இளமை இருப்பது சிலகாலம்
இளமை இருப்பது சிலகாலம் எளிதில் வசப்படும் வரும்காலம் கனவு கண்டிடு நிகழ்காலம்- கனிந்திடும் வெற்றி உன்கையில் எதிர்காலம் வெற்றியின் நிழலை தீண்டி விளையாடு வேகமாய் வந்திடும் உன் பின்னாடி ஒற்றுமை உள்ளுள் நினைத்து போற்றி-உண்மையாய் ஒருநாளும் மறவாமல் உழைத்திடு உயர்ந்திடு சொல்லுவர் பலர் சொன்னதை மறந்து வெல்லுவ தேன்றே வேதமாய் எண்ணி துள்ளி விளையாடு துவளாமல் ஓடிடு-முயன்று அள்ளி கரை சேர்ப்பாய் அறிவோடு பட்டங்கள் தேவை யில்லை படித்த சட்டங்கள் துணைகொண்டு வெல்ல கட்டங்கள் கடந்து கவலையும் மறந்து-உயரத்தை எட்டிவிடு எளிதில் வெற்றியை தொட்டுவிடு