தெய்வங்கள்

தெய்வங்கள்

திருவிழா தொடங்கியாச்சு


 


திருவிழா தொடங்கியாச்சு
தெருவெங்கும் கூட்டமாச்சு
உருமாறி  மனசெல்லாம்-அன்பான
 உண்மையாக  மாறியாச்சு

நவராத்திரி தொடங்கியதும்
நண்பர் இல்லம் பார்த்தாச்சி

நலம் கேட்டு சிரித்து-நட்பாக
நாளெல்லாம் மகிழ்ச்சியாச்சி

ஆயிரம் கஷ்டமானாலும்
அடுத்த மாசம் தீபாவளி
அடுக்கடுக்காய்  செலவுகள்-கடனும்
அருகில்வர முடிவாச்சி

சின்னவங்க பெரியவங்க
செலவு செய்ய உள்ளவங்க
சேர்ந்து பேசி முடிவாச்சி-சிக்கனமாய்
சொந்த பட்டியல் தேர்வாச்சி

வீட்டு  தலைவருக்கு
விலைவாசி கவலையாச்சி
வேண்டிய செலவு  விபரம்-மனதில்
வேகமாய் நாடி துடிச்சாச்சிComments

 1. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. nநன்றி ஐயா! நான் சொல்வது உண்மைதானே

   Delete
 2. இன்னும் திருவிழாக்கொண்டாட்டங்களை தொதுத்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நட்பே,இப்போதுதான் ஆரம்பம் இதுக்கு மேலதான் கொண்டாட்டமே

   Delete
 3. ஆரம்பமே அசத்தல். அசத்துங்க தோழரே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!
   வாழ்த்துங்கள் வாழ்கிறேன்

   Delete
 4. பண்டிகையும் செலவினமும் நேர்மாறல்தான்! நல்ல பதிவு!
  நன்றி!

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more