தெய்வங்கள்

தெய்வங்கள்

இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

வனமும் வனப்பையும் இழந்தால்
வனத்தின் நிறமும் மாறுமாம்
வானமும் இயல்பை மாற்றியே
வானத்தின் தன்மையும் கூடுமாம்

எல்லா இடமும் வெளிச்சமாய்
எங்கும்  வெய்யில் எரிக்குமாம்
ஏரிக் குளமும் வற்றுமாம்
எரிச்சல் அதிகம் இருக்குமாம்

பொல்லா நிலையால் பலபேரோ
பொசுங்கி மடிந்தே விழுவாராம்
பொழுதும் கழிந்தால் மட்டுமே
பொறுத்தே வெளியில் வருவாராம்

இந்த நிலைக்குக் காரணம்
இழந்த மரங்கள் அதிகமாம்
இதையே நாமும் அறிந்தேனும்
இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

மழையும் நன்றாய் பெய்யுமாம்
மரங்கள் அடர்ந்து வளருமாம்
மக்கள் துயரம் நீங்கியே
மக்கள் மனமும் குளிருமாம்

வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய்
வருடம் முழுக்க பெய்யுமாம்
வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய்
வானத்தைப் பெருக்கிக் காக்கணும்


=====கவியாழி=====Comments

 1. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்னு முன்பு பஸ்ஸில் எழுதி வைத்திருந்தார்கள்....

  நம்மாளுங்க இருந்ததையும் வெட்டி சாச்சிட்டானுங்க.

  ReplyDelete
  Replies
  1. இனிமேலும் வளர்க்க வேண்டியே வற்புறுத்துவோம்

   Delete
 2. இந்த பூமியை அழிவிலிருந்து காக்க ஆயுதங்களை அல்ல மரங்களையே அதிகப்படுத்த வேண்டும் என்ற நிலையை மனிதன் உணர்ந்தால் தான் இதற்கு விடிவு...

  மரம் வளர்ப்போம்....

  நல்லதொரு கவிதை

  ReplyDelete
  Replies
  1. ஆம்.மரங்களை அதிகப்படுத்த வேண்டும்

   Delete
 3. அனைவரும் உணர வேண்டியது ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 4. மழையும் நன்றாய் பெய்யுமாம்
  மரங்கள் அடர்ந்து வளருமாம்
  மக்கள் துயரம் நீங்கியே
  மக்கள் மனமும் குளிருமாம்

  குளிர்ச்சியான பகிவுகள்..!

  ReplyDelete
  Replies
  1. மரங்கள் வளர்த்தால் மகிழ்ச்சியாயும் இருக்கும்

   Delete
 5. இனியேனும் விழிப்போம்...
  இனிதாய் ஒரு மரமேனும் வளர்ப்போம்...

  ReplyDelete
  Replies
  1. ஆம். நண்பரே இன்னும் விழிப்புணர்வு வேண்டும்

   Delete
 6. தேவையான கருத்துடன் கூடிய கவிதை வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 7. நல்லதொரு விழிப்புணர்வு கவிதை!

  ReplyDelete
 8. ''..இந்த நிலைக்குக் காரணம்
  இழந்த மரங்கள் அதிகமாம்
  இதையே நாமும் அறிந்தேனும்
  இனிமேல் மரங்கள் வளர்க்கணும்...''
  ஆம்.... வளர்ப்போம்...!
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 9. மரம் வளர்ப்போம் என்ற கவிஞரின் குரலுக்கு அனைவரும் செவி சாய்ப்போம்.

  ReplyDelete
 10. வானத்தைப் பெருக்கிக் காக்கணும்// உண்மை..

  ReplyDelete
  Replies
  1. வனத்தையும் காக்கணும்

   Delete
 11. இன்றைய நிலையில்
  தேவையான கருத்து
  சொல்லிப்போனவிதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 12. //
  இந்த நிலைக்குக் காரணம்
  இழந்த மரங்கள் அதிகமாம்
  இதையே நாமும் அறிந்தேனும்
  இனிமேல் மரங்கள் வளர்க்கணும்//

  ரசித்த வரிகள்!

  ReplyDelete
 13. வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய்
  வருடம் முழுக்க பெய்யுமாம்
  வாழ்வில் இதையே மகிழ்ச்சியாய்
  வானத்தைப் பெருக்கிக் காக்கணும்//
  அருமையான வரிகள்.
  மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்.
  நல்ல விழிப்புணர்வு கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 14. வனம் பெருகினால் வானம் பொழியும்! அருமையான கவிதை! நன்றி

  ReplyDelete
 15. நல்லதொரு சிந்தனை அய்யா. வனங்கள் பெருக்கினால் வானம் பொழியும் என்ற கருத்தை கவிதையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 16. கவிதை சொல்லும் கரு... மரம் வளர்ப்போம்...
  அருமையான கவிதை ஐயா....

  ReplyDelete
 17. அருமை ஐயா.
  மரம் இருக்கும் வரைதான்
  மனிதன் இருப்பான்
  இந்த உண்மையை மறந்து விட்டோம்

  ReplyDelete
  Replies
  1. இனியேனும் விழித்துக் கொள்வோம்

   Delete
 18. மரம வளர்க்க சொல்லும் கவிதை அருமை

  ReplyDelete
 19. நல்ல கருத்து. மணல் சுரண்டி ஆற்றைக் கற்பழிப்பவர்கள் பற்றி ஒரு கவிதை ப்ளீஸ்...

  ReplyDelete
 20. பசுமை புரட்சி பஸ்ஸில்
  இலைகள் காயாமல் பஸ்ஸை இருமுறை கழுவி இலைகளுக்கு நீர் பாய்ச்சுவார்கள்
  ஆடு மாடுகளும் பஸ்ஸை கண்டு ஓடி வரும் இலைகளைக் கண்டு

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more