Posts

Showing posts from 2012

தெய்வங்கள்

தெய்வங்கள்

கோழையாக வாழ்ந்திடாதே

Image
 கோழையாக வாழ்ந்திடாதே     கோழையாக வாழ்ந்திடாதே எந்த கொடுமைக்கும் நீ பயந்திடாதே ஏழைக்கும் கோபமுண்டு -என்பதை யாரிடமும் மறந்தும் காட்டிடாதே பேச்சிலே  பணிவாக இருந்தாலே பீதியில் நடுங்கிடுவார் பார்த்தாலே பிறப்பை ஏங்கி தவிக்காதே-வாழ்க்கை பெருகிடும் உனது உழைப்பாலே நேர்மையய் என்றும் மறக்காதே நெஞ்சிலே துணிவை இழக்காதே வஞ்சனையின்றி உழைத்தாலே -வாழ்க்கை விஞ்சிடும் உனது அறத்தாலே வசதியானவன் வாழ்வெல்லாம் நன்கு வாழ்வதாய் மட்டும் எண்ணிவிடாதே வாய் நிறைய சிரிப்பதாலே-அவன் வாழ்கையை பெரிதாய்  நினைக்காதே தோல்விக்கு பயந்து இருக்காதே தொடரும் கவலைகள் மறைந்தாலே தொட்டிடும் சிகரத்தை மனத்தாலே -அதனால் தொடங்கிடு மகிழ்ச்சியை மனதாலே 2013-இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

எதுகையே?மோனையே ?

Image
 எதுகையே மோனையே    (நன்றியுடன்) எதுகையே மோனையே என்னுயிர்ப் பேழையே தென்றலே தீண்டிடும் திருமேனிக் காரிகையே உன்னிடம் அடைக்கலம் உள்ளத்தில்  சங்கமிக்க என்விழியில் மின்சாரம் ஏற்றியது ஏனடியே அச்சாரம் போட்டதாலே அவசரமாய் தோன்றியதோ வித்தாரம் பேசவந்து விளையாட்டை தேடுவதேன் தென்னாட்டு மங்கையே தேரோடும் கங்கையே உன்வீட்டு முற்றத்தில் உன்னருகே வந்திடுவேன் ஊரெல்லாம் உறங்கியதும் உன்மடியில் தவமிருப்பேன் காணாது கண்டதை மீண்டும் கண்டெடுத்து மூழ்கிடுவேன் ஊர்கூடி ஒன்றினைத்து உன்னையே மணமுடிப்பேன் தேர்கூடும் சொந்தங்கள் தெருவெல்லாம் வாழ்த்திடவே

பழமொழிகள்-இறைக்கிற கிணறுதான் சுரக்கும்

இறைக்கிற கிணறுதான் சு ரக்கும்        "கிணற்றில் நீர் இறைக்க இறைக்க மீண்டு தண்ணீர் ஊறுகிறதோ அது போல நாம் அடுத்தவருக்கு உதவி செய்ய செய்ய நமக்கு கிடைக்கும் என்று அர்த்தம் "         எங்கப்பா அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை இது ,ரொம்பநாளா எனக்கு இதை பத்தி தெரியவே இல்லை ஏதோ பழமொழி சொல்லுகிறார் எனவும் பொழுது போக்கா சொல்லுகிறார் என்று நினைச்சிருந்தேன்         ஒருமுறை எனக்குசெலவுக்கு காசில்லை அப்போ நான் ஏன்ப்பா இருக்கறப்ப நான் எல்லாத்துக்கும் கொடுக்கிறேன் இப்ப காசில்லாமல் இருக்கும் இந்த நேரத்திலும் என்னை பணம் கெட்டு தொந்தரவு பண்றாங்க எனக்கு இருக்கிற கஷ்டத்தை விட அவங்களுக்கு கொடுக்க முடியவில்லையே என நினைக்கும் போது எனக்கு வருத்தமாய் உள்ளது என்றேன்          ஒரு இரண்டு மணிநேரம் என்னையும் என்னுடைய மன நிலையையும் கவனிச்ச அவர் , என்னை கூப்பிட்டார்  நான் அருகில் சென்று அமர்ந்தேன் அப்போ "இத்தனை நாளா  கையில இருக்கும்போது எல்லோருக்கும் நீ கொடுத்த அப்ப எல்லோரும் சந்தோசமா வாங்கினாங்க அதைத்தான் இப்பவும் உன்கிட்ட எதிர்பாக்கிறாங்க",தப்பு உன்னுதும் இல்லை அவங்கமேல குறை சொல்லவும் முடியா

தமிழக விவசாயின் வாழ்வு

Image
  தமிழக விவசாயின் வாழ்வு   ஊரெல்லாம்  ஓடுகிண்ற தண்ணீரை ஒருவருக்கும் கொடுக்காமல் அவர் வாடுகின்ற விவசாயி வாழ்வை-பாராமல் தேடுகின்றார் பாவம் நாடுகின்றார் பயிர்கள்  கருகி அழிந்தாலும் உயிர்கள் மடிந்து வீழ்ந்தாலும் உருகி கெஞ்சி கேட்டாலும்-உளறல் உண்மை என்றே உறைக்கின்றார்   பழகி  பேசி வாழ்ந்தாலும் பாவம் மக்கள் என்ன செய்வர் அழகில்லாத அரசியலால் தினம்-அரசும் அறிக்கையே  அறமாய் எண்ணுகின்றார் உழவில்லாத  நாட்களுக்கு ஊதியமாம் இழந்த  பயிருக்கு  இழப்பீடாம் மறைந்த உழவனின்  உயிரை-வாழ்வை மறுபடியும் மீட்டு யார் தருவார் ஒற்றை பயிரை வளர்ப்பதனால் உழைப்பும் வீணாய் போகிறதே பற்றை துறந்து பணமும்-வீணாய் பயிரும் கருகி சாகிறதே இச்செயல்  மறந்து இனிமேலும் இதர பயிரை வளர்த்திட்டால் இன்னல் இன்றி இருந்திடலாம்-இனிமேல் இயைந்து பயிரிட  தொடங்கிடுங்கள்

தேனடை நிறமோ?

தேனடை நிறமோ தித்திக்கும் சுவையோ நானருகில்  பார்த்ததுமே நாணமென்ன சுந்தரியே நீ அருகில் வந்ததுமே நீரூற்றாய் ஆனதேனோ திரவியமே  தேனமுதே திகட்டாத நற்சுவையே பூதொடுத்த மாலையிட்டு புதுத்தாலி  பின்னலிட்டு ஊர் உறங்கும் வேளையிலே உன்னையே சொந்தமாக்குவேன் காத்திருந்து  பார்த்திருந்து காத்திட்ட கடவுள் முன்னே ஊர்திரண்டு வாழ்த்திடவே உன்னையே மணம் முடிப்பேன் உனக்கு என்னை தந்திடுவேன் உன்னுயிரோடு கலந்திடுவேன்

இசைஞானி இளையராஜாவுக்கு விருது

Image
         நாமெல்லாம் பெருமை கொள்ள வேண்டிய சந்தோசமான செய்தி ,நாளும் தமிழ் பாடல்களை கேட்க விரும்பும் எல்லோருக்குமே இந்த செய்தி இனிமையாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை ,அவருக்கு எத்தனையோ விருதுகள் வழங்கி இருந்தாலும் இந்த விருது அவரை மேலும் பெருமை படுத்து என்பதில் தமிழராகிய நாமும் பெருமை கொள்வோம்          இசைஞானி' இளையராஜாவுக்கு 2012ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட இருக்கிறது.பல மொழிகளில் இசைத்து பாடியும் இசைத் துறையில் அவரது படைப்புத் திறன், புதுமையான முயற்சியில் வெற்றி பெற்றது ஆகிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரத்தினால் ஆன பாராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டு, அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு கெüரவம் வழங்கப்படும்.        நாமும் மகிழ்ச்சி கொள்வோம்  கொண்டாடுவோம்

பழமொழிகள் -பருவத்தே பயிர்செய்

                  பருவத்தே பயிர்செய்            "  பருவத்தே பயிர் செய்"  என்ற பழமொழி எல்லோருக்குமே தெரிந்தது. ஆனால்  எதற்க்காக யாருக்காக சொன்னார்கள் என்பது எல்லோருக்குமே தெரியாது ,குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு புரியாது. இன்றைய இளைய தலைமுறைக்காக நான் சொல்ல விரும்புகிறேன்.                             பட்ட  படிப்பை  முடிக்கும் முன்னே நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால்  கல்லூரிக்கே வந்து  நேர்காணல் நடத்தி தயார் செய்து பணிக்கான உத்தரவும் தந்து விடுகிறார்கள்  கல்லூரி படிப்பு முடிந்ததும் உரிய பயிற்சி கொடுத்து பணியமர்த்தி பயிற்சியுடன் ஊக்க தொகையும் கொடுக்கிறார்கள் .                             இன்று பெருபாலான இளைய தலைமுறையினர் நல்ல வேலையில் நல்ல சம்பளத்துடன்  வாழ்க்கையை தொடங்குகிறார்கள்,வீட்டிடருகே வந்து மகிழுந்து  பேருந்து  போன்றவற்றில் குழுவாக  அழைத்து செல்கிறார்கள் அதுபோலவே மீண்டும் இறக்கி விடுகிறார்கள் .அங்கேயே சாப்பாடு தேநீர் போன்ற சலுகைகளும் உண்டு .இதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்களில் கிடைக்கிறது. சிலர் சொந்த வாகனத்தில் மகிழுந்து, இருசக்கர வாகனம் போன்றவற்றில் சென்று வர

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா? கயவர்கள் நிம்மதியாய் காசு பார்க்க விடுவானா? திருடன்  துரோகிஎல்லாம் தைரியாமாய் திரிவானா? காசு பணத்திற்காக கள்ள தொழில் செய்வானா? இல்லாதவன் ஏங்குகிறான் இருப்பவனோ  பதுக்குகிறான் உள்ளதை சொல்பவன் உயர்வின்றி தவிக்கிறான் நல்லவனாய் இருப்பவன் நாளும்  மனதால்இறக்கிறான் பொல்லாங்கு சொல்பவன் புகழோடு இருக்கிறான் உனக்காக செய்வதை ஏழைக்கு கொடுக்கசொல்! உயர்வாக உன்னிடம் ஒழுக்கத்தை பயிலசொல்! தனக்காக உள்ளதுபோக தருமம் செய்யச்சொல்! மனித நேயம்  மறக்காமல் மனிதனை இருக்கசொல்! மனிதனாக இருக்க மனிதாபிமானம் மதிக்கசொல்! பெற்றோரை,மற்றோரை மாண்புடனே மதிக்கசொல்! தனியொழுக்கம் கற்றுதந்த ஆசிரியரை மதிக்கசொல்!!! (கவியாழி)

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு   அகிலமும் உனைநோக்க நேர்நிறுத்து சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில் யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் ! உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும் உன் கணக்கு என்னவென்று   உன்னுடலில்   வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக கண்ணுள் காட்டிடும்   கனியாக  தெரிந்திடும்! மெய்யும்   பொய்யும் மேனியு   ளதில்லை மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை சொல்லும்   செயலும்   சேர்ந்தே யன்றி -எளிதில் சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை! இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம் இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம் பொய் சொல்லோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில் புரிந்திடும்   மெய்ஞானம் தெரிந்திடும் எளிதாக நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும் நாணயம் எப்போதும் துணை நிற்கும் வம்பிலுப்போர்   வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் ! கஷ்டம் கடக்கும் காலம் வந்தால் நஷ்டமும் தீரும் நன்மை பெறும் இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-மகிழ்ந்து துஷ்ட மெல்லாம் தூரசென்று   விலகிடும் ! நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்

மலிவான மனசாட்சி

 நடுஇரவில் நண்பர்களோடு சினிமா பார்த்து விட்டு நண்பர்களுன் பயணித்த 23 வயது மாணவியை கதறக்கதற கற்பழித்த குற்றவாளிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது .-செய்தி (குற்றவாளி : மாணவியா? அவரின் பெற்றோரா? நண்பர்களா? குற்றவாளிகளா? அரசாங்கமா?சமூகமா?)                                      """""""""""""""""""" மலிவாக மனசாட்சி மறைந்து கிடக்க மக்களும் எதையெதையோ தேடி சேர்க்க புத்தகம் போதனை சொல்லி இருந்தும்-புத்தியின்றி புலப்படுதே பெண்ணினம் இன்னும் வதைபடுதே பணம் வேண்டி  பலதவறும் பாவிகளை பண்கெட்டு  கேடுகளை செய்ய தூண்டி குணம் கெட்டு குலநாசம் செய்யுதே - மனதில் குடிகொள்ளுதே குற்றமாய் பிழை செய்யுதே சிறுபிள்ளை வாழ்வுதனை சூறையாடி செய்கின்ற தவறுகள் தொடர்கின்றதே சிற்றூரும் பேரூரும் சரிசமமாய் -நெறிகெட்டு சிற்றின்ப வாழ்க்கைக்கு துணை போகுதே படிப்பிருந்தும் பாவி மக்கள் பயணிப்பதே பகல் பொழுதை தாண்டியும் தொடர்கின்றதே தடைசெய்த  பழக்கங்கள் தவறாக தொடர்ந்து -தன்மானம் விடைபெற்று நெறிகெட்டு செயல்படுதே

மார்கழிப் பூவோ

நிலவும் சூரியனும் சேர்ந்து நித்திரையில் கனவில் வந்த நீலக்கண் கோலமங்கை இவளென்று சண்டையிட்டதால் பூமிக்கே   வேர்வை வந்ததால் புல்லெல்லாம் நனைந்து விட்டதோ பனிபொழியும் அதிகாலையில் பருவமங்கை   நடந்துந்துவர முகம்   தெரிய வேண்டாமென அதிகாலை வராமல் கதிரவனையே காக்கவைத்து காலம் மாறி பயந்து   வந்ததோ மார்கழிப் பூக்களின் மௌனமான பூக்கும் ஓசை மலைச்சாரல்   தூறல்போல பனித்துளியும்   முகமலர்ந்த நீ மார்கழிப் பூவோ.....

வேள்விக்கு வருவாயா?

சந்தனத்தில் சிலைவடித்து சவ்வாது நீறு பூசி வாசமலர்போல் வானெங்கும் வாசமெங்கும் வீசுகின்ற ஈசன் மகளா ? மான் கூட்டமெல்லாம் மயங்கி மண்டியிட்டு நிற்கும் மயில் கூட்டமோ ? மகிழ்ந்து ஆடி தோகை விரிக்கும் மங்கையுனைப் பார்த்ததாலா ? சிற்றுடல் மங்கையே சிவந்த நிற மங்கையே பற்றுதலாய் கேட்கிறேன் பாசத்துடன் வருவாயா பக்கம் வந்து அணைப்பாயா ? ஏன்  மறுக்கிறாய் ஏதோ மழுப்புகிறாய் இன்னும் ஏன் வெட்கம் என்றும் நமக்கே சொர்க்கம் வேள்விக்கு வருவாயா?

மதமா? மானுடமா?

மானுடத்தை மதம் மதிக்கிறதா மறுக்கிறதா புதுமையான தமிழ் சாதி போற்றுமே சம நீதி ஏழைப் பணக்காரன் என்பது தானே விதி கோழைகள் காண்பது கொள்ளை அடிப்பது ஏழையை ஏய்த்து சுரண்டி பிழைப்பது ஏவிவிட்டு எதிரியாய் என்றும்  பகை வளர்ப்பது தேடிப்பாருங்கள் மனதில் தெளிவு பிறக்கும் வேடிக்கை பார்க்காமல் வேதனையை வளர்க்காமல் வாழ விடுங்கள் வாழ்கையை  மகிழ்ச்சியாக

திசையெங்கும் முழங்கி வா தமிழே

துன்பத்தை தொலைத்தது  போல் துள்ளி விளையாடி வரும் கள்ளவிழி  நங்கை கவிங்கர்களுக்கோ தங்கை அவளோ தமிழ் கங்கை உலகமெல்லாம் ஓடி உன்புகழ் பாடி கலகமும் கஷ்டமும் மறந்தே நிலைக்கொள்ளா ஆனந்தம் நின் மடியில் கிடைக்குதடி இலைபோட்டு விருந்தை எந்நாளும் தருமுனக்கு சிலை வடித்து இருக்கிறேன் சிரித்தோடி வந்திடு என்னோடு தங்கிடு படை கூட்டி பாவை உன்னை அழிக்க படுபாவி நினைத்தாலும் விடைகொடுக்கும் நேரமிது விரைந்து வா விடியலைத்தா அலை கடந்து தவிக்கும் கொடியுறவு தமிழனுக்கு திரைகடல் தேடி தேசமதைத் தருவேன்   என திசையெங்கும் முழங்கி வா www.kaviyazhi.com

தமிழனுக்கு தொடரும் துக்கமடா

சுட்டுவிட துடிக்கின்ற சூரியனுக்கும் வெட்கமில்லை எட்டும் திசையும் சென்றாலும் எங்கெங்கு  காணினும்  வெட்கமடா-இன்னும் தமிழனுக்கு தொடரும்  துக்கமடா உன்னை காணாத உயிரில்லை உள்ளத்தில் வணங்காதவரும் இல்லை கள்ளத்தனமாய்  செய்கிறான் கண்டபடி கொல்கிறான்- பக்சேவை உனக்கு தெரியாதா இத்தனை நாளாகியும் இருக்க இடமின்றி உடுக்க உடையின்றி உன்னத் துடிக்கும்-தமிழர்கள் உன்னையும்  வணகுவதாலோ நீயும் அவனும் சேர்ந்து நிம்மதி கெடுக்க நினைக்கும்  செயல் சரியா நேர்மை தவறல் முறையா-இன்னும் அவனை ஏன் காக்கிறாய் www.kaviyazhi.com

சின்னஞ்சிறு விதைகள்-3

தோல்வியில் துவளாதே தொடந்து.... வெற்றியில்  வேள்விசெய் இதயம் சொன்னாலும் நீ.. இன்பத்தை  மறக்காதே மனிதனை கேடயமாக்கி உன் மதத்தை  வளர்க்காதே சாதி எனும் தீயால் சமூகத்தை சாக்கடையாக்கிப் பார்க்காதே மறுபிறப்பை நம்பினால் மனிதனாய் மனிதநேயம் கற்றுக்கொள் சாதிப்பதை விட்டுவிட்டு சாதியை சமூகத்தை  இழக்காதே

சூரியனுக்கும் வெட்கமில்லை

சுட்டுவிட துடிக்கின்ற சூரியனுக்கும் வெட்கமில்லை எட்டும் திசையும் சென்றாலும் எங்கெங்கு  காணினும்  வெட்கமடா-இன்னும் தமிழனுக்கு தொடரும்  துக்கமடா உன்னை காணாத உயிரில்லை உள்ளத்தில் வணங்காதவரும் இல்லை கள்ளத்தனமாய்  செய்கிறான் கண்டபடி கொல்கிறான்- பக்சேவை உனக்கு தெரியாதா இத்தனை நாளாகியும் இருக்க இடமின்றி உடுக்க உடையின்றி உன்னத் துடிக்கும்-தமிழர்கள் உன்னையும்  வணகுவதாலோ நீயும் அவனும் சேர்ந்து நிம்மதி கெடுக்க நினைக்கும்  செயல் சரியா நேர்மை தவறல் முறையா-இன்னும் அவனை ஏன் காக்கிறாய் www,kaviyazhi.com

கவிதையின் மகளோ?

செப்பு சிலையா செதுக்கியவன் கலையா நித்திரையை கலைக்கும் நீலக் குயிலா கற்பனையை தூண்டிவிட்ட-நீ கவிதையின் மகளோ மேகமெல்லாம்  கூடிநின்று மேனியெல்லாம் நடுநடுங்க இடிமுழக்கம் வாழ்த்தொலிக்க இந்திரனே இறங்கி வந்து-உன்னை இணையாகி மகிழ்வானோ புரவிக்கூட்டமென புறப்பட்ட தேனீக்கள் தடம்மாறி நிற்பது உன்னுடல் வாசம் உறுத்தியதோ உன்னையே பூவாக நினைத்து-உடனே தேன்குடிக்க எண்ணியதோ கன்னியுன்னை காணவேண்டி கதிரவனே வருன்முன்னே கண்டுவிட்ட என்னோடு கண்ணசைத்து வருவாயா-என் கட்டுடலை அணைப்பாயா

காப்பீடு/இன்சூரன்ஸ்

காப்பீடுகள் மூன்று வகைப்படும் படியாக இந்திய அரசால்  காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் (INSURANCE REGULATARY DEVELOPMENT AUTHIRITY)முறைப்படுத்தப்படுகிறது 1,ஆயுள்  காப்பீடு(LIFE INSURANCE) ,2,பொதுக்காப்பீடு(GENERAL INSURANCE) ,3,பயிர் காப்பீடு (CROP INSURANCE) ஆயுள் காப்பீடு( LIFE INSURANCE) இது மனித உயிர்களை மட்டுமே காப்பீடு செய்யும் படி முறைப்படுத்தப்பட்டுள்ளது.விபத்தினால் உயிரிழப்பு அல்லது உடலுறுப்பு இழப்பு மற்றும் சேதாரம் ஆகியவற்றிக்காகவும் உத்திரவாதமளிக்கும்.ஆயுள் காப்பீடுக்காலம் முடியுமுன்னே இவ்வாறு நடந்தால் அவர்கள் நிர்யித்த தொகையில் சதவீத அடிப்படையில் உடலுருப்புக்காக இழப்பீடு தருவார்கள் உயிரிழந்தால்  நிரயிக்கப்பட்ட முழு தொகையும் இறந்தவரி குடும்பத்திற்கு அவர்தம்  வாரிசுகளுக்கோ குறிப்பிட்ட காப்புரிமை கேட்பவருக்கோ போய் சேரும் மேலும் தகவல்கள் நாளை தொடரும்..........

பனிபொழியும் அதிகாலை

நிலவும் சூரியனும் சேர்ந்து நித்திரையில் கனவில் வந்த நீலக்கண் கோலமங்கை இவளென்று சண்டையிட்டதால் பூமிக்கே  வேர்வை வந்ததால் புல்லெல்லாம் நனைந்து விட்டதோ பனிபொழியும் அதிகாலையில் பருவமங்கை  நடந்துந்துவர முகம்  தெரிய வேண்டாமென அதிகாலை வராமல் கதிரவனையே காக்கவைத்து காலம் மாறி வியந்து  வந்ததோ மார்கழிப் பூக்களின் மௌனமான பூக்கும் சத்தமமும் மலைச்சாரல்  தூறல்போல பனித்துளியும்  முகமலர்ந்து மங்கையால் மயங்கி நின்றதோ

நீ என்ன சாதி

அறிவுள்ள கணவனே குடும்பத்தில் ஆண்சாதி ஆண்மையையும்  அடக்கி மகிழ்பவளே பெண்சாதி இயலாமையை சொல்பவர்கள் இன்னொரு சாதி இதில் மட்டும் மாறுபடுமா உன் (நீ) நீதி (தீ) மதமென்று பிரிக்கிறாய் குலமென்று இருக்கிறாய் தளமென்று தனி தேசமாகிறாய் தரணியிலே தமிழனே என்கிறாய் என்ன  செய்தாலும் எதிரியாகி விடுகிறாயே ஏனோ விளங்கவில்லை சாதியால்  சதியாகிறாயே ஏன் உணர்வெனக்கு உண்டென்று உயிரை கொடுப்பேன் உலக  தமிழனுக்காய் உண்மை !,ஆனால் உரியபதவி தேடித் தேடி உளருகின்ற வார்த்தையாலே உள்ளபடி நீயும் அறிவாளியா உணர்ந்து சொல் மனிதனே

ஏனய்யா சாதி(தீ)யும் மதமும்

கோள்களில் பூமி கொண்ட தனித்தோர் மனித இனம் மற்றெல்லா உயிரினம் செடி மரம் பூச்சிகள் செழுந்திரலான விலங்குகள் கடல் நீர் காற்று கணக்கிலடங்கா மலைகள் எங்கெங்கும்  காண்பதெல்லாம் எண்ணற்ற மதப் பற்றே ஏழ்மைப் பசிப் பஞ்சம் ஏற்றதாழ் விருந்தாலும் எல்லா மக்களும் இன்பமாய் வாழ்ந்தாலும் ஏனய்யா சாதியும் மதமும் என்ன அதனால் சாதித்தாய் ஒன்றே குலமென ஒவ்வோர் மதமும் நன்றே சொன்னாலும் நல்லவை போதித்தாலும் அன்றே அனைத்தையும் மறந்து அறிவிழியாய் மாறுவதேன் மனிதத்தை போற்றினால் மதமென்ன தடையா சொல்லும்

சின்னஞ் சிறு விதைகள்- 2

பார்த்தவுடன் போதையேற்றும் நீ கள்ளுண்ட வண்டுடோ காதில் கேட்டவுடன் உன்னை பார்க்கத் தோன்றும்          நேரில் பார்த்தவுடன் என் நெஞ்சில்பூக்கிறது       பார்வையாலே பாதை குளிருக்கு நீயே  என் போர்வை      சிரித்தாலும் சீமை மல்லி கண்டதுமே சிறைபிடிக்கும் நீ  கள்ளி            முள்ளிலா ரோஜா உன் முன்னோர்கள்  செய்தாரோ சிரித்ததும்  சிதறியது அங்கே சிற்றிதழில் முத்துக்கள்          

சாலை விதியைப் பார்

Image
  பிறக்கும்போதே எழுதி வெச்ச விதியை பைக்கில பறந்துபோய் மாத்துற பசங்க இழக்குற வாழ்வை எண்ணி - என் இதயத்தில் வருந்தி கண்ணீர  சிந்துகிறேன் பெற்றெடுத்து பேர் வைத்தப் பிள்ளை பேச்சை கேட்காது அவசர வேலையென்று அடிபட்டு ஊணமாகி போவதால்-அவனுக்கும் ஆயுள் முழுதும் கஷ்டம் மட்டும்தான் தலைக்கவசம்  போடுவதால் தலையை தாங்கி தன்னிகரில்லாத  உன் உயிரைக் காத்து சொந்தமும் சுற்றமும் நண்பனும்வாழ்த்த -உன் சிந்தை மகிழ செழிப்பாய் வாழ்ந்திடலாம் சாலை விதியை சரியாய் பார்த்து  நாளைய வாழ்வை நன்றாய்  மதித்து  பாதையில் வரிசை பாங்காய் செலுத்தி-மிதமான வேகத்தில் சுகமான பயணம் நன்று

இனிமையான வாழ்வுக்கு தேவை

இளமையான நாட்களில் இல்லறம் அமைத்திட்டால் இனிமையான பிள்ளைப்பேறு சீக்கிரமே கிடைத்திட துணையோடு மனம் மகிழ்ந்து துள்ளலுடன்-அன்போடு இணைந்து அளவோடு பேசி வாழுங்கள் இன்பத்தைத் தேடி இணையாக ஒன்றிணைந்து சந்தமும் பாட்டும்போல சங்கமம் கூடி திங்களாய் சேர்ந்த திரவியத்தை – முத்ததாக ஆழியுள் சேர்த்து அங்கத்துள் வைத்தது அன்று முதல் குடத்துள் கருவாக்கி ஐந்தாவது வாரத்தில் அழகான உருவாக்கி பிஞ்சு விரலும் அவயங்களும் பேழைக்குள்-உருவாகி நஞ்சுக் கொடியுடன் இணைந்து வளர்ந்து கொஞ்சும் குரலையும் குடும்ப உறவையும் மஞ்சமென போற்றி மாணிக்கமாய் ஜொலிக்க பத்துமாதம் முன்னே பாசத்தோர் ஏங்க-பிள்ளை பரவசம் பொங்க பாரினில் பிறந்திடுமே

எனக்கு வேண்டும்

 என்கடவுள் பெற்றோரை வணங்க வேண்டும் எந்நாளும் மறவாதிருக்க வேண்டும் என்குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்க -எப்போதும் எல்லாமும் கிடைத்து நிம்மதி வேண்டும்  பெரியோரை தினமும் மதிக்க வேண்டும் பிழை இல்லா பேரின்பம் அடைய வேண்டும் நல்லோரை  மதித்து நல்லாசி வேண்டும்-வாழ்வு நலமாக நான்வாழ அருள்புரிய வேண்டும் எல்லோர்க்கும் உதவும் எண்ணம் வேண்டும் எதிரிக்கும் கெடுதல் செய்யாதிருக்க வேண்டும் புகழுக்கு  அடிமை ஆகதிருக்க வேண்டும் -பிறந்தாலும் மீண்டும் தமிழனாய் இருக்க வேண்டும் எளியோர்க்கும் கல்வி கிடைக்க வேண்டும் ஏழைகளும் மகிழ்ச்சியாய் சிறக்க வேண்டும் என்னால் முடிந்தால் உதவ வேண்டும்-இப்பிறப்பில் எப்போதும் மனிதம் போற்றி வாழ வேண்டும் www,kaviyazhi,com

21.12.2012 ல் உலகம் அழியுமா? அழியாது!

நெஞ்சில் ஈரமின்றி மனித நேயமின்றி வஞ்சகமாய் கூட்டி வாழ்வை அழித்து பிஞ்சுக்குழந்தை பெண்களை முதியோரை-கொன்ற பஞ்சமா  பாதகன் பதவியிழந்து அழிவான் நேர்மை  மறந்து நிம்மதி கெடுத்து ஊரை  ஏய்த்து பணம் திண்ணும் பேரை மாற்றும் பிறவித் திருடன்-அழிவான் பிறரை  ஏமாற்றிய பொருளையும் இழப்பான் அரசியல்  செய்யும் அறிவியல் திருடன் அவசியமின்றி பொய்களை பேசி வாழ்பவன் துறவி என்று தவறு செய்யும்-துன்பமாக்கி உறவை கெடுப்பவன்  உரிமையிழந்து  மடிவான் அடுத்தவன் நாட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு ஆணவம்  மிகுந்து அறிவு கெட்டு படைத்தோரை மறந்த படுபாவிகள்-சேர்த்த பணத்தை இழந்து தவிப்பான்  உணர்வான்                               ****** உலகம் அழியாது உண்மைகள் தோற்காது

பார்த்ததும் கேட்டதும்

                                    பயணிகள் கவனத்திற்கு                                                      *****               நான் அலுவல் நிமித்தமாகவோ அல்லது சொந்த வேலையாகவோ அடிக்கடி  செல்வதுண்டு எனது நான்கு சக்கர வாகனத்தில் அடிக்கடி  செல்வதுண்டு  அவ்வாறு தனியாக செல்வதால் பெட்ரோல் செலவை மீதப் படுத்துவதோடு தேசத்தின் அன்னியசெலாவணியைக் குறைக்கும் விதமாக பேருந்தில் சென்று வருவது வழக்கம் .              பெரும்பாலான  பேருந்துகளில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது .அரசாங்க தனியார் ஊர்திகள் பலவற்றிலும் தற்போது காதைப்பிளக்கும் பாட்டு சினிமா போன்றவற்றை துண்டித்து விட்டார்கள் இது விபத்தை தடுக்கவும் கவன சிதறலை தடுக்கவும்  இருக்குமென நினைத்து சந்தோசப்பட்டேன் .              ஆனால் நமது மக்கள் பாட்டு விரும்பி கேட்கிறார்கள் அதனால் எப்போது காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டே வருவார்கள்.பிறரிடம் பேசும்போதுகூட நீக்கி விட்டு பேச மாட்டார்கள்,சில சமயம் திடீரென்று பாடுவார்கள் சிரிப்பார்கள்  ஹம் ...ஹம் .. என்றுகூட சொல்லுவார்கள்            இதெல்லால் ஆர்வ மிகுதியால் அல்ல தன்னிடம் உள்ள கைபேசியில் இந்த வசதி

மதமின்றி மனிதனாக முடியுமா

01.12.12 அன்று எழுதியதின் மறுப் பதிவு மீண்டும் அந்தநாள் வருமா மேகமெல்லாம் கூடி மழை தருமா ஆற்றில்  நீர் பெருக்கெடுத்து-அருகருகே அங்கங்கே ஏரி குளம் நிறையுமா மீனும் தவளையும் துள்ளி விளையாடி மீண்டும் நீரில் மகிழ்ந்து செல்லுமா பாம்பும் தேளும் பணிந்துபோய்-அன்பாக பார்ப்போரை வணங்கி திரும்புமா மாடும் கன்றும் பச்சை தழையை மீண்டும் மீண்டும் புசியுமா ஆடு கோழி அனைத்து உயிரும்-அங்கங்கே ஆனந்தமாய்  உணவு பெறுமா கோள்கள் ஒன்பதும் கூடி மக்கள் குறை தீர்க்க நாடி வருமா கூப்பிட்டதும் கடவுளும் நமக்கு-வாழ குறையில்லா அருள் தருமா சுத்தமான காற்றும் சுவையான நீரும் எத்திசையும் பசுமையான செடிகொடியும் எழுந்தோடும் பறவை கூட்டமும்-வருமா  எண்ணில்லாப் பூச்சி புழுவும்  காணுமா தேன்  வண்டு திரிந்தோடி பறந்து வானெங்கும் வாசம் வீசும் மலர்கள் நாம்  உண்ணும காய் கனிகள்-சுத்தமாக நாள்தோறும் கிடைக்க முடியுமா மாண்டோர் வாழ்ந்த மகிழ்ச்சியான மனிதநேயம் மக்களிடம் திரும்புமா மனத்தாங்கல் இன்றி ஒற்றுமையாய் மதமின்றி மனிதனாக முடியுமா

சின்னஞ் சிறு விதைகள்

இறக்கும் முன்னே எதிரியை மன்னித்துவிடு-ஆனால் துரோகியை நினைக்காதே                   ***** நன்றியை கடமைக்கு சொல்லாதே நன்றி உள்ளவனாய் இரு-அதுவே நன்மையாய் தொடரும் துணையாக                   ***** சோதனை  வரும்போது வேதனை கொள்ளாதே-அப்போது வீழ்த்திவிடும் உன்னை                  ***** நேர்மை இருந்தால் நிச்சயம் வெற்றி-ஆனாலும் பொறுமை வேண்டும்                   ***** மன்னிக்க தெரிந்தவன் மனிதனாகலாம்-ஆனால் கோழையாய் வாழ்ந்திடாதே                    *****

தூக்கம் போச்சு

இன்னைக்கு ஏனோ தூக்கம் போச்சு ஆனா துயரமில்லை ஏக்கமும் இல்லை ஏனோ தெரியலை தூக்கம் போச்சே கொசுவும்  இல்லை பசிக்கவும் இல்லை ஏனோ தூக்கம் போச்சு

பூ மாலை

வண்டுண்ட தேன் வழிந்தோடி  செல்ல நண்டு குழம்போடு நங்கையும் காத்திருக்க கண்டவுடன் காமம் கவர்ந்திழுக்க அவனை கட்டியணைக்க நினைத்தாள் பௌர்ணமி  நிலவில் பனிமழை வெளியில் குளிரிலும் சூடாக குமரியின்  தேகம் பருவத்தின் தாகம் அவளுக்கும் மோகம் காத்திருந்த கன்னியை கண்டவுடன்  தீண்டாமல் கண்ணிமையை கவ்வி பெண்மையை தூண்டினான் பேரமுதை தூண்டினான் தேகத்தை  சூடாக்கினான் திசையெங்கும் நகர்த்தி தீண்டி தீண்டி யாடினான் மாதுலையுள் துளைத்து மீண்டும் மீண்டும் மகிழ்ந்தான் தேகத்தை தென்றலாய்  நுகர்ந்தான் இறுதியாய்  தீயை  உணர்ந்தான்

தமிழை மணந்து தழுவி மகிழ்கின்றேன்

தடம்கேட்டும் தவிக்கின்ற இந்நாளில் தானாக முன்வந்து வழி சொல்லும் புடம்போட்ட நண்பர்களாய் புறப்பட்டு-என் இடம்தேடி  வாழ்த்தும் நண்பர்களே தென்றலாய் வந்து தீண்டியவரும் தினமும் என்னை நாடிவரும் அன்றலர்ந்த பூவைப்போல சூடி-நாளும் அன்பாக நட்பு சொல்லும் அன்பர்களே விதையாக தொடரும் எனது கவிதைகள் விரைவில் முளைக்க துணைபுரிந்து விளையாடும் இலக்கிய மேடைதனில்-நானும் விரைவாக விழுந்து எழ விரும்புகிறேன் துணையாக இருந்து வழி சொல்லி தினமும் என் கவியை படித்து தெரிகின்ற தவறை  தினம் சொன்னால் -நான் திகட்டாமல் ஏற்பேன் திருத்திக் கொள்வேன் தமிழோடு விளையாடி தனியாக உறவாடி துளியாக மனதில் துளிர்கின்ற சிந்தனையை தரணியோரும் படித்து வாழ்த்த-தமிழனாய் பிறந்ததே பேரின்பம் ஆனந்தம் உற்சாகம் வளமாக வேண்டும் வரைகின்ற கவிதை வாழ்நாளில் தோன்றும் நிறைவான  நினைவே தளமாக எண்ணி தாங்கி கொண்டே-உயிராக தமிழை மணந்து தழுவி மகிழ்கின்றேன்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனிதனை நேசி மனிதநேயம் கொண்டு மனநிறைவாய் யோசி நல்லதையே பேசி நாணயமாய்  செய்து- நட்புடன்  நல்லிணக்கம் உள்ளவனாய் நல்லோரை  யாசி மரங்களை வளர்த்தால் மழை பெறலாம் மனதை வளர்த்தால் வளம் பெறலாம் இழைதலை கொடியால் நிழல் பெறலாம்-எப்போதும் இனிமையாய் பேசினால் இன்பம் கிடைக்கலாம் உழுதவன் உழைத்தால் உணவு உண்ணலாம் உண்மையாய் நடந்தால் உள்ளம் மகிழலாம் குயவன் செய்வதுபோல் வாழ்வை-குணமாக குடும்பம் தழைக்க வழி செய்யலாம் காற்றும் நீரும் மாசு படாமல் காலை எழுந்ததும் தூசு இல்லாமல் நேசம் தழைக்க நிம்மதி கொடுக்க-தமிழ் பாசம் பொங்கம் பண்புடன் வாழ்வீர்

பாக்கெட் மணி கொடு

கல்லூரிக்கு போகணும் காசு கொடு கைசெலவுக்கு வேணும்  காசு கொடு பேப்பர் வாங்க பேனா வாங்க-நண்பனோடு ஆட்டோ பேருந்தில் செல்ல காசுகொடு புதுப்படம் பார்க்கனும் பிறந்த நாளுக்கு படிக்கும் நண்பனுக்கு பார்ட்டி கொடுக்கணும் பெட்ரோல் போடணும் பழுது பார்க்கனும்-காசுகொடு  பஞ்சர் ஓட்டனும் பார்கிங் செய்ய பரீட்சை கட்டணம் பதிவு கட்டணம் கேண்டீன் போகணும் பிச்சா திங்கணும் படத்துக்கு போகணும் பந்தா காட்டனும்-சேமிப்பு கணக்கில் போடணும் காசு கொடு ஆணும பெண்ணும் அழகை ரசிக்க நானும் போடணும் நல்லதாய் தெரியணும் சென்ட் வாங்கணும் சிறப்பாய் இருக்கணும்-செலவுக்கு நாளும் காசுகொடு அப்பா காசுகொடு

அவசரப் பயணம் அவசியமா?

அவசரம் எல்லோர் மனதிலும் அவசரம் ஆட்சியாளருக்கும் அரசியல்வாதிக்கும் பேச்சு சுதந்திரம் பேணவேண்டி அவசரம்-மேடை பேச்சு எல்லாம் தனி ரகம் அவசரம் இருப்பவன் பணத்தை மறைத்துவைக்க இடம்தேடி பதுக்கும் வேலையில் அவசரம் ஏழைக்கு ஏழ்மை நீங்க அவசரம்-அன்றும் வேலை செய்த கூலிவாங்க அவசரம் எல்லாம் இருதும் வசதி இருந்தும் எதிரியை  நினைத்து நிம்மதி இழந்து பொல்லா  பகையால்  பொறுமைன்றி-உயிர் கொல்லும் நிலை கொடுமைக்கும் அவசரம் வாகனம் ஓட்டும் நேரம்கூட அவசரம் வாழ்க்கை மறந்து மதியும் இழந்து வேகமாக  ஒட்டி செல்லும் அவசரம் -சாலை விபத்தில் உயிர்ப்போவதிலும் அவசரம்

மறுபிறவி அறிந்தோர் யாரோ?

மறுபிறவி அறிந்தோர் உளரோ மறுபடியும் மனிதனாய் பிறப்பீரோ சிறுதவரிறின்றி சிந்தனை செய்வீரோ-சிந்தையில் சீரான மனிதனாய் வாழ்வீரோ மகிழ்வீரோ நேர்மையான அன்பும் நாளும் கொண்டு நிகரில்லா நல் பண்புடன் நடந்து ஊர் போற்றும் உன்னத மனிதனாய் -உலகில் உள்ளம் மகிழும் நால்லோர் ஆவிரோ மனிதநேயம் மக்கள் நல்வாழ்வு மானுடம்செழிக்க மகத்தான சேவை இயற்கை நெறியில் இன்முகத்தோடு-மனதில் இன்பம்  பெருகி எளிமையாய் இருப்பீரோ இயற்கை வளம் சிறக்க வைப்பீரோ இல்லாத மரங்களை புதிதாய் படைபீரோ செயற்கையாய் மனிதனை படைபீரோ-இதயம் சொல்வதை கேட்டு நேர்மையாய் நடப்பீரோ வானமும் பூமியும் வாழும் உயிர்களும் நிலவும் சூரியனும் சுற்றும் கோள்களுக்கும் சுதந்திரமாய்  நடப்பீரோ சொந்தமென -போரில் சுட்டு கொன்று சுயமிழந்து சாவீரோ இப்பொழுதே மாறி இன்றைய வாழ்வை இன்முகமாய் ஏற்று கற்பனையில் வாழாமல் கிடைத்ததை கொண்டு தப்பேதும் செய்யாமல்-வாழ்வில் தடம்மாறி செல்லாமல் இப்பிறவியில்  வாழுங்கள்

கொசுவே நீ செய்வது சரியா

அறிவுள்ள ஆறு நாள் எதிரியே அன்பாக   நீ முத்தமிட்டாலும் அலறுகின்றனர் எல்லோரும் அடிவாங்கி அமரனாகும் -உன்னை அடிக்காமல் விடுவோர் உண்டோ செடி கொடியில் வளர்ந்தாலும் சாக்கடையில் பிறந்தாலும் படைநடுங்கி ஓடுகிறது - பயந்து தொடை நடுங்குது எல்லோருக்கும் எதிரியை  வீழ்த்த  எனக்கு உதவ எழுநாள்  தாண்டியும் வாழ்வாயா ஏவியதும்  உடனே நீ  செய்வாயா-எமனாக காத்திருந்து அவனை கொல்வாயா அதிசய பிறவி நீ அன்பில்லா பகைவன் நீ கத்தியின்றி யுத்தம் செய்யும்-நீ கலிகால புதிரும் நீ உன்னை கொல்ல உலகமே முயலுது உயர்ந்த மருந்து புதிதாய் கிடைக்குது என்ன செய்தும் பயனில்லை  -உன்னால் எனக்கும் கூட வருத்தம் உன்மேலே முப்படையும் தோற்கும் உன் முன்னே முடிவுரை எழுதும் துயரமாய் நின்னே சத்திழந்தோரை \தானே நீ-சாகடிக்கிறாய் சரியா   நீ செய்வது  சரியா

விக்கல்

விக்கல் வருவது எதனால்? விரும்பியவர் நினப்பதாலா? தூக்கம் வருவதாலா? தொண்டையில் பிரச்சனையாலா? இதயம் பேசுதலா ? இல்லை எதனால் ? விக்கல் வருவது எதனால் ?எனது வினாவுக்கு பதில் சொல்லுங்களேன்

நீ பேசாத நாட்களில்

நீ பேசாத நாட்களில் நான் துடித்துகொண்டிரிக்கிறேன் ! உன்னை காண்பதற்கு! நாட்களை இழந்து கொண்டிருக்கிறேன் நான் சாவதற்கு ! என்னவென்று சொல்லிவிடு , நிம்மதியாக உயிர் பிரிவதற்கு இன்னும் ஏன் மௌனம் சொல்லிவிடு இதயத்தில் தங்கிவிடு இமைகளை மூடிகொள்கிறேன்

மனிதனா? மனிதமா?

மனதும் மனதும் சேர்ந்தால் -காதலாம் மனமின்றி தவித்தால் மோதலாம் விபத்தென்றால் விதியென்று சொல்வார்-மோதலால் அபத்தமாய் வேறு சாதிஎன்பர் ஆயிரம் தூரம் தாண்டினால் -அய்யய்யோ அருகில் ஏனோ மௌனம் அந்தகாலம் மாறவில்லை மனிதன்-ஆனாலும் மாறிவிட்டான் அறிவியல் ஆனந்தமாய் சொந்தபந்தம் யாருமில்லை  சொல்லிக்கொள்ள-நகரில் சொந்தமில்லை பந்தமில்லை

பனிக்காலம்

Image
கணவன்   கார்த்திகை மாத பணி கடுமையால்-குளிரில் கணவனை  நோக்கும் இளமையாய் கையிலிருந்த காசை கரியாக்கியதால் -கடனோடு செய்வதரியாமல் சினம் கொள்வார் இம்மாதம் மனைவி கண்விழித்துப்  பார்த்தும்க் கதிரவனை காணாது -நேரம் காலம் கடந்து அதிர்ச்சியாய் ஏழத்தோன்றும் இன்னும் அருகில் இணைந்து படுக்க-இன்முகம் பண்ணும் சேட்டைகள் அதிகம் ஏங்கும் கடவுள் பக்தர் சாத்திரம் படித்து நேர்த்தியாய் திரு-சன்மார்க்கம் போற்றிட சொல்லும் பெருமையாய் ஆத்திரம் அடங்க  அகிலம் போற்ற-கோவில் சத்திரம் செல்வர்  சாமியிடம்  சரணடைவர் காதலர்கள் புது துணியோடு  புறப்படும்  இளசுகள் -சினிமா பல புதிய படம் காண்பர்  இணையாக தனிமையில் தவிக்கும் இளம் சிட்டுகள்-தடுமாறும் இனிமை தேடி இரவையே தவிர்க்கும் சிறுவர்கள்  படிக்க மறுக்கும்  பணியால் உறக்கம்-எழுந்து பாடம் படிக்க குளிரில் நடுங்கும் தேர்வு தொடங்கும் பயம் கொள்ளும்-தேர்வெழுத தினமும்  உண்ண மறுக்கும் பட்டினியாய்

கவியாழி : நீ மனிதனாய் யோசி

கவியாழி : நீ மனிதனாய் யோசி : மனித பிறப்பே மகத்தானது மகம் பிறந்ததும் வியப்பானது திசை எங்கும் நோக்கி மகிழ்ச்சி திளைத்திட்ட பெற்றவர்கள் உழ...

கவியாழி : இமை மூடி பாருங்கள்

கவியாழி : இமை மூடி பாருங்கள் : இமை மூடி பாருங்கள் இளமையை இனிதாக்கி மகிழுங்கள் முன்போல் சுமையாக எண்ணாமல் சுகமாக-ஆற்றல் சீர்நிறுத்தி சீர்தூக்கி பாருங்க...

மகிழ்ச்சியான தீப திருநாள்

Image
மகிழ்ச்சியான தீபாவளி -2012 --- மகிழ்ச்சியான நேரமிது மக்களின் நாளிது புகழ்ச்சிக்காக பொருள் சேர்க்கும் நன்னாழிது இகழ்ச்சியாக பேசியோரும் வாழ்த்தும்நாள்-எல்லோரும் நெகிழ்ச்சியாக கொண்டாடி மகிழும் தீபத்திருநாள் ஏழைப் பணக்காரன் என்றதொரு வித்தியாசம் எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள் எல்லோரும் ஏற்று இனிதாய் போற்றி-தீபாவளியை எளியோரும் விரும்பும் இனிய பெருநாள் எப்போது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க இளசுகள் ஓடிவந்து பட்டாசு வெடிச்சிருக்க குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைஞ்சிருக்க-சேவல் கூப்பாடு கேட்காமல் எழுந்திருக்கும் ஒருநாள் புத்தாடையில் புதுமஞ்சள் சாந்திட்டு உடுத்திட்டு புதுநாளைக் கொண்டாட மாப்பிள்ளை அழைத்திட்டு வித்தாரம் பேசாமல் வீடெங்கும் கூறாமல் – சண்டை விநியோகம் செய்யாத தீபாவளி திருநாள் காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியேனும் ஓசி வாங்காமல் உழைத்து வைத்திருந்து புதுத்துணி வாங்கும் பொல்லாத தீபாவளி-இன்று இளசுபெரிசு எல்லோரின் இனிமையான திருநாள் கடந்த நாட்களில் பட்ட கஷ்டமெல்லாம் காணாது மறந்து இஷ்டமாக விரும்பும் எல

பிணங்களை பேச வைக்க முடியுமா..? ஒரு பகீர் தகவல்.! - புதிய உலகம்.கொம்

பிணங்களை பேச வைக்க முடியுமா..? ஒரு பகீர் தகவல்.! - புதிய உலகம்.கொம்

சித்தனே போற்றினான்!

Image
    சித்தனே போற்றினான் சிந்தையில் எற்றித்தான் அத்தனை அரிதான வித்தையை செய்திட்டான் கற்றதை மற்றோருக்கு கற்பித்து மாற்றினான் கண்டத்தில் தமிழனை கருத்தாக்கி மெருகூற்றினான் பக்தனாயும் இருந்தான் படைக்கவும் செய்தான் புத்திமாறாது தவம் பொழுதும் செய்தான் சத்தமும் அவனே சந்திர சூரியனும் சரீரமான நீரும் காற்றும்  சிவனே எத்தனை  கடலும் ஏழுலகமும் நீயே அப்பனே சிவனே அனைவரையும் [போற்றி நித்தமும் சிவமே நினைவெல்லாம்  சிவனே பித்தனே  உன்னை பொழுதும் நினைவேனே ஓம்  நமசிவய ஓம்  சிவ சிவ

இமை மூடி பாருங்கள்

Image
இமை மூடி பாருங்கள் இளமையை இனிதாக்கி மகிழுங்கள் முன்போல் சுமையாக எண்ணாமல் சுகமாக-ஆற்றல் சீர்நிறுத்தி சீர்தூக்கி பாருங்கள்  ஆனந்தமே அந்த நாட்கள் மீண்டும் வராது ஆனாலும் இன்று போல்  நாளை தேனாக சொல்லமுடியாது- இருந்தும் மான் ஆகா விட்டாலும் மயிலாகலாம் சொந்த நாட்கள் சொல்லி வந்தநாட்கள்  அந்த கால அருமையான தருணங்கள் பந்தமானது பாசமானது  அன்பினால்-இன்று கந்தலானது  கனவானது  சொந்தமே கூட நட்பும் வேண்டும் நாளும் பகிர நல்லன்பும் வேண்டும் பேரப்பிள்ளை பேச்சை கேட்டு பாடவேண்டும் பின்-மகிழ்ச்சி பரவசத்தால்  பாட்டியோடும் ஆடவேண்டும் ஆயிரம் கதை வேண்டும்  அவர்களுக்கு ஆனந்தமாய் சொல்ல வேண்டும் தினமும் பாராத பிள்ளையிடம் பாசம்போல் -நடிக்கும் பண்பும் வேண்டும் ஆறாத ஏக்கத்தால் பேரன்  பேத்திக்காக பிள்ளையிடம் பேரன்பாய் இருப்பது போல்  வேண்டும் பிரியமுடன்  மருமகளிடம் சிரித்து-பாசத்திற்கு  பிரிவின்றி கிடைத்திட பழக வேண்டும்

தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன்

Image
வாழ்வோரை பார்க்க வரவேண்டு மென்று ஆழ்வான காற்று என்னை துரத்தி நோய்போல் என்னை நிறுத்தியதால்- ஏனோ தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன் இதுவும் எனக்கு மகிழ்ச்சிதான் இருந்தும் மனதில் வருத்தம்தான் கடலில் மூழ்கி இறந்துவிட்ட அய்வரை-மரண துயரில் மூழ்கிட செய்தது நானல்ல எவ்வளவோ ஆழத்தையும் நான் நீந்தினேன் எண்ணில்லா பகுதியை தாண்டி சென்றேன் தப்பிதமாய் வாழ்ந்ததில்லை தறிகெட்டு-கரையில் ஒப்பில்லாது வாழ்ந்து ஒய்வாகதான் உள்ளேன் நிலப்புயல் எனக்கு நிம்மதி தர கரைநோக்கி என்னை தள்ளியதால் நானே கவனிப்போர் நிறைந்து காண்கின்றேன்-இன்றும் அகிலத்தார் பார்க்க எனக்கும் மகிழ்ச்சிதான்

நீ மனிதனாய் யோசி

Image
மனித பிறப்பே மகத்தானது மகம் பிறந்ததும் வியப்பானது திசை எங்கும் நோக்கி மகிழ்ச்சி திளைத்திட்ட பெற்றவர்கள் உழைத்திட்ட மணித்துளிகள் உருமாறி  போனதற்காய் இளைப்பாறி இருந்திட்டார் இலைப்பூவாய் வளர்த்திட்டர் குலை சிதைத்து விட்டதானால் குடும்பமே நடுத்தெருவில் பிழைசெய்தவர்  யார் புரியாது  ஏன் செய்தீர் தழைக்குமா உன் குடும்பம் தனியாக யோசித்துப் பார் சாதி  சண்டைகள் தேவையா சரிகின்ற உயிர்கள் நியாயமா சாதி சண்டையால் சங்கடத்தை சதியாக்கும் சண்டாளன்  மடிவானா மனிதனை  நேசி மகிழ்ந்து மனிதனாய்  சற்று யோசி

உடல் தானம் செய்வீர்

Image
உடல் தானம் செய்வீர் உன்னத முடிவெடுப்பீர் கடல் கடந்து பார்த்தால் கட்டாயம் நீயும் செய்வீரே உயிர்போன பின்னே உடம்பென்ன செய்யும் மண்ணரித்து  புழுதின்னும் மரம்செடி கொடியே வளரும் பொன்னெழுத்தில்  போற்ற புகழோடு பலர் வாழ என்னிருத்தி பாருங்கள் எண்ணியதை சொல்லுங்கள் அவயம்  இல்லார்க்கு அனைத்தும் கிடைக்கும் அடுத்தவர்  நலம் வாழ அவசியமான முடிவு செய்

இதழன்றி என்ன தருவாய்? அன்பே!

Image
    அருகில் வராதே அணைத்து கொள்வேன் அனைவரின் முன்னே இணைத்துக்கொள்வேன் அடுத்த நிமிடம் சுவைக்க தோன்றும்-எனக்கு அதற்கும்  மேலும் தாண்டச் சொல்லும் இனிக்கத்தானே இதழைப் பிடித்தேன் இதை மறுத்தால் என்ன செய்வேன் இன்று  மழையில் இந்த நேரம்-எனக்காக இதழன்றி  என்ன தருவாய்  அன்பே என்னை மீறி எதுவும் நடந்தால் எனக்கும்  உனக்கும் பங்கு  உண்டு பினக்கின்றி  பிரியமாய் தந்திடு-உரிமை பிணைப்பை உண்டென உணர்ந்திடு நெஞ்சிலே நெருப்பு வார்த்தாய் தீ கொஞ்சமாய்  பற்றி வர செய்தாய் துஞ்சமில்லை எனக்கு தூக்கமில்லை வஞ்சியே வா வனப்பிதழைத்தா !

கவியாழி : முதல்நாள் இரவு

கவியாழி : முதல்நாள் இரவு :  இரவெல்லாம் விழித்திருந்து இமை மூடா தவமிருந்து ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய் உற்றாரின் நலம் பகிர்ந்து விளக்கு தோரணம் விடியும்வர...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more