மனதில் ஏதோ ஆசையும் கூடவே சேர்ந்தது ....... ....................(கவியாழி)................

திரு.சிங்கநெஞ்சம் சம்பந்தம் அவர்களுடன் சந்திப்பு

Image
                                                             இன்று  03.02.2019 ஞாயிறு  காலை 11 மணி அளவில் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் அடையார் பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றேன். அவரும் அவரது துணைவியாரும் முகமலர வரவேற்றார்கள்.கடற்கரை அருகில் இருந்ததால் நகரின் சத்தமின்றி அமைதியான வசிப்பிடத்தில் கணவன் மனைவி இருவரும் சிறிதுநேரம் அறிமுகம் செய்துகொண்டு இருவரின் பிறப்பிடம் ,படிப்பு,வாழ்விடம் குடும்பம் பற்றிய செய்தி பரிமாற்றங்களுடன் நான் அய்யா அவர்களை சந்திக்கும் நோக்கம் பற்றி எடுத்துரைத்தேன் அவரும் முகமலர்ந்து அவரது அனுபவத்தைக் கூறினார்.இந்திய அரசுபணியில் இருந்ததால் தான் பல ஊர்களுக்கு மாறிமாறி வந்ததாகவும் சென்னையிலேயே கடற்கரை அருகில் தனது வசிப்பிடத்தை விரும்பி அமைதுக்க் கொண்டதாகவும் கூறினார்கள்.         மேலும் அவர் தம் பணிசெய்த நாட்களில் நடந்த அனுபவங்களைப் பற்றியும் கடந்துவந்த நாட்களையும் அழகிய தமிழ் மொழியில்  அடிக்கடி திருக்குறள் உதாரணங்களை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்கள்.நான் அவரிடம் கற்கால மனிதர்களின்குணங்கள் வாழ்க்கைமுறையைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்.    

பருவம் பதினெட்டில்.....2

அழகிய முகமில்லை் யென்றாலும் அவளுள் மனதில் குழப்பம் செழுமையே எதிலும் இன்றி சினம்மட்டும் முகத்தில் தெரியும் தோழிகள் இருந்தும் தனியே துவண்டே தனிமை விருப்பம் நூலிழை போன்றதொரு சிரிப்பே நண்பிகள் பார்க்க கிடைக்கும் ஆலிலை கண்ணனாய் நினைப்போர் அருகிலே செல்லவும் தயக்கம் மேனியில் கைப்பட பேசும் மெய்யான உறவுகள் இல்லை வானிலே சிறகடிக்கும் வயதில் வாட்டமென்ன நோக்கமென்ன பூமியில் வாழும் உயிர்களும் புன்சிரிப்பை மறத்தல் தவறே... தொடரும்...... (கவியாழி)

பருவம் பதினெட்டில்.....

பருவம் பதினெட்டில் இருக்கும் பார்த்திட மனதை தேடும் உருவம் மனதில் உணர்த்தும் உதடுகள் கணியாய் சுவைக்கும் தனிமை அவளது விருப்பம் தவிப்புகள் மனத்தில் தஞ்சம் இனிமையாய் இருந்தது பார்வை இதழில் புன்னகை கொஞ்சம் அழகில் தெரிந்தது வசதி ஆனாலும் இல்லை மகிழ்ச்சி உறவில் ஏதோ குழப்பம் உள்ளத்தில் அதனால் வருத்தம் பழகிட தோழிகள் இருந்தும் பாவைக்கு தனிமையே விருப்பம் உளவியல் காரணம் தெரிய உற்றே நோக்கினான் ஒருவன்.... தொடரும்...... -----–-கவியாழி-----

பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே !

உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே ! கருவில் வளரும் சிசுவை அறிந்தும் கட்டளை விடுவார் கருவில் சிதைப்பார் உருவாய் வளர்ந்து  மகளாய்ப் பிறந்தால்- உடனே உயிரையும் எடுப்பார் உணர்வை  இழந்தே !! கடவுள் உருவாய் கருணை மழையாய் காலையும் மாலையும் பாலைத் தந்திடும் பசுவும் ஈன்றிடும் கடுவன் சிசுவைக்-கொல்வார் பாலை மட்டும் உணவாய்  கொண்டே !!! பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே பார்த்திடும் கண்கள் வேதனை கொண்டே சிசுவை கொல்லுதல் முறையாய் என்றே- மனதில் சிவனைக் கேட்கிறேன் கேள்வியாய் இன்றே !!!! ------- கவியாழி-------

கடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ?

கடவுளின் பெயரால் கையேந்தி நிற்பவனும் காடு கழனிகளில் சாதி வளர்ப்பவனும் உடமையை இழந்தவனிடம் ஊசி விற்க -இன்னும் ஊரையே கொளுத்தியும் உத்தமனாய் நடிக்கின்றான் சட்டிப் பானையில் சமைத்து வந்தாலும சாதியை வளத்துப்  பெருமைக் கொண்டாடி வெட்டிப் பேச்சால் வீதிக்கு வீதி-பிழைப்பாய் விற்கிறான் வேதனையை வளர்கிறான்  பொட்டிப் பாம்பாய் வளர்ந்த வனெல்லாம் பொறுமை கொண்டு படித்தவன் கூட புட்டி முழுதாய்க் குடித்துவிட்டு-சாதி பெருமைப் பேசிப்மடிந்தே சாகிறான் நீதி நேர்மை நிம்மதி தருமென நியாயம் தர்மம் சந்ததி விளக்கென போதியரசன் போற்றிய கொள்கையை-இன்று புரிந்தும் மறந்தும் வாழ்வது முறையா? --கவியாழி--

நண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா

Image
நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப்  பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்துக்குப்  எனது மகிழுந்தில்  புறப்பட்டு பகல் பன்னிரண்டு ஐம்பதுக்கு சேலம் சேர்ந்தேன். அங்கு எனக்காக காத்திருந்த நண்பர்களுடன் மூன்று மகிழுந்தில்  மொத்தம் பதினொருபேர் இன்ப உலாவாக  கோவை வழியாக பொள்ளாச்சி சென்றடைதோம்.இரவு நேரத்தில் மலையேற அனுமதி இல்லாததால் .இரவு பொள்ளாச்சியிலேயே தங்கி விட்டோம். அடுத்தநாள் காலை பதினோரு மணிக்கு மூன்று மகிழுந்துடன் இன்னொன்றும் சேர்ந்து மொத்தம் நாலுவதுமாய் சேர்ந்ததும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.அங்கு தின்பண்டங்கள் உணவு சமைக்க வேண்டிய பொருட்களுடன் மற்றும் சில இத்யாதிகளுடன் எல்லோரும் புறப்பட்டு சென்றோம்.வழியில் குரங்கு வீழ்ச்சி (monkey falls)செல்லாமென நினைத்து ஆழியாறு அணையைக் கடந்து சென்றால் அதிர்ச்சி?காரணம் தண்ணீர் இன்றி பரிதாபமாக குரங்குகளே வரிசையாய் பரிதாபமாய்இருந்தது. நாங்கள் எடுத்துச் சென்ற குடிநீர் பாட்டில்களிருந்து ஒன்றிரண்டை பகிர்ந்தளித்தோம். எமது குழுவிலிருந்த அத்தனை நண்பர்களின் ஒருமித்த உ

ரசித்தவர்கள்