Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

முதுமையில் இளமை ......

பாகம் இரண்டு ...  ...................................ஆம்  நான் வழக்குரைஞராக  பணியாற்ற  விரும்பும் நோக்கில்  சென்னை உயர்நீதி மன்றம் சென்றேன் .அளவற்ற ஆசைகளுடன்  நேரம் போவது தெரியாது நிறைய பேரைச் சந்திக்கலாம் ,உரையாடலாம், என்று பெரும் கனவுகளுடன்  சென்றேன்.ஆனால் முதலில் ஏமாற்றம் போலவே தெரிந்தது. நான் மாலை நேர வகுப்பில் {சேர்ந்து படித்ததினால் என்னுடன் படித்த யாரேனும் வருவார்களா என்று தேடினேன் தேடினேன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் நான் வசிக்குமிடத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து மைல் தொலைவில் இருப்பதால் நேரடியாக செல்வதில் சிரமம் இருந்தது.முன்பெல்லாம் பணி ஓய்வுப்பெறுவதுக்குமுன் எங்கு சென்றாலும் மகிழுந்துதான் செல்வதற்கு வசதியாக இருந்தது. இன்று நிலைமையே வேறு. இருச்சகக்கர  வாகனத்தில் சென்று அங்கிருந்து நகர்புற  தொடர்வண்டியில் செல்லும் நிலைக்கு ஆளானேன். அங்கிருந்து சிறிது நேரம் நடந்து செல்லவேண்டும் ஏனோ தெரியவில்லை என்னக்குள் இருந்த ஆணவம் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற அசட்டு தைரியம் எல்லாமே சுக்கு நூறாகிவிட்டது. காரணம் என்னைபோலவே  நிறைய பேர் ஏறக்குறைய ஒரு லட்சம் செலவு செய்து  பதிவு செய்து வ

முதுமையில் இளமை

 முதுமையில் இளமை ஆம்! உணரமுடிகிறது. நான் ஓய்வுபெற்று ஓராண்டு முடியவிருக்கிறது இப்போதே மனம் வலிக்கிறது .எனக்கு மட்டுமா அல்லது எல்லா ஓய்வு பெற்ற பெரும்பாலான மக்களுமே இப்படியா என்று எனக்குள் ஒரு கேள்வி   கருவாகி விட்டது. இனம்புரியாத இழப்பு என்றுதான் சொல்லுவேன். நான் பணியில் இருந்தபோது எல்லாமே சரியான நேரத்தில் நடந்தது.காலையில் நடைபயிற்சி  பின் செய்திகள் கேட்பது அடுத்து நாளிதழ் வாசிப்பு என்று ஒவ்வொன்றும் சரியாகத்தான் நடந்தது.நான் எப்போதும அலுவலக பணியாளர் வரும் முன்பே சென்றுவிடுவேன்.பெரும்பாலான  பணியாளர்கள் உங்களுக்கென்ன அய்யா மகிழுந்தில் வந்துவிடுவீர்கள் என்று என்னையே குத்திக்காட்டுவார்கள் {தாமதிற்கான காரணத்தை சொல்ல மாட்டார்கள் ) இன்றும் முயற்சிக்கிறேன் முடியவில்லை .காரணம் வெறுமை ? நாம் நல்ல துடிப்புந்தானே பணியாற்றினோம் இப்போது ஏன் நம்மால் முடியவில்லை என்று என்னும் கேள்வி கேட்டே நேரம் கடந்து செல்கிறது .ஆனாலும் உள்மனது  அடிக்கடி சொல்லும் வார்த்தை உன்னால் முடியும் வெளியே சென்று வா எதையாவது தேடு தேடிக்கொண்டே இரு.வெளியே செல்ல முடியாததன்  காரணத்தைத் தவிர  என்னோடு பணிபுரிந்த நண்பர்களிடம் சொல்லுவே

பருவம் பதினெட்டுடில்.......9

பருவம் பதினெட்டில் ........9 ----------------------------------------- பூவிதழ் பற்றிட துடிக்கும் புன்னகை மறந்திட்டு பருகும் மேனியில் கைத்தடம் பதித்தால் மேகலை கிங்கிணி யாகும் தேயிலைத் தோட்டத்தின் அருகில் தேனடை பார்த்திட்ட நொடியில் மாவிலைத் தோரணம் மறந்தே மனமிடத் தோன்றிடும் அழகே பாமகள் வரிகள் அழகாய் படித்திட நிதமும் பிடிக்கும் பூமகள் அழகை நினைத்தே பூத்திடும் கைகளும் சிலிர்த்தே யாரிவள் தேரோ சிலையோ யாசகம் துறந்த தமிழோ போரிடும் நிலையில் வீரம் பொசுங்கி உரமாய் போகும்.......10 கவியாழி.கண்ணதாசன் 

குழுவாய் உழைப்போம் நிலத்தில்....

 குழுவாய் உழைப்போம் நிலத்தில் ..... ------------------------------------------------------- கேள்விகள் ஆயிரம் கேட்கலாம் கேட்டதை மாற்றிக் கூறலாம் வேள்விகள் நிறைய செய்யலாம்-மன வேதனை தீர்க்க முடியுமா போலிகள் வாழ்க்கையை மாற்றலாம் போதையில் வாழ்க்கையை மறக்கலாம் வேலியே பயிரை மேய்வதால்- கொடும் வேதனை எங்கே சொல்வது காலையில் எழுந்ததும் பூசைகள் கடவுளைப் பார்கவும் ஆசைகள் வேலைக்கு மாத்திரை போடாமல்-வயிற்றுக்கு விருப்பமாய் உணவு செல்லுமா ஆதிக்கத் திமிரில் வாழ்பவன் ஆசையாய் உறங்க முடியுமா போதிக்க மறுத்த தலைவனை -இன்று புறம்பான பேச முடியுமா நீதிக்கதைகள் யாவையும் இன்றும் நிலையாய் நிற்கக் காரணம் ஆதித் தமிழனின்  பெருமையே-உணர்ந்து ஆணவம் மறந்து வாழுவோம் தேடிப் பிழைப்பதை மறந்து தோழமை உறவும் மகிழ்ந்து கூடி வாழ்வோம் ஊரில்-விரும்பி குழுவாய் உழைப்போம் நிலத்தில்... கவியாழி.கண்ணதாசன்

இயற்கையான நட்பு மாறாது

இயற்கையின் கொடையாய் மழை எப்பொழுதோ புயலாக பொழிந்தாலும் இனிமையாய் மனதில் மகிழும் எங்கெங்கும் பசுமை சிரிக்கும் செயற்கையாய் மழையே வந்தால் சிலருக்கு மட்டுமே தெரியுமாம் செழுமை மறந்து வருத்தமாய் சினமாய் பசுமை மறையுமாம் பயிற்சியால் மகிழ்ச்சியை நாளும் பகிர்ந்திடும் முயற்சியை யாரும் பணத்தினால் உணர்த்திட முடியாது பாசமும் அதனால் வளராது முன்னாள் பள்ளி நிழ்வுகள் முதுமையிலும் தொடரும் வளரும் பள்ளியில் படித்த நினைவும் பசுமையாய் மனதில் உலவும் கவியாழி. கண்ணதாசன் 01.12.2020.சென்னை

அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க !

Image
பச்சை இலைகளோடோரு பழுத்த யிலை பாதிகாய்ந்ததோர் பளுக்கா யிலை மிச்ச இலைகளெல்லாம் மேலே னோக்க மீதியிரண்டு மேன் கீழே நோக்கி ? உச்சமடைந்து உயிரைபோக்க கீழே உதிரக் காக்கும் நோக்கம் ஏனோ அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க-பிறகு அதுவும் கருகி உரமாய்ப்போகும் மிச்சம் மீதி வாழும் நாட்கள தற்கு மீண்டும் கதிரவன் துணையே வேண்டாம் துச்சமில்லையென துடித்து விழாமல்-மரத்தில் தொங்கிக் கொண்டே விழுந்தே காயும் இயற்கை வழியில் இச்சைத் தீர்த்து இலைகள் போல மனிதன் வாழ்வும் சொற்ப நாட்கள் உலகில் உலவி-இறப்பு சோகமின்றி நல் நினைவாய் முடியும் .........கவியாழி.கண்ணதாசன்......           சென்னை.27.08.2020

தினமொறு நாடகம் உலகில் தோன்றும்.....

அறிவைத் திருடும் கூட்டம் எங்கும் அகிலம் முழுக்க போடும் ஆட்டம் பிரிவைத் தூண்டி உழைப்பைத் திருடி பேயயைப் போல பிழைப்பாய் வாழும் உறவாய் பழகி உணர்வைத் தூண்டி உரிமைக் காட்டி ஊர்ந்து செல்லும் உடையோர் இருக்க ஒளிந்தே வாழும் உலக மெங்கும் பயந்தே ஓடும் பிழையாய் தடத்தை பதியம் போட்டே பேதைமை மறந்தே நட்பாய் பேசும் விளையும் பயிரில் நஞ்சை வளர்த்து வேதனையோடும்  வீரத்தை காட்டும் தீயதை விதைத்து தீமையைப் பெருக்கித் தேடுவோர் கைகளில் விலங்கை மாட்டும் தீர்வினை காண மக்களைக் கொன்று தினமொறு நாடகம் உலகில் தோன்றும் வளமைச் சொல்லி வளங்களைத் திருடி வையகம் முழுதும் பசியைப் போக்கும் பிழையை அறிந்தும் புத்தரைப்போல பேசும் வார்த்தை ஆயிரம் சொல்லும் செழுமை இல்லா முகத்தைக் காட்டி செயலில் மட்டும் வீரத்தைக் காட்டும் சேர்ந்தே பலரும் திருப்பி அடித்தால் சோதனை என்றே விரைந்து ஓடும் .........கவியாழி கண்ணதாசன்......           சென்னை.......22.08.2020

ரசித்தவர்கள்