தெய்வங்கள்

தெய்வங்கள்

அம்மா கடவுள் சரஸ்வதியே

அம்மா கடவுள் சரஸ்வதியே
அகிலம் போற்றும் குணவதியே
எல்லா குழந்தையும் கற்றிடவே
என்றும் கொடுப்பீர் அருள்மழையே

இல்லா பிள்ளையும் கற்றிடவே
இலவசக் கல்வியை கொடுப்பவர்க்கும்
பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும்
பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும்

சொல்லில் கடுமையாய்  இருப்போர்க்கும்
சொல்லித் தந்தே மகிழ்பவர்க்கும்
நல்ல ஒழுக்கமும் நன்னடத்தை
நாளும் கற்பிக்கும் ஆசிரியருக்கும்

செல்வம் சேர்க்கா பணியாக
செலவில்லாமல் தினம் கற்பிக்கும்
சொல்லில் சிறந்த சீமான்கள்
செய்யும் பணியும்  சிறந்திடவே

அன்பும் அறிவும் பெருகிடவே
அனைவரும் போற்றும் கல்விக்கு
அம்மாதாயே அருள் கொடுத்தால்
ஆயுள் முழுக்க வணங்கிடுவேன்

----கவியாழி----

Comments

 1. வண்
  ஐயா
  அன்பும் அறிவும் பெருகிடவே
  அனைவரும் போற்றும் கல்விக்கு
  அம்மாதாயே அருள் கொடுத்தால்
  ஆயுள் முழுக்க வணங்கிடுவேன்

  அம்மா கடவுள் சரஸ்வதியே கவிதை அருமை எல்லோருக்கும் அருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 2. அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 3. வணங்குகிறேன்.. சரஸ்வதியை..

  ReplyDelete
 4. அழகான பாடல்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 5. விஜயதசமிக்கு சிறப்பு கவிதையா!? ரைட்டு

  ReplyDelete
 6. "அருள் கொடுத்தால் (தான்) ...வணங்குவேன்" என்று கடவுளுக்கே கண்டிஷன் போடுவது, உமது செல்வாக்கைக் காட்டுகிறதோ? பெரிய ஆளய்யா நீர்!

  ReplyDelete
  Replies
  1. இல்லை ஏமாற்றத்தை சொல்லுகிறேன்

   Delete
 7. பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும்
  பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும்
  சொல்லில் கடுமையாய் இருப்போர்க்கும்
  அம்மாதாயே அருள் கொடுத்தால்
  ஆயுள் முழுக்க வணங்கிடுவேன்//

  இவர்களுக்கும் கொடுத்ததால்தானே
  இவ்வளவு பிரச்சனையும் இல்லையா ?

  ReplyDelete
  Replies
  1. கொடுக்கா விட்டால்தான் பிரச்சனையே

   Delete
 8. வாணி சரஸ்வதியின் நல்லருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்!

  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 9. நன்று..எல்லாருக்குமே கல்விக்காக வேண்டிக்கொண்டீர்கள் .

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் வருகைக்கு நன்றி

   Delete
 10. கலைமகள் துதி அருமை! நன்றி!

  ReplyDelete
 11. அன்பும் அறிவும் பெருகிடவே
  அனைவரும் போற்றும் கல்விக்கு
  அம்மாதாயே அருள் கொடுத்தால்
  ஆயுள் முழுக்க வணங்கிடுவேன்//

  அருமையான கவிதை.
  கலைவாணி அனைவருக்கும் அருள் புரிவாள்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் எல்லோருக்குமே கிடைக்கட்டும்

   Delete
 12. அன்பும் அறிவும் பெருகிடவே
  அனைவரும் போற்றும் கல்விக்கு
  அம்மாதாயே அருள் கொடுத்தால்
  ஆயுள் முழுக்க வணங்கிடுவேன்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானே அய்யா தவறில்லையே

   Delete

 13. செல்வம் சேர்க்கா பணியாக
  செலவில்லாமல் தினம் கற்பிக்கும்
  சொல்லில் சிறந்த சீமான்கள்
  செய்யும் பணியும் சிறந்திடவே

  நன்று!

  ReplyDelete
 14. அருமையான கவிதை...
  சரஸ்வதி தாயின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

  ReplyDelete
 15. வெண்தாமரை அமரும்
  சாரதா தேவிக்கு அருமையான வாழ்த்தும்
  அழகான வேண்டுதலும் அடங்கிய
  நல்ல பாமாலை பாவலரே.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க மகேந்திரன்

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more