Posts

Showing posts from August, 2012

தெய்வங்கள்

தெய்வங்கள்
இமைகள் மூடியபின்னும் இன்ப கனா காணுங்கள் இளமை இருப்பதை இன்றும் பருகுங்கள் நாளை நடப்பதும் நட்பினை தொடரவும் நல்ல நாளென நம்பிக்கை வையுங்கள் நட்புகளுக்கு நலமான இரவு வணக்கம்

தமிழ் மொழி வளர்க

அன்புள்ளங்களுக்கு அடியேனின் வணக்கம்! அருமை தமிழ்! அதிசயத்தின் ஆராய்ச்சியே!! பொறுமை இருந்தாலும் சிறுமை வேண்டாம்.... சிறு குறிப்பு போதும் சினிமா வேண்டாம் ,இங்கு.... தமிழ்  தமிழனென்ற தனித்துவம் பெறுவோம் பெருமை கொள்வோம் பேரின்ப புகழ்அடைவோம்........... சிறுமை தவிர்த்து சிந்தனை வளர்ப்போம்!! இத்தனை இணையத்திலும் இதயத்திலும் வைத்து வாழ்வோம் !!!!...

தெரிந்துகொள்

நின்றுபோன மூச்சு நினைத்தாலும் திரும்ப வராது ? நிம்மதி இழந்தவன் நெடுநேரம் தூங்கமுடியாது ? மாண்டுபோன சொந்தம் மறுபடியும் வீடு வராது ? தூண்டிலிட்ட மண்புழு மீண்டும் உயிர்பெறாது ? துவண்டுவிட்ட முயற்சி துல்லியமாய் வெற்றிபெறாது?

சிற்சில

ஒரு துளி கண்ணீர் ஒரு கண்ணில் ஏக்கம் ஒரு இரவினில் காதல் ஒரு நிமிட மௌனம் ஒரு சொல் முயற்சி ஒரு கண பார்வை ஒரு விழி பார்வை .. இதுதான் காதல் நோயோ? பெண்ணே உன்னிடம் உள்ளது என்ன ? ------------------------------------ தனிமையின் தவிப்பு உங்களுக்கு மட்டுமா ? நானும் என்னவளுக்காக ஏங்கி நிற்கிறேன் ! அவளிடம் சொல்லி அழாமல் வரசொல்லுங்களேன் ---------------------------------------------------- ஏமாந்தவன் இங்கிருக்க ஏமாற்றியது யாரோ? இன்று உனது நாள், இனிமையாக வாழ்க --------------------------------------------------- காற்று வாங்க கடலுக்கா செல்வாய்! கடன் வாங்க மேகத்தை கேட்பாயா? உடன்பிறந்தோர் உயிர்பிரிந்தும் ரசிப்பயாயா ? உன்னதமான நட்பை உதறிசென்று விடுவாயா??

சமுக பொறுப்பாளி

Image
  கவிஞர்கள் காகித பூச்சிமட்டுமல்ல      கற்பனை குதிரையுமட்டுமல்ல   சோதனை பிறவியுமல்ல   சொற்போர் செய்பவனல்ல   செதுக்கி வடிக்கும் சிற்பி   சிந்தனையை   நிஜமாக   உருவாக்கும் ஞானி   உதவிக்கு ஓடிவரும்   தோணி ஆட்சி திறமையும் அடுத்தவர் நலனையும் பேச்சில் தெரிந்து பிரச்சனையை தீர்க்கும் பொறியாளன் .கற்பனை தெரியும் கதை காவியமும் அறியும் ஒப்பனை இல்லாத கலைஞன்   தன்னலம் கருத்த தலைவன்   மூத்தவன் அறிவில் முதன்மையானவன் பிரச்சனையும் பிணக்குகளும்   உச்சமென மெச்சிடும் பண்பாளன் கோபமும் நல்ல குணங்களும்   உள்ளவன் வல்லவன் நல்லவன்   மெச்சிடும் குணமும் உண்டு மீறியெழும் பண்பும்முண்டு   சாதனைகளும் சோதனைகளும் உடையவன்   காதலன் காதலி சமுகஞானி சிந்தனையாளன்.   உதவும் உள்ளம்   ஊர் காப்பாளன் தனிமையில் தவிப்பவன்   தலைகனம் கொண்டவன்   கொள்கை பற்றாளன் கோபம்கொண்டவன் கொள்கைவிடதாவன்   எத்தனையோ உண்டு எளுதமுடியாதது சொந்த கதை சொல்லவா   சோககதை அல்லவா   இத்தனைக்கும் நான்தான் முதலாளி   எப்பவுமே பொறுப்பாளி

தாய்மை

Image
தாலி கட்டியதும் தவம் ஆரம்பம் தனியறையில் நாளும்   ஏற்படும் பூகம்பம் தாகமென கடக்கும் முப்பதுநாளும்_ ஆசை தாகமது மட்டும் தணியும் முடியும்! கருவுற்றதும் கனவுகள் ஆரம்பம் அதை கருத்தாய் கவனித்து சினம் கொள்ளாமல் சிறிதளவும் அசைக்காமல் உருவேற்ற- உள்ளத்தில் சீரான முகமாக்கி ரணத்தையே உணவாக்குவாள்! அன்பையும் நற்பன்பையும் நாளும் சொல்லி அன்னையின் தவிப்பை அன்றே சொல்லிடுவாள் வயிட்றை தடவி வழியெல்லாம் பார்த்த- அறிவை பயிற்றுடுவாள் மகிழ்வாள் மனமெல்லாம் பூரிப்பாள்! பிறக்குமுன்னே பிள்ளை   செய்யும் சேட்டையை பிறரிடம் சொல்வாள் நாளும் சிரிப்பாள் பித்தாய் இருப்பாள் பிறப்பை கேட்பாள்- பூவே இத்தனை நாளாய் இதற்குத்தானே என்பாள்!

நேசம் வேண்டும்

Image
நேசம் வேண்டும் நேர்மையாக வேண்டும் நெஞ்சுருகி  நாடவேண்டும்  நீ நியாயமாக இருக்க வேண்டும் கொஞ்சவும் வேண்டும் குறைகளை  அறிய வேண்டும் குற்றமெனில் கூற வேண்டும் கூடவே நீ  துணையாக வேண்டும் சுகமாக  வேண்டும் சுற்றத்தில் நீ வேண்டும் கற்றுதர நல்லவை வேண்டும் கடும் சொல்லால் திட்ட வேண்டும் நற்றமிழ் வேண்டும் நாளும் துணை வேண்டும் நல்லோர்கள் ஆசி வேண்டும் நாள்தோறும்  அது கிடைக்க வேண்டும் எப்போதும் வேண்டும் என்னுடனே நட்பு வேண்டும் எல்லாமுமாய் இருக்க வேண்டும் எனக்கு,உன்னுயிரில் இணைய வேண்டும்!

படிக்காத பாவி

Image
விழியே ரணமானது விடியலுக்காக! விதைத்தவன் அழிவானா ? வினையன் மடிவானா? துணையின்றி  தவிக்கிறேன்! தூக்கமின்றி  அழுகிறேன்!! துன்ப துரோகி துயில்வானா? மரிப்பானா? தவமிருந்த  பிள்ளை தாங்கிடும் துயரம் கணக்கில்லாத கவலைகள்,  கண்ணுரங்க முடியலையே! என்னை பினையாக்கி என்னுயிரை பிணமாக்கி விண்ணுயர எடுத்துக்கொள் என்னவளை விட்டுவிடு பணம் வேணுமா? பழிகாரனே பாவியே! சினத்துடந்தான் சொல்கிறேன்! சீக்கிரம்விடைகொடு! நீ செய்யும் பாவம் நின் சந்ததி அழியும் நிம்மதி கெடும்! அழிவாய்!! நேர்மையற்ற வயோதிகனே !!!

நலம் கண்ட நட்பு !

Image
இன்று தொடங்கிய இந்த நட்பு என்றுமே சிறக்க இருப்பேன் . தொன்று தமிழ் முழங்க தொண்டனாக நானும் வருவேன் உன்னோடு... கண்டுவிட்டேன் கவித்தென்றலை உண்டு விட்டேன் உன் கவி ரசத்தை... மீண்டும் வருவேன் மீதமும் பெறுவேன் ! ஓங்கு தமிழ் வளர்க்க ஒவ்வொரு நாளும் தொடர்வேன் ! உன்னோடு...

ரசித்தவர்கள்