Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

தீண்டாத இரவுகள்.......

மழையும் அடிக்கடி  வருவதால் மனதும் துடிக்குது  தேடுது மாலை ஆவதும் முன்பே மயக்கமும் வருது  தொடருது காரமாய் சாப்பிடத் தோணுது காண்பதை யெல்லாம்  விரும்புது காற்றையும் மீறியே அனலாய் காத்தும் மூக்கிலே  வருகிறது சூரியன் பார்த்ததும் மறையுது சுகமாய் மறைந்தே போகுது சில்லுன்னு காத்தும் வீசுது சீக்கிரம் போர்த்திக்க ஏங்குது துணையும் தேடிடும் நேரத்தில் தூறலும் அவசரம் காட்டுது தொடரவே வேண்டுது  விரும்புது தொடக்கமே மகிழ்ச்சியாய் இருக்குது நறுமணம் வீசுது மணக்குது நரம்பெல்லாம் சூடும் ஏறுது நடுவிலே தூக்கம் கலைந்ததால் நடுநிசிக் கனவாய் முடிந்தது -----கவியாழி-----

இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

வனமும் வனப்பையும் இழந்தால் வனத்தின் நிறமும் மாறுமாம் வானமும் இயல்பை மாற்றியே வானத்தின் தன்மையும் கூடுமாம் எல்லா இடமும் வெளிச்சமாய் எங்கும்  வெய்யில் எரிக்குமாம் ஏரிக் குளமும் வற்றுமாம் எரிச்சல் அதிகம் இருக்குமாம் பொல்லா நிலையால் பலபேரோ பொசுங்கி மடிந்தே விழுவாராம் பொழுதும் கழிந்தால் மட்டுமே பொறுத்தே வெளியில் வருவாராம் இந்த நிலைக்குக் காரணம் இழந்த மரங்கள் அதிகமாம் இதையே நாமும் அறிந்தேனும் இனிமேல் மரங்கள் வளர்க்கணும் மழையும் நன்றாய் பெய்யுமாம் மரங்கள் அடர்ந்து வளருமாம் மக்கள் துயரம் நீங்கியே மக்கள் மனமும் குளிருமாம் வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய் வருடம் முழுக்க பெய்யுமாம் வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய் வானத்தைப் பெருக்கிக் காக்கணும் =====கவியாழி=====

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே.....

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே நாகரீகம் மறந்து சிரிப்பாரோ நாணயம் மறந்த பேச்சாலே நல்லவர் மனதை வதைப்பாரோ அறிவும் மழுங்கி இளிப்பாரோ ஆடைத் துறந்து  இழப்பாரோ அடுத்தவர் மனத்தைக் கெடுப்பாரோ அடிமை மதுவால் ஆவாரோ குடியால் மென்மை துறப்பாரோ குடும்பம் இழக்க நினைப்பாரோ குழந்தை பெறவே மறுப்பாரோ குணத்தை இழந்து தவிப்பாரோ பெருமை அடைந்து மகிழ்வாரோ பணத்தை அழித்து திரிவாரோ பெண்ணின் சாபம் பெறுவாரோ பொய்யாய் வாழ்க்கை வாழ்வாரோ மிகுந்த குடியால் குடும்பமே மேன்மை இழந்தும் தவிக்குமே மற்றோர் மனதும் வருந்தியே மனிதனை சிரிக்க வைக்குமே இல்லறம்  அழிய  காரணம் இதையேன் மகிழ்வாய் நினைக்கனும் இனியும் சிலநாள் தவிர்க்கனும் இனிமை வாழ்வும் தொடரனும் ===கவியாழி===

மகிழ்ச்சியைத் துறப்பவள்

இளமைக் காலம் முதலே இளையவர் நன்கே வளர இன்முகம் காட்டி சிரித்தவள் இளமை மறந்து வாழ்ந்தவள் விடைலை வயதில் நின்றவள் வீதியில் வீம்பாய் நடந்தவள் வேடிக்கைப் பார்த்துச் சென்றவள் வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள் குடும்பம் தொடங்கி வைப்பவள் குழந்தை சிலதைப் பெற்றவள் குறும்புத் தனத்தை மறந்தவள் குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள் சோதனைக் காலம் கண்டவள் துணையுடன்  மகிழ்ந்து வாழபவள் துயரம் மிகுந்தும் நகைப்பவள் தூய்மை  அன்பைக் கொடுப்பவள் ஆக்கம் கொடுத்த தாய் அவள்தான் எனது சகோதரி அன்பாய் இருக்கும் மனைவி அடுத்தது எனது மகளே ******கவியாழி*******

வெற்றி பெறவே துடிக்குது..............

நேற்றைய வாழ்க்கை முடிந்தது நேரமும் காலமும் கழிந்தது நிம்மதி சிலநாள் கிடைத்தது நேர்மையாய் உணர முடிந்தது பார்ப்பவர் எண்ணம் புரிந்தது பாதையும் தெளிவாய் தெரிந்தது பகலும் இரவும் போலவே பசுமை வெறுமை கடந்தது இன்றைய நாளில்  நடப்பது இன்பம் விரும்பி வாழ்வது இளமை  வெறுமை இழந்தது இனிமை வாழ்க்கை ஏங்குது துன்பம் மெல்ல விலகுது துயரம் தாண்டி செல்லுது தூயநல்  நட்பும் தொடருது துணையாய்  அருகில் வாழுது நாளைய ஏக்கம் தொடருது நல்லதும் கெட்டதும் தெரியுது நாணயம் என்னுள் இருப்பதால் நன்மையும் தீமையும் தெளிந்தது வேதனை சிலதும் மறைந்தது வெளிச்சமும்  அதனால் வந்தது வேண்டி  விரும்பி  மனதுமே வெற்றி பெறவே  துடிக்குது -----கவியாழி------

அம்மா கடவுள் சரஸ்வதியே

அம்மா கடவுள் சரஸ்வதியே அகிலம் போற்றும் குணவதியே எல்லா குழந்தையும் கற்றிடவே என்றும் கொடுப்பீர் அருள்மழையே இல்லா பிள்ளையும் கற்றிடவே இலவசக் கல்வியை கொடுப்பவர்க்கும் பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும் பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும் சொல்லில் கடுமையாய்  இருப்போர்க்கும் சொல்லித் தந்தே மகிழ்பவர்க்கும் நல்ல ஒழுக்கமும் நன்னடத்தை நாளும் கற்பிக்கும் ஆசிரியருக்கும் செல்வம் சேர்க்கா பணியாக செலவில்லாமல் தினம் கற்பிக்கும் சொல்லில் சிறந்த சீமான்கள் செய்யும் பணியும்  சிறந்திடவே அன்பும் அறிவும் பெருகிடவே அனைவரும் போற்றும் கல்விக்கு அம்மாதாயே அருள் கொடுத்தால் ஆயுள் முழுக்க வணங்கிடுவேன் ----கவியாழி----

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே அன்பில் என்னுள் ஆள்பவரே அழைத்தால் தினமும் மகிழ்பவரே ஆறாம் எண்ணில் அழைப்பவரே அன்பில் சளைத்தவர்  உங்களைபோல் அருகில் எனக்கு இல்லையே அதனால் எனக்கும் லாபமே அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன் எல்லா  நண்பரும்  மகிழ்வாக எண்ணி இருந்திட நினைப்பவரே சொல்லால்  தவறை சுட்டியே சிறப்பாய் இருந்திடச் செய்பவரே என்மேல் என்ன கோபமைய்யா எதற்கு அப்படிக் கடிந்தீரோ என்னை விடவா உங்களுக்கு ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு பொல்லா கோபம் இல்லையே பொசுக்கி என்னைக் கொல்லவே எல்லா நாளும் இப்படியே என்னிடம் திட்டி வதைக்காதீர் --கவியாழி--

ரசித்தவர்கள்