Monday, 30 December 2013

ஆண்களின் மாரடைப்புக்குக் காரணம் பெண்களா?

மாரடைப்பு நோய் என்பது பெண்களை விட  ஆண்களை அதிக அளவில் தாக்குகிறது. அதிகமாக   என்பது சதவிகிதம் ஆண்கள் இவ்வாறான மாரடைப்பு நோய்க்கு உள்ளாகிறார்கள்.சரியான உடற்பயிற்சி உடலுழைப்பு,உணவு கட்டுப்பாடு இல்லாமை ,அதிக அலைச்சல்,பணத்தேவைக்கான நெருக்கடி போன்ற காரணிகளே பெண்களைவிட ஆண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம்  உண்டாகி மாரடைப்பு ஏற்படுகிறது.

மேலும் நம் உடலின் கழிவானது சிறுநீர்,மலம்,வேர்வை,மாதவிடாய்,விந்து வெளியேறுதல் போன்ற  இயற்கை நிகழ்வுகளால் நமது உடலில் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு  நல்ல ரத்தம் இருதயத்திற்குக் கிடைக்கிறது.நாற்பது வயதில் தான் அதிக உழைப்புக்கும் அலைச்சலுக்கும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி வீடு வாகனம் மற்றபிற பொருட்களையும் பிள்ளைகளின் உயர்கல்வி அவர்களின் எதிர்கால நலன் குறித்த கவலைகள் போன்ற காரணங்களே மனவழுத்தம்,உறக்கமின்மை ,வீட்டில் பிரச்சனைகள் எனப் பல வழிகளிலும் மனிதனின் மனதை முடக்கச் செய்யும் காரணிகளாய் இருக்கிறது

உடலில் ஹார்மோன் உற்பத்தி குறையும்போதும் நமக்குச் சில அறிகுறிகளைக் காட்டும் அப்போதே நாம்  மருத்துவரை அணுகி நமது இதயத்தின் இயக்கம், செயல்பாடு,ரத்தத்தின் அடர்த்தி,எலும்பு தேய்மானம்,அங்கங்களின் செயல்பாடு,மற்ற போன்றவற்றை மருத்துவரின் தகுந்த ஆலோசனையின்பேரில்  பரிசோதனை செய்து நமது உடலைப் பேணி காக்கவேண்டும்

 மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதாலும் உடற்பயிற்சி,நடை பயிற்சி  தியானம், யோகா போன்ற  அவசியமான பயிற்சிகளுடன் கீரை,காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்வதாலும்  நமது உடல் வலிமையைச் சரிசெய்து கொள்ளமுடியும். மேலும் தொடர்ந்த எட்டு மணிநேர நல்ல உறக்கமும் இருக்க வேண்டும்.

ஆண்-பெண் உடலுறவு என்பது மிகவும் முக்கியமான அவசியமான மருத்துவரின் ஆலோசனையுமான ஒன்று பெரும்பாலான ஆண்களும் பெண்களும் பிள்ளைகள் பிறந்து வாலிப வயதை எட்டியதும் உடலுறவு என்பது அவசியமில்லாத ,தவிர்க்கவேண்டியாதாய், தவறான செயலாய் நினைப்பது  தவறென்று  மருத்துவர்கள் சொல்வது உண்மையானதே.

திடீரென  உணவுக்கட்டுப்பாடு,மன உளைச்சல் ,உடற்பயிற்சி இல்லாமை  சரியான நேரத்தில் உணவு உண்ணாமை,வாய்க்கு ருசியான கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை உண்பது  மது,சிகரெட் போன்ற காரங்களாலாலும் தூக்கமின்மை,அசதி போன்றவற்றால் உடல் பலவீனமாகி  உடலுறவின்போது விருப்பமின்மை ,எழுச்சி இல்லாமல் இயலாமை ஏற்பட்டு  வேண்டாத விஷயமாகி அதிகக் கொழுப்பு ரத்தத்தில் சேர்ந்து இதுவும் மாரடைப்புக்கு வழிசெய்கிறது.

இதய நோயைத் தவிர்க்கப் பல காரங்கள் இருந்தாலும் பெண்களால் இதற்குத் தீர்வு காணமுடியும்.ஆண்கள் சோர்வுற்றிருக்கும்போது ஆறுதலான அவசியமான ஆலோசனை சொல்லி மருத்துவ உதவிக்கு அழைத்துச செல்ல வேண்டும்.உடற்பயிற்சியை வலியுறுத்தி நல்ல ஆரோக்கியமான உணவுகள்,பழம் ,உலர்ந்த கொட்டைகள்(முந்திரி,திராட்சை,பாதாம்) கொடுக்க முன்வரவேண்டும். இவ்வாறான வழிகளில் மாரடைப்பு நோயினால் மரணம் ஏற்படுவத் தவிர்த்து ஆரோக்கியமாய் நீண்ட நாட்கள் வாழமுடியும்.

எல்லாக் குடும்பத்திலும் ஆண்களின்  பங்கு தவிர்க்க முடியாதப் பங்களிப்பு அவசியமாகும்.நமது நாட்டின் கலாச்சாரம் பண்பாடு தவிர்த்துக் குடும்பத்தின் மேன்மை பிள்ளைகளின் கல்வி,குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு பெண்களைவிட எல்லா ஆண்களுக்கும் உண்டு அதனால்தான்  எல்லா நல்ல கெட்ட காரியங்களில் கூட ஆண்களைப் பிரதானமாக வைத்தே செய்யப்படுகிறது. எனவே பெண்களே ஆண்களின் நலனில் எப்போதையும் விட  நோயுற்றபின் அதிக அக்கறையுடன் கவனித்து மகிழ்வாய் வாழுங்கள்

(இது எனது சொந்தக் கருத்து.)


Saturday, 28 December 2013

பள்ளிச் செல்லும் பிள்ளைகளே


பள்ளி செல்லும் பிள்ளைகளே
பாடம் படிக்கப் போறீங்களா
நல்ல செய்தி அறிவுரைகள்
நாளும் கற்கப் போறீங்களா

சொல்லக் கேட்ட செய்திகளை
சொல்லி வைத்த உண்மைகளை
மெல்ல மெல்ல உள்மனதில்
மிகவும் நன்றாய் சேர்த்திடுங்கள்

தாத்தா பாட்டி சொல்வதிலே
தமிழில் சொன்ன கதைகளிலே
படித்தால் தானே புரிந்திடும்
பள்ளியில் இதையும் படிப்பீரே

உலகம் முழுவதும் உங்களுக்காய்
உரிய முறையில் எழுதியதை
பலதும் கற்றுப் பயனடைவீர்
பாரினில் சிறப்பாய் இருந்திடுவீர்

இதையே அனைத்து ஆசிரியரும்
எடுத்துச் சொல்லி மாணவர்க்கும்
கதையில் உள்ள உண்மைகளை
கற்றுத் தெளிய  வைத்திடுவீர்

உள்ளம் மகிழப் படித்திடுங்கள்
உண்மை நிலையும் அறிந்திடுங்கள்
உலகம் சிறக்க வாழ்ந்திடவே
உயர்ந்த களமே அமைப்பீரேWednesday, 25 December 2013

வேலைக்கு ஆட்கள் தேவை

வேலைக்கு ஆட்கள் தேவை ,ஆண்-பெண் ,அதிகச் சம்பளம், ஏ.சி வசதியுடன் வேலை வாய்ப்பு,தங்குமிடம் உணவு இலவசம்,குறைந்த நேரம், அனுபவமில்லாத,குறைந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்,வாகனம் இலவசம்,குழந்தைகள் காப்பகம் உண்டு, போனஸ் ,வீட்டுவாடகை ,
குடும்பத்துடன் தங்குமிடம் இலவசம் போன்ற  பல சலுகைகளுடன் அழைத்தாலும் உள்ளூரில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

ஆனாலும் மும்பை,குஜராத்,டெல்லி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா  போன்ற வெளியூர்களுக்குச் சென்று அங்குக் கடுமையாக உழைத்தும் அந்தந்த ஊர்களில் தங்கியும் வேலைச் செய்கிறார்களே ஏன் அப்படி இங்கு நம்மூரிலேயே ஏன் உழைக்க முன்வருவதில்லை .பல நேரங்களில் கொத்தடிமை மீட்பு ,அங்குத் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள்,சம்பளம் கொடுக்கவில்லை  போன்ற எல்லாப் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளூரில்  வேலைசெய்வதில்லை 

இது ஏன்? யாரால் ? எப்படி? இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதோ? ஏழ்மை என்பதே தமிழ் நாட்டில் இல்லையோ? அல்லது தொழில் வளம் மிகுந்த நிலையில் உள்ளதோ?.
தமிழர்களின் பொருளாதார நிலை  உயர்ந்து விட்டதோ? இப்படி எண்ணற்ற கேள்விகள் என்மனதில் எழுகிறது ,உண்மையா? உங்களுக்கும் இதுபோல் மனதில் கேள்வி  வருகிறதா? இல்லையா?

இன்று தமிழகத்தில் எல்லா மக்களும் மகிழ்ச்சியாய் உயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை ஆனாலும் இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை அதனால் தொழிலில் மந்த நிலை ஏற்படுகிறது உற்பத்தி குறைச்சல் ,ஏற்றுமதி குறைச்சல் ,விவசாயம் செய்வதற்கும்  ஆட்கள் இல்லாமல் இருப்பதாகப் பேசப்படுகிறது.ஆனாலும்  மக்கள்  வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று பெரும்பாலான தொழில் நகரங்களில் வெளியூர் ஆட்கள் வேலைச் செய்து வருகிறார்கள் அதுவும் குறைந்த சம்பளத்துடன் அதிக நேரம் வேலை,கடுமையான உழைப்பு  இருந்தாலும் நிச்சயமான வேலை நிரந்தரமாய்க் கிடைக்கிறது. பணியிடம் அருகிலேயே தங்குமிடம் ,பள்ளி ,
போக்குவரத்து வசதி போன்ற இன்னபிற சலுகைகளுடன் மகிழ்ச்சியாய்க் குடும்பத்துடன் வேலைச் செய்து வருகிறார்கள்.

வெளியூர் ஆட்களை நேரடியாய் நியமனம் செய்யாமல் குத்தகை ஊதிய அடிப்படையில் வேலைகள் விடப்படுவதால் முதலாளிகளுக்கு அவர்களால் எந்தப் பிரச்சனையுமில்லை.சம்பளப் பட்டுவாடா,  ,போனஸ்,ஊதிய உயர்வு ,சீருடை,சிறப்பு ஊதியம் ,விடுமுறை,இதர பல சலுகைகள் போன்ற பல  முதலாளி-தொழிலாளி பிரச்சனையின்றியும் இருப்பதால் நிம்மதியாய்த் தொழில் நடத்த முடிகிறது என்ற வாதமே பெரும்பாலான  முதலாளிகளுக்கு வசதியாய் உள்ளது. 

இதற்குப் பல காரணங்கள் சொன்னாலும் ரயில்,பஸ், போன்ற போக்குவரத்து வசதிகளும் .மேம்பட்ட சாலை வசதியும் ஒரு காரணம் என்றே எனக்குத் தோணுகிறது.இந்தியாவில் எந்தப் மூலையிலும் வேலைக் கிடைத்தால் மகிழ்ச்சியே என்று மற்ற ஊர்களுக்கு சென்று அங்கும் கடுமையான வேலையே செய்து உள்ளூர் மக்களின் பழைய  பழக்கவழக்கங்கள் இன்றி சுதந்திரமான சூழ்நிலை வேண்டியே பலரும்  சென்று விடுவதால் உள்ளூர் வேலையாட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவே எண்ணுகிறேன்.

ஆனால் ஒருசிலரே இதனால் மேன்மையான வாழ்க்கையைத் தொடருகிறார்கள்,சிலரோ எனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி வேலைக்கு செல்வதைத் தவிர்த்து வீணான பிரச்சனைகளுக்கு ஆட்பட்டு விரக்தியான நிலையில் தானும் கேட்டு பிறரின் மனநிம்மதியையும் கெடுத்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

வெளியூர் மக்கள் இங்கு வந்து வேலை செய்யும்போது நம்மூர் மக்களுக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது.இதில் யோசிக்க வேண்டிய விஷயமென்றாலும்  சமூகத்தில் தானும் மதிக்கப்பட வேண்டும் எந்த வேலையானாலும் பரவாயில்லை என்ற மனமாற்றம்  இருந்தால் எல்லோரும் ஒற்றுமையாக சிறப்பாய் வேலை செய்யவும் வாழவும் முடியும் அயல் நாட்டினர் இங்கு வந்து வேலை பார்த்து செல்லும்போது நம்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.

Monday, 23 December 2013

விரும்பி உன்னை முத்தமிட...

நண்பரையே இன்று காணவில்லை
நாளும் கடந்து போகவில்லை
எந்நிலையை எடுத்துச் சொல்ல -அவரன்றி
எவரிடமும் மனது இல்லை

பொன்பொருளைக் கேட்டதில்லை
பெரும் தொகையும் தருவதில்லை
என்னிடமும் கிடைப்பதற்கு வழியுமில்லை-அவரும்
எனக்கும் சுமையாய் இருந்ததில்லை

இரவிலின்று தூங்கவில்லை
இன்று மனதில் மகிழ்ச்சியில்லை
என்னவென்று புரியவில்லை -எப்படியோ
என்னிடம் அமைதி இல்லை

திரும்பி வரும் நேரத்தை நான்
திசையெங்கும் பார்த்திருக்கிறேன்
தெருவோரம் நின்று நானும்-உனக்காய்
தேடிவந்து  தவமிருக்கிறேன்

Saturday, 21 December 2013

இராய.செல்லப்பா அவர்களை வாழ்த்துவோம்          எனது நெருங்கிய நண்பரும் நமது வலையுலகில் "செல்லப்பா தமிழ் டயரி "மற்றும் "இமயத்தலைவன்" ஆகிய இரண்டு வலைப்பூக்களை வைத்திருக்கும் அன்பிற்குரிய திருவாளர்.இராய.செல்லப்பா அவர்கள் Corporation Bank ல் துணை பொது மேலாளராகவும் (AGM) பணியாற்றி ஓய்வுபெற்று இப்போது கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள்  எழுதி வருகிறார்.


         இவர் டெல்லியில் பணியாற்றியபோது டெல்லி தமிழ் சங்கத்துடன் இணைந்து பல கவியரகங்கள் பட்டிமன்றங்கள் நடத்தியும்  டெல்லித் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து அரியபணியாற்றியவர்.அப்போதே பல தமிழ் ஆர்வலர்களை டெல்லிக்கு அழைத்து  அவர்களைக் கௌரவித்து மகிழ்ந்தவர்.


         ஏற்கனவே இரண்டு கவிதை நூல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.தற்போதும் ஒரு "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் " என்ற கதைத் தொகுப்பையும் வெளியிடவுள்ளார்.மேலும் அகிலஇந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் தனது படைப்புகளை ஒலி & ஒளி பதிவிட்டிருக்கிறார்.


""அமரர் பிரபாராஜன் அறக்கட்டளை சார்பாக 'கலைமகள்' நடத்திய சிறுகதைப்போட்டியில்  'சாந்தி நிலவ வேண்டும்' என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு (ரூ.5000) கிடைத்துள்ளது. இதற்கான  விழா வரும்  29-12-2013  ஞாயிறு மாலை சென்னையில்  TAG Centre இல் நடைபெற உள்ளது.  கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் பரிசினை வழங்குகிறார்கள்""


  இந்த மகிழ்வான நேரத்தில் நாமும் இணைந்து திரு.செல்லப்பா  அவர்களை வாழ்த்துவோம்

  
           அவரது கைபேசி எண்; 9600141229- தொலைபேசி எண்.044-67453273..கவியாழி.

Thursday, 19 December 2013

உறவென்று சொல்ல வெட்கமடா...சொல்லாமல் கேட்காமல் சுயமாக
முன்வந்து கொடுக்கா உறவும்
சோம்பலாய் இருக்கையில் அறிவைச்
சொல்லாத அப்பாவும்  அம்மாவும்

இல்லாத போதும்  இயைந்து
எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும்
இருப்பதைக் கொடுத்துத் துணையாய்
இன்முகம் காட்டா நட்பும்

பொல்லாத நேரத்தில் புரியாத
போலியாய்த் தேவையென நடித்தே
தள்ளாத காரணம் சொல்லி
தாங்க வைக்கும் உறவும்

நிலைமை தெரிந்தும் வருந்தாமல்
நேரமும் பழிக்கும் மனைவி
வயதைக் கடந்தும் வேலையின்றி
வருந்தாத வாரிசின் அலட்சியமும்

 உறவென்று சொல்ல வெட்கமடா
உலகில் இதுவும் உண்மையடா
பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா
பிறப்பே தவறாய் எண்ணுதடா@@@@@ கவியாழி  @@@@@@Tuesday, 17 December 2013

கூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் ...........

கூட்டமாய்ச் சொந்தங்கள் அருகில் இருப்பர்
கொடுப்பதை வாங்கிடப் பலர் வருவர்
நோட்டமாய்க் கவனித்து நேர்வழி சொல்லாது-கெட்டும்
நோயுற்ற மனதையே குத்திக் கிழிப்பர்

வாட்டமாய் வாழ்கையில் வந்தே உதவிடார்
வழித்துணை யாருமே வந்திட மாட்டார்
வாழ்க்கையில் துன்பமாய்  வாழ்ந்திடும் போதிலே-இருந்தும்
வசவுமாய்ப் பழியுமாய்ச் சொல்லத் தயங்கிடார்

கூட்டணி சேர்ந்து பழித்தே  பேசுவர்
கூடுதல் சுமையாய்த் தனித்தே வைப்பர்
பாட்டனும் பேரனைப் பார்க்க மறுப்பர்-ஆனாலும்
பாசமாய் இருப்பதாய் அனைவரும் நடிப்பர்

ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார்
ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார்
ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில்
ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார்

கேட்டதைக் கொடுத்து உதவி செய்தால்
கேளிக்கை பேசலை நிறுத்தி கொண்டால்
வாழ்கையின் தத்துவம் விளக்கிச் சொன்னால்-நிச்சயம்
வணங்கியே கடவுளாய்  நன்றி சொல்வார்

இயன்றதைக் கொடுத்து உதவி செய்து
எதிர்காலத் தேவைக்கு  வழி அமைத்து
முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே
முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர்******கவியாழி******Monday, 16 December 2013

பெற்றோரும் பிள்ளைகளும் .......

          உறவு, உரிமை என்ற பந்தம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் மட்டுமே தொடர்வது. இந்த இரண்டும் செவ்வனே கடைபிடிக்க முடியுமானால்  இந்தப் பிறப்பும் இந்த உறவும் இனிமையாய் இருக்கும்.  இல்லையென்றால் சொல்லொணாத் துன்பமும் மனவலியுமே மிஞ்சும். பெற்றோர்கள், பிள்ளைகளின் நேர்மையான ஆசைகளை  வளர்ப்பதும் அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற முயலுவதும்  அவசியம்.

            பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமே தம் பிள்ளைகள்  நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, நல்லவிதமாக மணமுடித்து,   பேரக் குழந்தைகளுடன்  மகிழ்ச்சியாய்  இருந்தால் போதும்  என்பதே ஆகும்.  அதற்காக, அவர்களின் படிப்பு விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாகவேண்டிய  கட்டாயம் உள்ளது. 

            அவ்வாறு  படிக்கும் காலத்தில்  பொறுப்புடன் இருந்து  எதிர்காலத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்பட வழிகாட்டுவது  பெற்றோர்களின்   முதல் கடமையாகும். நல்ல உடை, உணவு, சேமிப்பு, சுகாதாரம் நட்புடன் கூடிய நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் அறிவுறுத்துதல் பெற்றோர்களின் அடுத்த கடமையாகும்.

              தாங்கள் வசதியின்றி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்திருந்தாலும் அல்லது  நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையின்றிப்  படித்திருந்தாலும் தமது பிள்ளைகளை  முன்னேற்ற வேண்டியே நல்ல பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கச் செய்ய முன்வருவார்கள். அவ்வாறாகப் படிக்கும் காலத்தில் பிள்ளைகளிடம் தெரியும் பழக்க வழக்கங்களே எதிர்காலத்தில் அவர்களை உயர்த்தவோ தாழ்த்தவோ வரும் காரணிகளாய் இருக்கும். அப்போதுதான் இருவருக்குமான பிணைப்பின் அக்கறை தெரியும்.

         செய்யவேண்டியதையும் செய்யக்கூடாததையும் கட்டாயமாய்த்  திணிக்கும் நிலைக்கு பிள்ளைகள் இருப்பார்களேயானால் அவசியம் கடும் முயற்சியுடன் அவர்களுக்குச் சொல்லவேண்டியது அவசியம். அவ்வாறு சொல்லத் தவறினால் பிள்ளைகள் எதிர்காலத்தில் மிகுந்த துன்பமும் ஏமாற்றமும் அடையும்  நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வேதனைக்கும் விரக்திக்கும் ஆளாகும் நிலையும் ஏற்படும். எனவே பிள்ளைகளை வளர்ப்பது  மட்டுமே கடமையாகாது. அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தடம் அமைத்துத் தருவதும் பெற்றோரின் கடமையாகும்.

        இளவயதில் பொறுப்பையும் எதிர்காலத் திட்டங்களையும்  அறியாத  பிள்ளைகள் எப்போதுமே தம்மைத் திருத்திக்கொள்ளும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள். அப்போது பெற்றோர்களின் அறிவுரையைக் கேட்டுத் தெளிவது பிள்ளைகளின் உரிமைகளில் ஒன்றாகும். பெற்றோரைத்தவிர, உற்றாரைத்தவிர மற்றோர்களால் நல்ல நேர்மையான நம்பகமான வழிகாட்டுதலைத் தரமுடியாது என்பதுதான் உண்மை.

          பெற்றோர் வழியில் தொடர்ந்து  செல்லும் பிள்ளைகள் நிச்சயம் எங்கும் எதிலும் கஷ்டமான நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள். அப்படி ஏதேனும் தவறு நடந்தாலும் பெற்றோர்களே அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அவசியங்களை உணர்ந்து, வேண்டிய உதவிசெய்து, நல்லநிலையடைய  உடனிருந்து காப்பார்கள்.*****கவியாழி*****


Sunday, 15 December 2013

முத்துக்கள் பத்து.(முகப்புத்தகப் பதிவுகள்)

அன்பு எல்லா உயிரிடமும் இருக்கும்
அனுதாபம் மனிதனுக்கு மட்டுமே irukkum
________________________________________

இளமைக்கும் முதுமைக்கும் வலையே
இன்பமான தளமாக உள்ளது
எத்திசையும் உறவு கொள்ள
ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது
____________________________________

நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய் -கஷ்டமென
நட்பின் ஆழத்தை அறிவாய்

_____________________________________

பணத்தால் எல்லாம் வாங்கலாம்
நல்ல குணத்தால் எதையும் வெல்லலாம்

_______________________________

தருகின்ற இரைச்சலும் தவிர்த்திடவே
தலையில் கவசம் அணிவீரே
_____________________________________

ஏமாந்ததும் ஏமாற்றியதும் நீ தானே?

_____________________________________

மனிதன் இறந்தபின்பு மறுபிறவியில் 
எந்த சாதியில் சேர்க்கப் படுகிறான்?

____________________________________

இரசாயண கலவையே மனிதன்.
உயிர்போன பின்பு குப்பைதான்

____________________________________

இரவுக்கும் பகலுக்கும்
இமை மட்டுமே சாட்சி
இமைகளை மூடிவிட்டால் ஏது காட்சி?

______________________________________

துயரமும் வாழ்கையில் பார்த்தவன்
துன்பத்தை உணர்ந்து துடித்தவன்
இன்பத்தில் எல்லாமே மறந்து
இனிமையால் எப்போதும் மகிழ்கிறான்

____________________________________

(முகநூலில் நான் சொன்னவை)
#####(கவியாழி)#####

Friday, 13 December 2013

ஊரே கும்பிடும் உத்தமி .........

தனியாக யாரும் சென்றால்
துணிவாக எதிர்த்து நிற்கும்
தர்பாரும் விலகிச் செல்ல
தரையிலே ஊர்ந்து செல்லும்

துணிவுள்ள மிருகம் அல்ல
துண்டு கயிறு போலவுள்ள
பணிவான உயிர் அதுவாம்
பயந்து சென்று ஓடுவதாம்

ஊரையே காலி செய்யும்
உருண்டு நீண்ட மேனியாய்
ஒருவருமே பார்க்காத தனியிடமாய்
ஒளிந்தே பயந்தே வாழ்ந்திடுமாம்

போருக்குப் போவோரை எதிர்த்திடுமாம்
பொல்லாத திரவியத்தால் கடித்திடுமாம்
பேருக்குச் சத்தமாய் இருந்தாலும்
பயமாக ஒதுங்கிச் சென்றிடுமாம்

வீறிட்டுக் கத்தி பயந்தால்
விரைவாகத் தானும் பயந்தே
வேர்விட்டு விஷத்தைக் கக்கிடும்
விரைவாக உயிரைப் போக்கிடும்

ஊருக்கு வெளியில் வாழ்ந்திடும்
உண்மையில் பயந்து ஓடிடும்
நீர்வயல் ஓரங்களில் வாழ்ந்திடும்
நல்லவளாய் ஊரே கும்பிடும்


Thursday, 12 December 2013

நல்லதைச் சொல்லிடும் நட்பு

நல்லதைச் சொல்லும்  நட்பு
நாடகம் போலவே இன்றி
நன்மையே செய்திடும் வல்லமை
நட்புக்கு உண்டாம் உண்மையே

எல்லையே இல்லையாம் அன்புக்கு
ஏக்கமாய் இருக்குமாம் பார்ப்பதற்கு
தொல்லையே இல்லாத நட்பினால்
துன்பமும் விலகிடும் இன்பமாய்

உள்ளதைக் கொண்டே தொடருமாம்
உண்மையைப் பேசியே மலருமாம்
ஊரும்  மாறிப் போனாலும்
உண்மை நட்பு மாறாது

பணத்தால் விலையோ போகாது
பண்பால் மறக்கக் கூடாத
மனத்தால் அன்றி நல்லன்பை
மனிதன் பெறவே முடியாது

நல்லவை மட்டுமே செய்யுமாம்
நன்மைத் தீமையைச் சொல்லுமாம்
எல்லையைத் தாண்டிய அன்புக்கு
எளிதில் பிரிவும் இல்லையாம்

பிள்ளைகள் பிறந்த பின்புமே
பேரனைப் பார்த்துச் சொல்லுமாம்
 நடந்ததை மகிழ்ந்ததைச் சொல்லியே
நகைச்சுவை பொங்கச் செய்யுமாம்


-------கவியாழி--------Wednesday, 11 December 2013

சீக்கிரம் எழுந்து விடுவாள்.........

ஏக்கம் மனதில் வளர்த்தே
எப்போதும் நம்மைக் காத்து
தூக்கம் கெட்டும் நமக்காய் -வாழ்வைத்
தொலைக்கும்  உத்தமி அவளே

ஆத்திரம் மனதில் வந்தால்
அதையும்  உள்ளுள் வைத்தே
அன்புடன் அடக்கி இருந்தே-நம்மை
ஆசைக் கோபமாய்க் கடிவாள்

சாத்திரம் அனைத்தும் படித்து
சரியெனப் பட்டதை மட்டுமே
சீக்கிரம் விளக்கிச் சொல்லி-கதையாய்
சிறந்திடப் புரிந்திட வைப்பாள்

மிச்சம் மீதியைத்  தின்று
மேனியைக் கெடுத்தும் நமக்காய்
உச்சி முகந்தே அருகில்-தொட்டு
உண்மை மகிழ்ச்சியைத் தருவாள்

சீக்கிரம் எழுந்து விடுவாள்
சேவைகள் பலதும் செய்வாள்
சிந்தனை நமக்காய்ச் சுமந்து-மனதால்
சிரித்தே சமைத்துத் தருவாள்

சீருடன் உடம்பை மதியாள்
சீக்கிரம் தூங்க மாட்டாள்
பாத்திரம் அனைத்தும் கழுவி-இறுதியில்
படுத்து உறங்கச் செல்வாள்அவள்தான் பெற்ற அன்னை.....Saturday, 7 December 2013

உடலும் கழிவாய் மாறும்...

உடலும் கழிவாய் மாறும்
உயிரும் பிரிந்து போனால்
உணர்ந்தே நாளும் வாழ்ந்தால்
உண்மை வாழ்க்கை  புரியும்

தூக்கி செல்ல நால்வர்
துவண்டே அழவும் சிலபேர்
தொடர்ந்தே வந்திட உற்றார்
தொலைத்த குடும்ப உறவோர்

வாழ்ந்த வாழ்க்கை  போற்றி
வாழ்த்தும் நண்பர் கூட்டம்
வணங்கிச் செல்லும் மக்கள்
வருந்தி அழைத்தால் வருமா

ஆக்கம் செய்த பணிகள்
அனைத்தும் முன்னே வருமாம்
அன்பால் செய்த செயலே
அருகில் நின்று அழுமாம்

ஏக்கம் இல்லா வாழ்வும்
ஏழ்மை உணரா உயர்வும்
என்றும் நன்மை செய்யா
எவரும் நம்மை மதியார்

தூக்கம் விழித்துப் பார்க்கத்
தோழமை வேண்டும் உலகில்
தொடர்ந்தே குழிவரை வருவோர்
துயரம் கண்டிட வேண்டும்

உயிரும்  உள்ள போதே
உரிமை  கொண்டோர் மகிழ
உணர்வை மதித்துச் செய்தால்
உடலும் மனமும் அழுமே

எல்லா உயிரும் இதுபோல்
ஏந்தல் செய்வது மில்லை
பொல்லா மனித இனமே
புரிந்தால் வாழ்க்கை நலமே


---------கவியாழி----------
Friday, 6 December 2013

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் ......

பாம்பும் தேளும் பூரானும்
பார்த்தே ஓடி மறைந்திடுமாம்
பகையாய் நினைத்தே அடித்தாலே-மிரட்டிப்
பயந்தே நம்மைக் கடித்திடுமாம்

வீம்பாய்க் காளையை மிரட்டினால்
விரைந்தே வந்து முட்டிடுமாம்
விலங்குகள் பலதும் அதுபோல-மிரண்டு
வீணாய் நம்மைத் துரத்திடுமாம்

வேண்டா வெறுப்பாய் பழகினால்
வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில்
வீணே சண்டை வந்திடுமாம்

ஈன்ற  பொருளைக் காத்தாலே
இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம்
இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால்
இருப்பதைக் கொடுப்பதும்  நலமாகும்

சோதனை  துயரம் ஏழ்மையுமே
சாதனை செய்ய வழிதருமாம்
சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய்
செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம்

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
எதிராய் காரியம் கெட்டிடுமாம்
எதிலும் பொறுமை  காத்தாலே-அதனால்
எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்


......கவியாழி........Thursday, 5 December 2013

அவளுக்கு இப்படி செய்வது ஆனந்தமா?கோபமா ?

ராத்திரி நேரத்திலே குளிருது
ரகசிய ஆசையும் தொடருது
போர்த்திக்கத் தோணுது தேடுது
போர்வைய பார்த்ததும் தோணுது

தனிமையை இப்போ வெறுக்குது
தலைவியைத் துணைக்கு அழைக்குது
இளமைக்குத் தேவையும் கிடைக்குது
இனிமையும் சிணுங்குது தொடங்குது

இதழ்களை வருடிட விரும்புது
இருவிரல் விலக்கிடத் துடிக்குது
இன்னும் அதிகமாய் இருக்குது
இமைகளும் ரகசியம் சொல்லுது

அணைத்திட்ட இடைவெளி குறையுது
ஆசையும் தொடர்ந்திடச் சொல்லுது
அவளுக்கு இப்படிச் செய்வது
ஆனந்தக் கோபமாய்த் தோணுது

அடுத்ததை மகிழ்ச்சியாய் முடித்ததும்
ஆசையும் அடங்குது முடிந்தது
வாழ்கையில் இன்பமாய் இருப்பது
வளமாய்ச் சேர்த்திடும் மகிழ்வன்றோ
Tuesday, 3 December 2013

மகிழ்வாய்ப் பாராட்டுங்கள்

           எப்போதும் எல்லோரையுமே மகிழ்வாய் பாராட்டுங்கள் அப்போதுதான் அவர்களின் செயல் அங்கிகரிக்கப்படுகிறதுப் பின்பே அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது.அதனால் செய்த செயலைச்  சீர்தூக்கிச் சிறப்பாய் செய்தோமா இல்லை  இதைவிட இன்னும் சிறப்புறச் செய்யலாமா என்ற சுயப்பரிசோதனைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும்.

             சிறுபிள்ளைகளும் சரி,மாணவர்களும் ,நம்முடன் வேலைசெய்யும் சக ஊழியர்களும் .பழகும் நண்பர்களும் அல்லது வயதில் மூத்தப் பெரியவர்களும் சரி இம்மாதிரியான அங்கிகாரத்தை எதிர்பார்பார்கள் அல்லது செய்த செயல் அவர்களை எப்படி மகிழ்வித்தது என்று நினைத்து  பாராட்டியதை எண்ணி மகிழ்வார்கள்.

           ஒருவர் தான் செய்யும் செயலில்விருப்பப்பட்டோ  மனம் ஒன்றியோ அல்லது செய்யவேண்டிய கட்டாயத்திலோ செய்யும்போது பாரட்டுக் கிடைக்குமேயானால் அதைவிட ஆனந்தம் இருக்காது.ஒவொரு செயலுக்கும் ஒவ்வொருமுறையும் பாராட்டுக்கிடைக்கும்போது நிச்சயம் மனம் மீண்டும் மீண்டும் செய்யும் உத்வேகத்தைத்தரும்.

          உதாரணமாய் ஒரு அவசர அவசியமான வேலைக்காக வெளியூர் சென்று வரவேண்டும் என்ற கட்டாயம் வருகிறது விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ சென்றுதான் வரவேண்டும் என்ற சூழ்நிலையில் புறப்பட்டு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் அட இவ்வளவு சின்ன  வேலைக்காகவா சிரமப்பட்டோம் என்று எண்ணத்தோன்றும். அதற்குப்பின் அனுப்பியவர் கொடுத்த பாராட்டு பயணக் களைப்பையே மாற்றும் சந்தோசமே மிஞ்சும்.

         மாணவர்களுக்கு எப்போதுமே வீட்டுப்பாடம் செய்வதானால் உடனே செய்ய விரும்பமாட்டார்கள் ஆனால் சீக்கிரம் முடித்தால் நாம் வெளியே செல்லலாம் என்று சொன்னவுடன் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக  சந்தோசமாய் செய்து முடிப்பார்கள்.அதுபோலவே மதிப்பெண் பட்டியலைக் கொடுத்தவுடன் ,நீ நல்லாத்தான் செய்திருப்ப உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்லிப்பாருங்கள் உடனே அடுத்தமுறை இன்னும் நிறைய மதிப்பெண் வாங்குகிறேன் என்று பதில் சொல்லுவார்கள்.எனவே நீங்கள் கொடுக்கும் ஊக்கமே இன்னும் சிறப்பாய் மதிப்பெண் கிடைக்க எதுவாய் இருக்கும்.

         மனைவியிடம்  சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பரவாயில்லையே முன்பைவிட இப்போது இன்னும் சிறப்பாய் இருக்கிறது ஆனால் கொஞ்சம் உப்பு மட்டும் தூக்கலாய் இருக்கிறது என்று சொன்னவுடன்.மகிழ்ச்சியடைவார்கள்.
எல்லா வீட்டுத் தலைவிகளும் வெளியில் சாப்பிட விரும்பமாட்டார்கள் காரணம் அதிக செலவும் அதே நேரம் சுவையும் இருக்காது  என்றும் அவர்களே முன்வந்து வீட்டிலேயே சமைத்துத் தருகிறேன் என்று சொன்னதும் நீ சொல்வதும் சரிதான் இந்தசெலவை நாம் வெளியூர் சுற்றுலாவுக்கு  வைத்துக்கொள்ளலாம் என்றால் மிகவும் மகிழ்வாய் இருப்பார்கள்.

           அடுத்தநாள்  பயண பட்டியலே முன்வைத்து எங்கெங்கு செல்லலாம் தங்கலாம் என்ற எல்லா விபரங்களும் நமக்குத் தருவார்கள்.நமக்கும் அவர்களின் விருப்பமறிந்து செல்வோமேயானால் நமக்கு வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்.ஒவ்வொரு இடமும் வரும்போது அதன் சிறப்புகளைச் சொல்லி  உற்சாகமாய் இருப்பார்கள்.நம்மையும் மகிழ்வாய் வைத்திருப்பார்கள்.

           இங்கு நாம் விட்டுக்கொடுக்கும் எல்லா விஷயங்களும் மற்றவரை சந்தோசமடையவே செய்கிறது  அதனால் நமக்கும் காலம் நேரம் தவிர்க்கப்பட்டு இருவருக்குமே இன்பத்தையும் நெருக்கத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.எனவே ஒவ்வொருவரும் நமக்கு அருகிலுருப்பவர்களைப் பாராட்டுக்கள் நீங்களும் மகிழ்வாய் இருக்க உதவும் எனவே எப்போதுமே மகிழ்வாய்ப் பாராட்டுங்கள்
     
       
----------கவியாழி----------Sunday, 1 December 2013

கருவைச் சுமந்தவள்

கருவைச் சுமக்கச் சொல்லி
கடனாய்த் தந்தவன் ஒருவன்
கருவே உருவாகி வளர்த்தும்
கடமை என்றே கொடுத்தால்

உடமைப் பொருளும் பிடுங்கி
உணவாய்த்  தின்பவள் ஒருத்தி
உரிமை  கொண்டாடி மகிழ
உடலைத்  தந்த அவனும்

உயிரைக் கொடுத்தும் மயங்கி
உற்றார் மறுத்த பிள்ளை
பெற்றோர் கடமை மறந்து
போதையில் வாழ்தல் முறையா

இதனை எல்லா மதங்களும்
இழித்தே கூறி வந்தாலும்
எப்படி மகிழ்ந்து வாழ்வாய்
ஏனோ மறந்தாய் இகழ்வாய்

மனிதன் மட்டும் இதனை
மறந்தே வாழச் சொல்லும்
கடமை துறக்கச் சொன்ன
கடவுள் உண்டா மகனே

...............கவியாழி..........
Saturday, 30 November 2013

கடந்தும் செல்வது நலமோ.............

எத்தனைப் பெரிய மனிதர்கள்
எப்படி எளிமையாய் இருந்தே
சத்தியம் தவறா வழியில்
சமத்துவம் போற்றி  வாழ்ந்தே

நித்தமும் மகிழ்வாய்  உணர்ந்த
நேர்வழி நெறிமுறை வளர்த்தே
சித்தமும் சிவனுமாய்ப் போற்றிச்
சீராய்த் திருத்திச்.சொல்லி

குற்றமும்  தவிர்க்க வேண்டிக்
குறைகளைக் கண்டு களைந்தே
அப்பனும் பாட்டனின் வழியில்
அன்று வாழ்ந்ததைச் சொல்லி

சிற்பமாய் அறிவால் செதுக்கிச்
சீராக்கி நேர்வழியில் வாழ
அற்பமாய்ச் செய்யும் தவறும்
அறியச் சொல்லிக் கொடுத்தே

தப்பேதும் இல்லா வாழ்வை
தினமும் சொல்லி வந்தே
முப்போதும் மகிழ்ந்து வாழ
முறையாய் சொல்லி வாழ்த்தினர்

இப்போது நிலைமை இல்லை
இருப்பதோ நிலைமை  தலைகீழ்
தப்பதை உணர்ந்து வருந்தி
தகையோரை மதிப்போர் உளரோ

கற்பதை முறையாய் சொல்லாக்
கல்வியால் வந்த வினையோ
காலத்தை உணர்ந்தே நாமும்
கடந்தும் செல்வது நலமோ


Friday, 29 November 2013

கார்த்திகைக் குளிரில் காதல் .......

கார்த்திகைக் குளிரில் காதல்
கண்ணனின் அருகில் மகிழ்வாய்
காரிகைக் கூட்டமும் இணைந்தே
காத்திடும் காரணம் ஏனோ

பலரும் சூடாய் இருக்க
பருவம் மாறிய மழையும்
பாவையர் மனதும் இனிக்க
பயனாய் இருப்பதும்  தவறா

பூத்திடும் பூக்கள் கூட
பூவையர் தலையில் சூடி
புரியும் லீலைகள் காண
புகலிடம் தேடி வருமாம்

பூச்சிகள் ஒன்றாய் கூடியே
பூத்திட்ட மலர்களைக் கண்டு
போட்டிகள் நடத்திட வேண்டி
புதிதாய் ஸ்வரங்கள் தருமாம்

பூத்த  மலர்களைத் தேடி
புறப்பட்ட வண்டினைப் போல
புயலாய்க் கண்ணன் வந்தே
புதுமை அனுபவம் தருவான்

விலங்குகள் ஒன்றாய் அமர்ந்து
வேடிக்கை பார்த்தே சிரித்தே
வீதியில் ஆடி இன்பமாய்
விரும்பியே மகிழ்வாய்  இருக்கும்

இரவில் இன்றி பகலிலும்
இனிமை விரும்பும் இனங்கள்
இமையால் பேசும் கண்ணன்
இனிமை தருமே கார்த்திகை

[[[[[[[[ கவியாழி]]]]]]]]Thursday, 28 November 2013

சித்தன் அருளே வேண்டும்.........

சித்தன் அருளே வேண்டும்-தினம்
சிந்தனை செய்யவே வேண்டும்
நித்தமும் நினைக்க வேண்டும்-மனதில்
நிம்மதி கிடைத்திட வேண்டும்

சத்தியம் போற்றிட வேண்டும் -நல்ல
சங்கதி செய்திட வேண்டும்
பத்தியம் இருந்திட வேண்டும்-எனக்கு
பகலவன் துணையும் வேண்டும்

நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை
நேசித்தே போற்றிட வேண்டும்
சீர்மிகு நட்பும் வேண்டும் -என்னை
சிரம்போல் காத்திடவேண்டும்

கஷ்டமும் தீர்ந்திட வேண்டும் -எல்லோர்
கவலையும் தீர்த்திட வேண்டும்
இஷ்டமாய்ச் சிவனை நினைக்கும் -நிலை
இனிதே நாளும் வேண்டும்

எல்லா  வளமும் பெற்று -வறுமை
இல்லா நிலையே வேண்டும்
பொல்லா எதிரியும் மாறி -மீண்டும்
நட்பினைத் தொடர்ந்திட வேண்டும்

கொடுத்து உதவி செய்ய-பணம்
குறையே இன்றி வேண்டும்
கொடுக்கும் மனமே எனக்கு-நாளும்
குறை வில்லாமல் வேண்டும்

குறைகள் அகன்றே தீர-மனம்
குளிர வணங்கிட வேண்டும்
குடும்பம்  மகிழ்ந்து வாழ-சித்தன்
கூடவே துணையாய் வேண்டும்


########கவியாழி########Wednesday, 27 November 2013

ஷேர் ஆட்டோ பயணம்......ஆபத்தா?ஆதாயமா?

இன்றைய விஞ்ஞான காலத்திலும் பலபேர் தங்களது கார்,பைக் போன்ற சொந்த வாகனங்கள் இருந்தாலும் பஸ்,ரயில் போன்ற போக்குவரத்து வசதி மிகுந்து காணப்பட்டாலும்  ஷேர் ஆட்டோவை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே சொல்லலாம்.

ஷேர் ஆட்டோ கிராமத்திலும் சரி  நகரத்திலும் சரி  இதன் பயன்பாடு அவசியமான ஒன்றாய் விளங்குகிறது.பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள்,
அலுவலகம் செல்பவர்கள் காய்கறி சந்தைக்கும் செல்பவர்கள் ,கூலித் தொழில் செய்வோர்கள் ,மருத்துவமனைக்கும் செல்பவர்கள் போன்ற எல்லோரும் விரும்பும் அவசியம்  இந்தவாகனத்தைப் பயன்படுத்த தவறுவதில்லை.

இது பணத்தை மிச்சப்படுத்தவும் விரும்பிய இடத்தில் இறங்கவும் பயமின்றி அதிக மக்களுடன் செல்லவும் வசதியாய் இருக்கிறது..பஸ் வசதி இல்லாத இடங்களிலும்,நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்ற ஆட்டோக்களின் அதிக கட்டண வசூலைத் தவிர்க்கவும் இதன் பயன்பாடு மெச்சத்தகுந்த வகையில் உள்ளது. கிராமங்களில் எல்லோருமே உபயோகப்படுத்துகின்றனர்

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றுவதால்  பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.நெரிசல் அதிகமாகி இடவசதி குறைவாகவே இருக்கும் .ஆண்பெண் பாகுபாடின்றி இடநெருக்குதலில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் உரசிக்கொண்டும்  மௌனமாகவே பயனிக்கவேண்டியுள்ளது.இருந்தாலும் குடிகாரர்கள் பான் போட்டும் ,
வெற்றிலைப் புகையிலை நாற்றத்துடனும் வருவோரைத் தவிர்க்க இயலாமல் இருக்கும்.

போக்குவரத்துத் துறையின் அனுமதியானது பயணிகளின் எண்ணிக்கை  மற்றும் ஓட்டுனரையும் சேர்த்து 3+1,7+1  என்று இருந்தாலும் அதையும் மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றுவதால் அங்கங்கே போக்குவரத்து போலீசார்,வாகன தணிக்கை அதிகாரிகளின் எச்சரிக்கையுடன்  அபராதமும் விதித்து  ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

சாலை விபத்துகளில் அதிக எண்ணிகையில் பாதிப்படைவது இம்மாதிரியான  ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகள் தான். பெருபாலான ஓட்டுனர்களின்  பணதேவையினால் மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு சுயநலத்தால் அதிகப்பயனிகளை ஏற்றுவதால் விபத்துநேரத்தில் உயிர் உடமைக் காயம் போன்ற சேதாரம் அதிகமாகிறது.

விதிகளை மீறி ஓட்டுவது தெரிந்தும்  அவசியம் மற்றும் அவசரமாயும் சில நேரங்களில் பயனிக்கவேண்டியுள்ளது. காரணம் எரிபொருள் சிக்கனம் குறைந்த செலவு விருப்பமான இடத்தில் இறங்கவே இம்மாதிரிப்பயணம் வசதியாய் உள்ளது.சட்டப்படி தவறான பயணமானாலும் வசதிக்காகவும் இதில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாய் உள்ளது.


Tuesday, 26 November 2013

திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை விஜயம்

திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை  விஜயம் பற்றி திருமிகு.செல்லப்பா அவர்களின் விருப்பத்திற்கிணங்க நான் அவசியம் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

எனக்கு வியாழன் காலை பதினோரு மணியளவில் அலைபேசிச் சிணுங்கியது.நான் சென்னை வந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் முடிந்தால் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வாருங்கள் என்று  அன்பு கட்டளையிட்டார்
.( பெங்களூரில் இருந்தபோதே   சென்னை வருவது பற்றி சொல்லி இருந்தார்)

திரு.ரமணி அவர்கள் சென்னை வந்தால்  சொல்லுங்களேன் என்று திரு.செல்லப்பா அவர்களும் சொல்லி வைத்திருந்ததால் அவரிடம் தகவல் சொன்னேன்.அவர் உடனே ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருந்தாலும் சுமார் இரண்டு மணிக்கே மாம்பலம் ரயில் நிலையம் வந்துவிட்டார். இருவரும் அருகிலுள்ள ஏதாவதொரு ஹோட்டல் சென்று மதிய உணவை அவரோடு உண்ணலாமே என்று சொன்னார்.

சரியாக இரண்டுமணி முப்பது நிமிட நேரத்தில் திரு.ரமணி அவர்களும் வந்துவிட்டார்.மூவரும் மேற்கு மாம்பலத்திலுள்ள டாட்டா உடுப்பி ஓட்டலில்  (அப்போதுதான் ரமணி அவர்களைப் பார்த்ததும் ஒரு நடுத்தர வயது மங்கை ஆச்சரியப்படுத்தி விட்டார்.) உணவருந்தியப்பின் திருமிகு.புலவர்.ராமாநுசம்  அவரது  வீட்டை அடைந்தோம். புலவர் அய்யாவுக்கு ஆச்சரியம் என்ன இப்படி அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டீர்கள்  என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.


சிறிது நேரம் பேசிக்கொண்டிருத்தப்பின் எனக்கு அவசர அழைப்பு வந்ததால் நான் வெளியில் சென்று விட்டேன் .அய்யாக்கள் மூவரும் உரையாடி மகிழ்ந்தார்கள்..பின்பு மாலையில் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.அடுத்து திரு.பாலகணேஷ்  அவர்களையும் பார்க்க வேண்டுமென்றார்

பின்னர் எனது வீட்டில் கணேஷ் அவர்களின் வருகைக்காக காத்திருந்து கணேஷ் வந்ததும் மூவரும் சற்று பேசிக்கொண்டிருந்துவிட்டு மூவரும் தனித்தனியே சென்றது  இப்போதுதான் சொல்ல முடிந்தது.

தமிழ்க் குழும நண்பர்களே  நீங்களும் சென்னை வந்தால்  இங்குள்ள பதிவர்களிடம் தகவல் தெரிவித்தால் இதுபோல  இன்னும் சில பதிவர் நண்பர்களையும் பேசி மகிழலாம்.

வாருங்கள் சென்னைக்கு............


.......கவியாழி.......
Saturday, 23 November 2013

பருவம் மாறிய மழையினாலே.....

பருவம் மாறிய மழையினாலே
பசுமை வயலும் மாறுது
பருவ மழைப் பொய்த்ததாலே
பயிரும்  கருகி வாடுது

நீர்நிலைகள் எங்கும் நீரின்றி
நீரோட்டம் குறைந்தே போகுது
நிலத்தின் தன்மை மாறியே
நீர்குளமும் காய்ந்தே பொய்க்குது

செடிகொடிகள் காய்வதாலே
சிறுபூச்சியும்  மடிந்துபோகுது
சின்னஞ்சிறு உணவைத் தின்னும்
சினம்கொண்டே பாம்பும் அலையுது

வனங்கள் எங்கும்  வறட்சியாகி
வனவிலங்கும் மடிந்தே போகுது
வானத்திலே ஓட்டை விழுந்து
வானிலையும் மாறிப்போகுது

சூரியனின் கண் சிவந்தால்
சூழ்நிலைகள் மாறிப்போகுமே
சுடு கதிர்கள் பட்டதாலே
சூழும் மரணம் உறுதியாகுமே

மனிதன் வாழ மரமும் செழிக்க
மழையும் பொழிய  வனமும் செழிக்க
உணவை  மீண்டும் உறுதி செய்ய
உழைக்க வேண்டும் மழையே பொழிய

இதைக்கண்டே இனியேனும் மக்கள்
இயற்கை வளத்தைக் காக்க
இனமே தழைக்க  இனியேனும்
இயன்ற உதவி செய்யலாமே

Wednesday, 20 November 2013

ஆவியோ பேயோ அலையுது

ஆவியோ பேயோ அலையுது
ஆனந்த ஆட்டமும் ஆடுது
அடிக்கடி இப்படிக் காண்பதால்
ஆங்கிலப் படம்போல் தோணுது

அருகில் யாரோ இருப்பதுபோல்
அடிக்கடி எனக்கும் தோணுது
அணைக்கவும் துடித்து வருது
அப்படியே என்னுள் அடங்குது

ராத்திரி நேரத்தில் நடக்குது
நடப்பதால் பயத்தில் குளிருது
நாட்களும் தொடர்ந்தே வருகுது
நம்பிக்கை இன்றி இருக்குது

ஆண்டவன் நம்பிக்கை வீணாகி
ஆனந்தம் கொடுக்க மறுக்குது
ஆனாலும் தொடர்ந்து மிரட்டுது
அதனால் மனமும் கலங்குது

இன்பமாய்ச் சிலநாள் இருக்குது
இனிமைச் சுகமும் கொடுக்குது
இருந்தும் மனதும் நடுங்குது
இனிய தருணத்தை  மறைக்குது

துடிப்பும் தொடருது தூண்டுது
தொடங்கியே ஆனந்தம் கிடைக்குது
துவளுது தூங்கிட நினைக்குது
தூங்கியும் உடம்பும் நடுங்குது

கடவுளும் இல்லை தடுக்கவும்
கடந்தும் மனதை வதைப்பதை
கண்ட மருத்துவம் உள்ளதாய்
காட்சிகள் உண்டா நண்பர்களே

கனவும் இதுவே என்பதும்
கண்டவர் என்போல் உள்ளதை
கதையை பலபேர் சொல்வதை
கவிதை வடிவில் கொடுத்திட்டேன்
Tuesday, 19 November 2013

நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்

பாம்பும் தேளும் பூரானும்
பயந்தே ஓடி மறைந்திடுமாம்
பகைத்தே நாமும் அடித்தாலே
பாய்ந்தே நம்மைக் கடித்திடுமாம்

வீம்பாய்க் காளையை மிரட்டினால்
விரைந்தே வந்து முட்டுமாம்
வீணாய் நிலத்தைப் போட்டாலே
விளையும் நிலமும் கெட்டிடுமாம்

வேண்டா வெறுப்பாய் பழகினாலே
வேற்றுமை வந்தே பிரிக்குமாம்
விசயம் இன்றி வாதிட்டாலே
வீணே சண்டை வந்திடுமாம்

ஈன்ற பொருளைக் காத்தாலே
இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம்
இல்லை என்றே சொல்லாமல்
இருப்பதைக் கொடுத்தல் நலமாகும்

எதிலும் பொறுமை இருந்தாலே
எல்லா நலமும் கிடைக்குமாம்
எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
எதிராய்க் காரியம் கெடுக்குமாம்

பாசம் கொண்டே பழகுங்கள்
பகைமை எண்ணம் தவிருங்கள்
நேசம் ஒன்றே ஒற்றுமையாய்
நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்


********கவியாழி*******Monday, 18 November 2013

மழையும் அதிகம் பெய்ததாலே.........

மழையும் அதிகம் பெய்ததாலே
மரங்கள் சிரித்தே மகிழ்ந்தனவாம்
மழைநீர் தேங்கி இருப்பதனால்
மலர்கள் பூத்துச் சிரித்தனவாம்

குளங்கள் எங்கும் நிறைந்ததாலே
குளத்தில் தவளை கத்தியது
கொக்கும் பாம்பும் பூச்சிகளை
கொன்றே தின்று திரிந்தது

பாம்பும் நிறையத் திரிந்ததாலே
பறந்தே மயிலும் வந்தது
பசியால் வாடிய கீரியும்
பகிர்ந்தே பாம்பைத் தின்றது

வனத்தில் எல்லா மிருகமும்
வாழ்த்துப் பாட்டு பாடியே
வருக மழையே என்றே
வரிசையாகப் பாடி ஆடியது

நரியும் பறவையும் இசையாக
நல்ல சேதியைச் சொன்னது
நலமாய் வாழப் பறவைகளும்
நடனமாடி அன்பைப் பகிர்ந்தது

ஆடும் மாடும் கூடியே
ஆட்டம் போட்டு இருந்ததை
அங்கே வந்த உழவனும்
அதனுடன் சேர்ந்தே ஆடினான்

எல்லா இனமும் ,மகிழ்ச்சியாக
எளிதில் மனதும் குளிர்ச்சியாக
நல்லாள் மழையால் இன்பமாக
நன்றே வாழ முடிந்தது

எல்லா வனங்களும் மரங்களாய்
எல்லோர் மனதும் போலவே
எங்கும் மரங்கள் வளர்த்தாலே
என்றும் இதுபோல் மகிழலாம்

.............கவியாழி,,,,,,,,,


Sunday, 17 November 2013

எனது மலேசியப் பயணம்

       நான் உலக அளவிலான கேரம் விளயாட்டுப்போட்டிகாக  1999 ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் இந்திய அணியின் மேலாளராக நானும்,இந்திய விளையாட்டு வீரர்களுடன் திருவாளர்.பி.பங்காரு பாபு. (சர்வதேசப் பொதுச்செயலாளர்) அவர்களும்  சென்றிருந்த போது நான் மற்றும் தெற்காசிய நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.


 மேலும் பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இந்திய வீரர்களும் வந்திருந்து  நவம்பர் 26ரிலிருந்து 28  வரை நடைபெற்ற உலக போட்டி மிகச் சிறப்பாக  நடைபெற்றது,வழக்கம்போலவே இந்தியாவே ஒட்டுமொத்த பதக்கங்களையும் தட்டிச்சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது.


   இதே மாதத்தில் சென்ற இனிமையான தருணம் மறக்க முடியாதது.-----கவியாழி---

Saturday, 16 November 2013

வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!! நன்றி !நன்றி!! நன்றி !!!நன்றி  !              நன்றி !!                     நன்றி !!!

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய எனது பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று ஐம்பதாயிரத்தை கடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாதங்கள்                                                  =15
பதிவுகளின் எண்ணிக்கை                =350
பார்த்தவர்களின் எண்ணிக்கை   =50000

 இன்றுவரை ஆதரவளித்துவரும் பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும்  மீண்டும் தொடர்ந்து ஆதரவையும் வேண்டுகிறேன்.


-------கவியாழி------

நேரம் எனக்குப் போதவில்லை

நேரம் எனக்குப் போதவில்லை
நிம்மதியாய்த் தூங்க வில்லை
தூரம் அதிகமாய் ஒருவீடும்
தொல்லையின்றி  மறுவீடும் இருப்பதால்

காலைமாலை என அலைச்சலால்
கண்ணெரிச்சல் குறைய வில்லை
கண்டபடி தூங்க வேண்டியே
கண்ணு ரெண்டும் அழைத்தே

உடல் சூடும் குறையவில்லை
உள்ளபடி எந்தக் குறையுமில்லை
உண்மையாகச் சொன்னாலே எரிச்சல்
உடம்பெல்லாம் தாங்க முடியவில்லை

மகிழுந்தில் சென்றாலும் வெக்கை
மறுபடியும் நிழலையே தேடுது
மகிழ்ச்சியை மறந்தே மழையும்
மக்களை  இப்படி  வதைக்குது

வேலைச் செய்யவும் நேரம்
வீணாய்க் கடந்து போகுது
விடியல் காலை எழுந்தாலும்
விழியில் கண்ணெரிச்சல் இருக்குது

வெள்ளாமை இல்லாத நிலமும்
விலைவாசியில் துள்ளிக் குதிக்குது
எல்லா இடமும் சென்னையில்
இப்படித்தான் வீடாய் இருக்குது

இயற்கையின் சதியும் காரணமாய்
இன்றையச் சூழல் இருக்குது
என்னைப்போல் எத்தனைப்பேர்
எரிச்சலால் மனம் தவிப்பதுFriday, 15 November 2013

மழையும் பெய்யவில்லை அதனால் .....

அருகருகே அதிக வீடுகளால்
அன்றாடக் காற்றும் மறைக்குது
ஆளாளுக்கு மின்சார பயன்பாட்டால்
அதற்காகப்  பணமும் கரையுது

மழையும் பெய்யவில்லை அதனால்
மரங்களில் பச்சை செழுமையில்லை
மதிய வேளையிலே எல்லோருக்கும்
மறுபடித் தூங்கவேத் தயக்கமில்லை 

ஏழையும் மனதால் வருந்தி
எங்குமே செல்ல இயலவில்லை
ஏர்பிடிக்க ஆசை இருந்தும்
ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை

எப்போது மழை வருமோ
எல்லோரின் மனம் மகிழுமோ
தப்பாக மரம் வெட்டியதால்
தண்டனை இப்போதே உள்ளது 

இப்போதே எல்லோரும் யோசியுங்கள்
இருக்கிற இடத்தில் மரங்களை
இரண்டிரண்டு நட்டு வளருங்கள்
இதையே எல்லோருமே சொல்லுங்கள்

எல்லோரும் நன்றாக யோசித்தால் 
எதிர்காலம் சிறப்பாய் இருக்கும்
சொல்லாலே நில்லாமல் செயலில்
செய்தாலே மழையும் வருமே 

----கவியாழி

Thursday, 14 November 2013

இன்று நீரழிவு நோய் தினம்

எல்லா வயதினரும் பயப்படும்
இளையோர் கூட அகப்படும்
பொல்லா நோயாம் நீரழிவு
புரிந்தே நடந்தால் போய்விடும்

தினந் தோறும் மதுப்பழக்கமும்
தீராத மனநோயுமே தொடர்ந்தால்
வேராக வளர்திடுமாம் நீரழிவு
வினையாக நோயாக வந்திடுமாம்

மருந்தே இதற்க்குத் துணையாக
மாலைகாலை  தின்று வந்தால்
மறையும் காலம் அதிகரித்தே
மறுபடி நோயும் தொடர்ந்திடுமாம்

காலை மாலை வேளைகளில்
கடினமான பயிற்சி செய்து
வேளை தோறும் மருந்துகளை
விட்டு விடாமல் சாப்பிட்டும்

வியர்வை பார்த்தே விளையாடி
வீதியில் காலாற நடமாடி
விதியால் வந்த வியாதியை
விரைவில் கட்டுக்குள் வைக்கலாம்

மனதில் கவலை வைக்காமல்
மருந்தை துணைக்கு அழைக்காமல்
தினமும் பயிற்சி செய்தாலே
திரும்ப வராமல் தடுத்திடலாம்

உடற்பயிற்சியும் மனவலிமையும்
உடலுறுப்பை உறுதி செய்யும்
மனவளக் கலையையும் யோகாவும்
மருந்தைவிட சிறந்த பலனாகும்


********கவியாழி*********

Tuesday, 12 November 2013

சலூன்கடையும் சாமியின் மடமும்

      சிறுவயதில்  முடிவெட்ட  சலூன் கடைக்கு அனுப்ப மாட்டார்கள் .காரணம் அங்கு அறைமுழுதும் கண்ணாடி  சீருடை அணிந்தவர் அதிக கட்டணம் வசூலிப்பார்கள் சுகாதாரம் என்ற பேரில்  சுழலும் சக்கர நாற்காலி  தினசரிப் பத்திரிகை வெளிநாட்டு முகப்பூச்சு கலர்கலரான பாட்டில்களில்  தண்ணீர்த்  தெளிப்பான் மற்றும்  வானொலிப்பெட்டி என்று மட்டுமே இருந்தது.

        இன்றைய நாட்களில்  பெரும்பாலான நகரங்களில் சுகாதாரம் சுத்தம்  வேண்டி பொதுமக்கள் வந்து செல்லுமிடங்களில்  குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது .குஷன் மெத்தைகள் அழகிய வேலைப்பாடுகள் ,நறுமணம் வீசிக்கொண்டே நாளும் இருக்கும் வசதி போன்றவற்றுடன் கண்கவர் வண்ண விளக்குகள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உள்ளது.

        ஆனாலும் மக்கள் சாதாரணக் கடைகளுக்கே செல்லுகிறார்கள்  அன்று வெறுத்த இடமே இன்று அவசியம் தேவையெனப் பட்டது.இப்போதெல்லாம்  எல்லோரும் விரும்புவதேக் காரணம்.காசு கொஞ்சம் கூட இருந்தாலும்  பரவாயில்லையென அவ்வாறான சலூன் கடைக்கே செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அங்கு எப்போதும்போல் கூட்டத்திற்கு குறைச்சலில்லாமல்  இருக்கும்

           சொந்தகதைகள் ஊர்க்கதைகள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் ஒருசிலர் எப்போதும் வாடிக்கையாய் அரசியல் ,சினிமா,சண்டைகள்,சிரிப்பு தேவையில்லாத  வாதங்கள் விவாதங்களும் அங்கு நடைபெறத் தவறுவதில்லை.அப்படித்தான் அன்றும் பேச்சுவாக்கில் சாமியார் மடம் பற்றிய விவாதம் நடந்தது.கிராமம்தானே என்றிருந்த எனக்கு அதிர்ச்சி.

       எல்லோருமே அத்துபடியாய் மிக தெள்ளத்தெளிவாக விளக்கமாய்ப் பேசுகிறார்கள்.அதிர்சியானத் தகவல்களை அள்ளி வீசியது எனக்கும் வியப்பாய் இருந்தது.ஒருகட்டத்தில் நானே வாய்மூடி மௌநியாக இருக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது, மாநிலத்திற்கு ஒருவராவது ஏதேனும் சிக்கலில் மாட்டிச் சீரழிவது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது எனச் சொல்லியது உண்மையென்றே  எனக்கும் தோன்றியது.


Monday, 11 November 2013

இல்லமே மகிழ்ச்சியாய் இருக்கலாம்

நாற்பது வயதானால் நண்பனே
நாவடக்கம் தேவை என்பதால்
நாகரீகம் என்ற பெயரில்
நா சுவைதரும் கொழுப்பும்

நேரம் கடந்த தூக்கமும்
நிம்மதி யில்லா மனமும்
ஆண்மையின் ஆசை துறந்தும்
அலுவலில் பணி அதிகரித்தும்

பணமே  வாழ்க்கை என்ற
பணியில் ஓய்வில்லா உழைப்பும்
பகலிரவு அலைச்சல் இருந்தால்
பசியும் குறைந்தே நோயேமிகும்

நயவஞ்சகம் செய்வோரின் நட்பும்
நலிந்தோரை இழிந்து பேசுதலும்
நல்லோரின் நட்பை மறந்தே
நாளும் குடித்தே இல்லாமல்

இல்லத்தாளுடன் இனிய பிணைப்பும்
இல்லறம் போற்றும் நல்லொழுக்கம்
இணைந்தே  வாழும் குடும்பம்
இன்முகமாய் எப்போதும் இருந்து

தியானமும் தொடர்ந்து செய்து
திடமாய் வாழ யோகக்கலையுடன்
மனமே விரும்பும் கடவுளை
மகிழ்ந்தே வணங்கி வந்தால்

இனமே செழிக்க வளர்க்க
இன்னுமே சிறப்பாய் வாழலாம்
இனிமையாய்   நல்லதைச் செய்யலாம்
இல்லமே  மகிழ்ச்சியாய் இருக்கலாம்````````````````````கவியாழி``````````````````


ஆறடி நிலமும் உறுதியில்லை.....

ஆறடி நிலமும் உறுதியில்லை
அப்படி இருந்தும் சாதியாடா
அப்பனும் பாட்டனும் அறியாமல்
அன்றே வளர்த்தத் தீயடா

நித்தமும் உழைத்தே வாழ்கிறாய்
நேர்மையைப் பெரிதாய் மதிக்கிறாய்
புத்தமும் சொல்லும் போதனையை
புரிந்தே அறிந்தே வாழ்ந்திடுவாய்

கற்பனை வாழ்க்கை அறுதியில்லை
கண்டதும் கேட்பதும் உண்மையில்லை
அற்பனாய் வாழ்ந்திட முயலாதே
அடிமை கொண்டே  வருந்தாதே

உயர்வு தாழ்வு பார்க்காமல்
உன்னில் வேற்றுமை காணாமல்
உயர்ந்த நெறியில் வளர்ந்தேநீ
உயர்வாய் மகிழ்வாய் பிறப்பாலே

ஒற்றுமை என்பதே உயிர்மூச்சாய்
ஒழுக்கம் நன்றே முதலீடாய்
கற்பதை நன்றே புரிந்துகொண்டு
காப்பாய் நீயும் அமைதிகொண்டு

இனத்தில் நாமும் தமிழனாக
இந்தியத் தேசத்தின் புதல்வனாக
உணர்வாய் மனதில் முதல்வனாக
ஒற்றுமை கொள்வோம் மனிதனாகFriday, 8 November 2013

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்


இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்
இனித்தேன் இருந்தேன் சுவைத்தேன்
மார்புக்குள் அவளை அணைத்தேன்
மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

சூடேற்றி சிலிர்த்தே சிணுங்கியே
சின்னதாய் புன்னகையில் ஜோலித்தாள்
செழுமையாய் உரிமையாய் இணைந்தே
சேதியை முடித்தேன் ருசித்தேன்

பூவுக்குள் தேனை எடுத்தேன்
புரிந்ததும்  பார்வையாலே சிரித்தாள்
தூறலும் நின்றது மகிழ்ச்சியாய்
தூரத்தில் தெரிந்தது வானவில்

மார்புக்குத் திரைப் போட்டு
மனதிலே அசைப் போட்டு
ஊருக்குள் மகிழ்ந்த நாட்கள்
உண்மையான சிறந்த நாட்களே

யாருக்குத்தான் இனிக்காது இச்சுவை
எதிரிக்கும் ஆசைவரும் இதுபோல
ஊருக்கும் தெரிந்திருக்கும் இதை
ஒவ்வொருவரும் உணர்ந்த தன்றோ

Wednesday, 6 November 2013

பணத்தை மதிக்க மாட்டேன்....

பணமும் தேவை யானாலும்
பணத்தை மதிக்க மாட்டேன்
பணத்தாசை இல்லா நானும்
பணத்தால் அடிமை ஆகேன்

இனிமைப் பேசத் தயங்கேன்
இன்முகம் காட்ட மறவேன்
இழித்தே எளிதில் பேசேன்
இறைவனை அதற்க்காய் தேடேன்

நல்லோரை  வணங்கி  மகிழ்வேன்
நாளும் சென்றுப் பார்ப்பேன்
நலிந்தோரின் வாழ்க்கைச் சிறக்க
நல்லதை சொல்லியே வருவேன்

பொல்லாதோர் நட்பை மதியேன்
பொய்யாக எதையும் சொல்லேன்
புகழுக்கு அடிமை ஆகமாட்டேன்
புரிந்தோரைக் கைவிட மாட்டேன்

உள்ளத்தில் நட்பை வைப்பேன்
உண்மையில் அன்பைப் பகிர்வேன்
உரிமையாய் குறைகளைச் சொல்லி
உண்மை நட்பை வளர்ப்பேன்
````````````கவியாழி```````````


Tuesday, 5 November 2013

மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

மின்னலிடைக் கொடியாள் வானத்தில்
மேகத்தின் மேனியெல்லாம் தழுவி
கன்னலென இருந்தக் கார்மேகத்தை
வண்ண ஒளிவீசிச் சிரித்தாள்

எண்ணம் எனக்கோ தெரியாமல்
என்ன சொல்வதெனப் புரியாமல்
சின்ன விழியிரண்டை மூடினேன்
சில்லென்ற காற்றில் தேடினேன்

கன்னம் சிவந்த கயல்விழியால்
கண்டவுடன் சிரித்தாள் மறைந்தாள்
தின்ன மறந்த தேன்பலாவின்
திகட்டாத சுவையை மறுப்பேனா

இன்னும் வேண்டுமென எப்போதுமே
இனிமையான சுவையைத் தீண்டியே
உண்ண விரும்பும் அவளை
உதறித் தள்ளி விடுவேனா

ஓடிச்சென்றுப் பார்த்தேன் அவளின்
ஒருசுளையைத் தவிர்க்க முடியுமா
ஓய்வாய் அருகில் அமர்ந்தேன்
ஒருகிழி நடுவில் கிழித்தேன்


இடைவெளி.........


Monday, 4 November 2013

பேயும் வாழட்டும் மகிழ்ந்தே.............

பேயும் இருந்தால் நன்றே
பேதைமை கொள்வோரைக் கடித்தே
போதையும் கொண்டே மீண்டும்
பேயும் வதைக்கட்டும் தொடர்ந்தே

அரக்கனை அழிக்க வேண்டாம்
அவனையே வாழவும்  வைத்தால்
அத்தனை திருடனையும்  கொன்றே
அகிலமும் சிறக்கும் நன்றே

உணவில் கலப்படம் செய்வோர்
உரிமையை  மறுத்திடும் முதலாளி
ஊரையே சுரண்டும் தலைவன்
ஊழலை வளர்க்கும் மனிதன்

சோம்பலை விரும்பும் மக்கள்
சொன்னதைக் கேட்கா  இளைஞன்
சுரண்டலைச் செய்யும்  அரசியலார்
சுற்றித் திரியும் சோம்பேறி

உழைக்க மறுக்கும் கணவன்
ஊதாரி செலவிடும் பெண்கள்
உடலை வருத்தா ஊழியன்
உண்மையே சொல்லாத் திருடன்

நாளையை விரும்பா மாணவன்
நாணயம் இல்லா ஆசிரியர்
நலிந்தவர் வாழ்வைச் சுரண்டியே
நாளும் வட்டிக் கேட்பவன்

போன்றோரைக் கொன்று வதைக்கவே
போக்கிடம் இன்றி அலைந்தே
பொழுதும் கொல்லுதல் செய்தே
பேயும் வாழட்டும் மகிழ்ந்தே=======கவியாழி======

Sunday, 3 November 2013

இதுவும் மனித இயல்பன்றோ..........

கஷ்டத்தில் வாழும்போது காணாத
சுற்றமும் நட்பும் உதவிக்காய்
இஷ்டமாக வருவார்கள் இல்லையென
இல்லாத ஒப்பாரி வைப்பார்கள்

காரியம் நடைபெற வேண்டுமானால்
கண்ணீர் விட்டும் அழுவார்கள்
கவலைத் தீர்ந்ததும் உணராது
கண்டபடித் தவறாய் சொல்வார்கள்

குற்றம் சொல்லிப் பயனில்லை
குறையாய் எண்ண வழியில்லை
கொள்கை இல்லா மனிதனுக்கு
குணமாய் அமைந்தது இயல்பன்றோ

இல்லை யென்றே சொல்லாமல்
இருக்கும் போதே  கொடுத்திடுங்கள்
கொள்ளை இன்பம் உங்களுக்கு
கொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம்

பெற்றப் பிள்ளைகள் பேரின்பம்
பிணிகள் அகன்றே நன்றாக
இல்லை என்ற நிலையாக
இனிதே மகிழ்ந்தே வாழ்ந்திடுமாம்

இதயம் மகிழ உதவிடுங்கள்
இனிமை வாழ்வுக்கு நிரந்தரமாய்
இதையும் நல்ல சேமிப்பாய்
இருக்கும் போதே செய்திடுங்கள்


-----கவியாழி-----
Thursday, 31 October 2013

தித்திக்கும் தீபாவளித் திருநாள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள்
--------------------


எப்பொழுது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க
எல்லோரும் தெருவிலே பட்டாசு வெடிச்சிருக்க
குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைந்திருக்க-சேவல்
கூவாமல் எல்லோரும் எழுந்திருக்கும் திருநாள்

ஏழைபணக்காரன் என்றதொரு வித்தியாசம்
எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள்
காலைமாலை என்ற கணக்கு இல்லாமல் - மக்கள்
காசுசெலவழிக்கும் தீபாவளி ஒருநாள்

புத்தாடைக்கு புதுமஞ்சள் சாந்திட்டே அணிந்திட்டு
புதுநாளைக் கொண்டாட மாப்பிளையும் அழைத்திட்டு
வித்தாரம் பேசாமல் வீதியெங்கும் கூறாமல் -சண்டை
விநியோகம் செய்யாத தீபாவளி நன்னாள்

காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியும்
ஓசிப்பொருள் வாங்காமல் உழைத்தே வைத்திருந்து
புத்தம் புதிதாய் துணிகள் வாங்கி மகிழ்ந்தே -நாளை 
பெரிசு இளசுகளும் போற்றிடும் தீபாவளிநாள்

இனிப்புகளும் காரமும் இல்லாத வீடில்லை
இரண்டுமுறை தின்னாலும் இன்றுமே தப்பில்லை
நெருப்புடனே திரிந்தாலும் தப்பாக நினைக்காமல்-ஆசி
நெஞ்சார வாழ்த்துகின்ற தீபாவளித் திருநாள்

இந்துக்கள் அல்லாது எல்லோரும் ஒற்றுமையாய்
இந்தியத் திருவிழாவை  எல்லா நாடுகளிலும்
இல்லத்தின்  உறவுகள் ஒன்றாகச் சேர்ந்து-மகிழ்வாய்
இனிமையாய் கொண்டாட விரும்பும்நாள்

வருடத்தில் இந்நாள் வந்தோரை வரவேற்று
வாஞ்சையுடன் உணவளித்தும்  உபசரித்தும்
வாழ்கையிலே வேதனைகள் கோபமும் மறந்து 
வாழ்த்துக்களை எல்லோரும் பகிரும்நாள்(தீபாவளிப் பரிசுப் போட்டிக்காக)-----கவியாழி----

Wednesday, 30 October 2013

திரண்ட பாறையுமே தள்ளி

தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி
திசையெங்கும் செழிக்க வைத்து
வனத்தையும்  வயலையும் காத்து
வானம் மகிழ  வந்தாய்

பலஊர்கள் மைல்கள்  தாண்டி
பாமரனும் மகிழ்வாய் வாழ
பரந்து விரிந்த பாதைவழியே
பகலிரவு ஓடிவந்து மகிழ்ந்தாய்

கிடந்த கற்கள் மலைகள்
கடந்தும்  உடைத்தே நடந்து
அடர்ந்த வனம் செழிக்க
அமைதியாக உருட்டிச் சென்றாய்

திரண்ட பாறையுமே தள்ளி
திருட்டுத் தனமாய் கடத்தி
வறண்ட இடத்திலும்  சென்று
வழியெங்கும் சமன் செய்தாய்

கண்குளிரக் காட்சி தந்த 
கடவுளாய் போற்றி வந்த 
தண்ணீரில் கடந்து வந்து
தவமாகக் காத்து நின்றாய்

சுரண்டலுக்கு ஆசைப் பட்ட
சுயநலக் காரர்களின் கண்ணில்
சூழ்ச்சிக்குத்  தப்ப மறந்து
சுரண்டி சுரண்டி மடிந்தாய்

தினந்தோறும் மணல் அள்ளியதால்
திசையெங்கும் வறட்சி வந்தே
பருவம் மாறிப் பகலவனின்
பார்வையால் பாமரனும் வருந்துகிறான்

நிலைமாறக் காரணம் தெரிந்தும்
நீயும் மௌனம் காப்பதேன்
நிம்மதியைக் கெடுத்தவரை ஏன்
நேரம் கொண்டே அழிக்கவில்லை

விலைபேசும் நிலைக்கே சென்றாயே
வேதனை வேதனையே  எமக்கு
விதியில்லை வீரமில்லைத் தடுக்க
வீணர்களின்  விலைவாசி நாடகத்தில்

>>>>>> கவியாழி <<<<<<Tuesday, 29 October 2013

மேல்சாதி நானென்று சொல்கிறான் ?

மெத்தப் படித்தவனும் பெருமையாய்
மேல்சாதி நானென்று  சொல்கிறான்
மேன்மக்கள் கீழ்மக்கள் உள்ளதென
மேடையிலும் பெருமையாய்ப் பேசுகிறான்

ஒத்த உள்ளங்களாய் இருந்தோரை
ஒரே வார்த்தையில் பிரிக்கின்றான்
ஊரேகூடி மகிழ்ந்தாலும் ஒருவனே
ஒப்பாரி வைக்கின்றான் நடிக்கின்றான்

உழைப்பதிலே ஒற்றுமையாய் இருந்தாலும்
உழுவதிலே சேர்ந்து மகிழ்ந்தாலும்
உத்தமனாய் சாதியை வளர்க்கிறான்
உதவாத காரியத்தைச் சொல்கின்றான்

சத்தியமாய் பேதமில்லை வாழ்கையிலே
சங்கடங்கள் குறைவில்லை  குடும்பத்திலே
சோத்துக்கும் கஷ்டமாக இருக்கின்றான்
சொந்தங்களும் மறுத்தே வாழ்கிறான்

இத்தனைக்கும் இருப்பது ஒரேஊரில்
இழவுக்கும் மகிழ்வுக்கும் செல்கின்றான்
இருந்தாலும் எப்போதும் சொல்கின்றான்
இவனெல்லாம் இன்ன சாதியென்று

எத்தனை நாள் இப்படியேச் சொல்லி
எல்லோரையும் பிரித்துப் பார்க்க
என்சாமியும் துணைக்கு வருகிறதோ
எல்லோரையும் பிரித்துப் பார்க்கிறதோ


.......கவியாழி........


Monday, 28 October 2013

அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்

நடுத்தர வாழ்க்கையே நரகமாக
நாட்டிலே பலபேர் வாழ்வதற்கு
நம்மில்  சிலரும் காரணமாம்
நாணயம் மறந்தும் இருப்பதனால்

கிடைக்கிற  ஊதியம் போதலை
கிடைத்தாலும் அன்றாட செலவுக்கே
கொடுத்தாலும் போதாது  மிஞ்சாது
கொடுமையே மிஞ்சும் தங்கும்

பிள்ளையின் நலன் கருதியே
பிணியையும் மறந்த நிலையில்
படிக்கவும் பயணமும் செய்ய
பணத்தைக் கட்டியும் மீதியில்லை

உற்றார் உறவுக்கும் உதவி
உண்மையில் செய்ய் முடியாது
மற்றோர் மதிப்பு வேண்டி
மடத்தனமாய் செலவு செய்யாதே

சோர்வின்றி மனம் தளராது
சோம்பலின்றி மிகுந்த கஷ்டப்படு
மிகுந்த வருமானம் மட்டுமே
மகிழ்ச்சியாய் வந்திடும் தங்கிடும்

அடுத்தத் தலைமுறை வந்திட்டால்
ஆனந்தம் வந்திடும் தந்திடும்
அதுவரை பொறுத்திடு படிக்கவை
அப்படிச்  சொல்லியே ஊக்கப்படுத்து

அவனுக்கும் வந்திடும் முயற்சியே
அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே
அதையார் தடுத்திட முடியும்
அடுத்தநிலை  ஏற்றமாய் இருக்கும்======கவியாழி=======
என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?நான் 1980 ஆம் ஆண்டு  சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில்(Littel Flower Higher Secondary School) +2 படித்து  முடிக்கும்போது எனது வகுப்புத் தோழர்களுடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம்.

முடிந்தால் என்னைக் கண்டுபிடித்து அடையாளம் சொல்லுங்களேன்
---------------------------------------------------------------------------------------------------------------------
பதில்
--------
மேலிருந்து இரண்டாவது வரிசையின் இரண்டாவதாய்  நிற்கும் கருத்த உருவமாய் ஒல்லியான ஏழ்மையின் அடையாளமாய்  தெரிபவன் நானே நான்.

Saturday, 26 October 2013

ஓய்வு கொடுக்க வேண்டுமா
ஆண்டுகள் பதினெட்டும்  என்னோடு
ஆனந்த பயணம் செய்துவந்த
அடிக்கடி நிற்காதக் களைக்காத
ஆதவனின் நண்பன் கடிகாரம்

வேதனையும் நாளும் கண்டவன்
வேடிக்கை பலதும் பார்த்தவன்
வீறிட்டு அழத்தெரியாத  பண்பன்
வேகமாய் செல்லாத துணைவன்

சாப்பிடும் நேரம் சொல்பவன்
சாதனைக் கண்டே ரசித்தவன்
சரிநிகர் சமமாய்  இருந்தவன்
சங்கடம் பலதும் கண்டவன்

அடிக்கடிப் பார்த்திடும் கடிகாரம்
ஆன்மா இல்லாத அவதாரம்
அனைவரும் விரும்பும் பலநேரம்
அதுவே எல்லோருக்கும் ஆதாரம்

உடலோடு உறவாட தவறவில்லை
உயிரின்றி  என்றுமே நின்றதில்லை
உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை
உறவாக என்னையும் பிரிந்ததில்லை

ஓய்வு வேண்டியே விரும்பியே
ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால்
ஒளியிழந்து கையில் துடிக்கிறான்
ஓய்வு கொடுக்க வேண்டுமா


------கவியாழி------

Friday, 25 October 2013

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது


வலைப்பக்கம் தினமும் பார்க்காவிட்டால்
வருத்தம் மிகுந்தே  தொடர்கின்றது
வாழ்கையில் இழந்ததாய் நினைக்கிறது
வேதனை மிகுந்தே தவிக்கின்றது

எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு 
எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது
சின்ன வயது பையனோடும்
சேர்ந்திருக்க இன்றும்  முடிகின்றது 

இத்தனைநாள் மறைத்து வைத்த
இன்பமான தருணத்தை ரசிக்கின்றது
இனிமையான நினைவுகளை நன்றே
 இப்போதும் எழுத துடிக்கின்றது

வெளிநாட்டு உறவின் வேதனையும்
விருப்பமில்லா வாழ்வின் அவசியமும்
வேடிக்கைக் காட்டிச் செல்கிறது
வேதனை பலதும் மறைகிறது

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது
வசந்தமும் மீண்டும் தொடர்கிறது
வயதும் வேண்டி நினைக்கிறது
வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது=====கவியாழி=====

Wednesday, 23 October 2013

தீண்டாத இரவுகள்.......

மழையும் அடிக்கடி  வருவதால்
மனதும் துடிக்குது  தேடுது
மாலை ஆவதும் முன்பே
மயக்கமும் வருது  தொடருது

காரமாய் சாப்பிடத் தோணுது
காண்பதை யெல்லாம்  விரும்புது
காற்றையும் மீறியே அனலாய்
காத்தும் மூக்கிலே  வருகிறது

சூரியன் பார்த்ததும் மறையுது
சுகமாய் மறைந்தே போகுது
சில்லுன்னு காத்தும் வீசுது
சீக்கிரம் போர்த்திக்க ஏங்குது

துணையும் தேடிடும் நேரத்தில்
தூறலும் அவசரம் காட்டுது
தொடரவே வேண்டுது  விரும்புது
தொடக்கமே மகிழ்ச்சியாய் இருக்குது

நறுமணம் வீசுது மணக்குது
நரம்பெல்லாம் சூடும் ஏறுது
நடுவிலே தூக்கம் கலைந்ததால்
நடுநிசிக் கனவாய் முடிந்தது-----கவியாழி-----Monday, 21 October 2013

இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

வனமும் வனப்பையும் இழந்தால்
வனத்தின் நிறமும் மாறுமாம்
வானமும் இயல்பை மாற்றியே
வானத்தின் தன்மையும் கூடுமாம்

எல்லா இடமும் வெளிச்சமாய்
எங்கும்  வெய்யில் எரிக்குமாம்
ஏரிக் குளமும் வற்றுமாம்
எரிச்சல் அதிகம் இருக்குமாம்

பொல்லா நிலையால் பலபேரோ
பொசுங்கி மடிந்தே விழுவாராம்
பொழுதும் கழிந்தால் மட்டுமே
பொறுத்தே வெளியில் வருவாராம்

இந்த நிலைக்குக் காரணம்
இழந்த மரங்கள் அதிகமாம்
இதையே நாமும் அறிந்தேனும்
இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

மழையும் நன்றாய் பெய்யுமாம்
மரங்கள் அடர்ந்து வளருமாம்
மக்கள் துயரம் நீங்கியே
மக்கள் மனமும் குளிருமாம்

வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய்
வருடம் முழுக்க பெய்யுமாம்
வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய்
வானத்தைப் பெருக்கிக் காக்கணும்


=====கவியாழி=====Sunday, 20 October 2013

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே.....

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே
நாகரீகம் மறந்து சிரிப்பாரோ
நாணயம் மறந்த பேச்சாலே
நல்லவர் மனதை வதைப்பாரோ

அறிவும் மழுங்கி இளிப்பாரோ
ஆடைத் துறந்து  இழப்பாரோ
அடுத்தவர் மனத்தைக் கெடுப்பாரோ
அடிமை மதுவால் ஆவாரோ

குடியால் மென்மை துறப்பாரோ
குடும்பம் இழக்க நினைப்பாரோ
குழந்தை பெறவே மறுப்பாரோ
குணத்தை இழந்து தவிப்பாரோ

பெருமை அடைந்து மகிழ்வாரோ
பணத்தை அழித்து திரிவாரோ
பெண்ணின் சாபம் பெறுவாரோ
பொய்யாய் வாழ்க்கை வாழ்வாரோ

மிகுந்த குடியால் குடும்பமே
மேன்மை இழந்தும் தவிக்குமே
மற்றோர் மனதும் வருந்தியே
மனிதனை சிரிக்க வைக்குமே

இல்லறம்  அழிய  காரணம்
இதையேன் மகிழ்வாய் நினைக்கனும்
இனியும் சிலநாள் தவிர்க்கனும்
இனிமை வாழ்வும் தொடரனும்


===கவியாழி===


Friday, 18 October 2013

மகிழ்ச்சியைத் துறப்பவள்

இளமைக் காலம் முதலே
இளையவர் நன்கே வளர
இன்முகம் காட்டி சிரித்தவள்
இளமை மறந்து வாழ்ந்தவள்

விடைலை வயதில் நின்றவள்
வீதியில் வீம்பாய் நடந்தவள்
வேடிக்கைப் பார்த்துச் சென்றவள்
வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள்

குடும்பம் தொடங்கி வைப்பவள்
குழந்தை சிலதைப் பெற்றவள்
குறும்புத் தனத்தை மறந்தவள்
குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள்

சோதனைக் காலம் கண்டவள்
துணையுடன்  மகிழ்ந்து வாழபவள்
துயரம் மிகுந்தும் நகைப்பவள்
தூய்மை  அன்பைக் கொடுப்பவள்

ஆக்கம் கொடுத்த தாய்
அவள்தான் எனது சகோதரி
அன்பாய் இருக்கும் மனைவி
அடுத்தது எனது மகளே******கவியாழி*******

வெற்றி பெறவே துடிக்குது..............

நேற்றைய வாழ்க்கை முடிந்தது
நேரமும் காலமும் கழிந்தது
நிம்மதி சிலநாள் கிடைத்தது
நேர்மையாய் உணர முடிந்தது

பார்ப்பவர் எண்ணம் புரிந்தது
பாதையும் தெளிவாய் தெரிந்தது
பகலும் இரவும் போலவே
பசுமை வெறுமை கடந்தது

இன்றைய நாளில்  நடப்பது
இன்பம் விரும்பி வாழ்வது
இளமை  வெறுமை இழந்தது
இனிமை வாழ்க்கை ஏங்குது

துன்பம் மெல்ல விலகுது
துயரம் தாண்டி செல்லுது
தூயநல்  நட்பும் தொடருது
துணையாய்  அருகில் வாழுது

நாளைய ஏக்கம் தொடருது
நல்லதும் கெட்டதும் தெரியுது
நாணயம் என்னுள் இருப்பதால்
நன்மையும் தீமையும் தெளிந்தது

வேதனை சிலதும் மறைந்தது
வெளிச்சமும்  அதனால் வந்தது
வேண்டி  விரும்பி  மனதுமே
வெற்றி பெறவே  துடிக்குது


-----கவியாழி------

Thursday, 17 October 2013

அம்மா கடவுள் சரஸ்வதியே

அம்மா கடவுள் சரஸ்வதியே
அகிலம் போற்றும் குணவதியே
எல்லா குழந்தையும் கற்றிடவே
என்றும் கொடுப்பீர் அருள்மழையே

இல்லா பிள்ளையும் கற்றிடவே
இலவசக் கல்வியை கொடுப்பவர்க்கும்
பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும்
பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும்

சொல்லில் கடுமையாய்  இருப்போர்க்கும்
சொல்லித் தந்தே மகிழ்பவர்க்கும்
நல்ல ஒழுக்கமும் நன்னடத்தை
நாளும் கற்பிக்கும் ஆசிரியருக்கும்

செல்வம் சேர்க்கா பணியாக
செலவில்லாமல் தினம் கற்பிக்கும்
சொல்லில் சிறந்த சீமான்கள்
செய்யும் பணியும்  சிறந்திடவே

அன்பும் அறிவும் பெருகிடவே
அனைவரும் போற்றும் கல்விக்கு
அம்மாதாயே அருள் கொடுத்தால்
ஆயுள் முழுக்க வணங்கிடுவேன்

----கவியாழி----

Monday, 14 October 2013

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே
அன்பில் என்னுள் ஆள்பவரே
அழைத்தால் தினமும் மகிழ்பவரே
ஆறாம் எண்ணில் அழைப்பவரே

அன்பில் சளைத்தவர்  உங்களைபோல்
அருகில் எனக்கு இல்லையே
அதனால் எனக்கும் லாபமே
அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன்

எல்லா  நண்பரும்  மகிழ்வாக
எண்ணி இருந்திட நினைப்பவரே
சொல்லால்  தவறை சுட்டியே
சிறப்பாய் இருந்திடச் செய்பவரே

என்மேல் என்ன கோபமைய்யா
எதற்கு அப்படிக் கடிந்தீரோ
என்னை விடவா உங்களுக்கு
ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு

பொல்லா கோபம் இல்லையே
பொசுக்கி என்னைக் கொல்லவே
எல்லா நாளும் இப்படியே
என்னிடம் திட்டி வதைக்காதீர்


--கவியாழி--


Friday, 11 October 2013

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத
வாலிபமும் மீண்டும் திரும்பாத
வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும்
வாடிக்கையாய் அன்றி நின்றிடும்

திரும்பாத முகத்தையும் திருப்பிடும்
தீராத ஆசையைத் தூண்டிடும்
தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும்
திரவியம் உள்ளதைக் காட்டிடும்

வருந்தாத உள்ளங்கள் இல்லையே
வார்த்தையில்  சொல்லவும் மில்லையே
பொருந்தாத இடத்திலும் பொங்கிடும்
புகழையும் சமயத்தில்  மழுக்கிடும்

தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள்
தெளிவில்லா சங்கதி இன்றுமே
தொடர்ந்திடும் என்பதும் உண்மையா
தெளிந்தீரா இப்போதும் நன்மையாய்

அன்பெனும் அடிமை உண்மையாய்
அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய்
துன்புறும் மனதையும் காத்திடும்
தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும்

புரிந்தீரா சொலவதைக் கேட்டதை
புலப்படுதா சொல்லிலே உண்மையை
வருந்தாத வாலிப மூத்தோரே
வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....

நண்பரே அன்பரே வாருங்கள்
நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள்
நாட்டிலே நடக்கிற செய்தியும்
நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள்

வீட்டிலே ஆதரவு முக்கியம்
விடியலில் எழுவதும் அவசியம்
பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள்
பார்த்ததும் படிப்பது அவசியம்

தமிழ்மணப் பட்டையை  வைத்தீர்
தணிந்ததா தாகமே இனிமேல்
கருத்துக்கள் அதிகமாய் சொன்னால்
கடையில்  வாடிக்கைப் பலபேர்

அடிக்கடி வலைக்கு வாங்க
அனைவரின் படைப்பையும் படிங்க
பொறுப்புள்ள கருத்தையே சொல்லி
புகழ்பெறம் வரிசையில் நீங்க

எழுத்திலே உமக்கு ஏற்றம்
இருப்பதாய் அறிந்தே உரைத்தேன்
இன்னுமும் சிறப்பாய் எழுதி
இமயம் போற்ற வாழ்க

Thursday, 10 October 2013

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே
பண்பாய் நானும் தினமுமே
பாட்டாய் எழுதித் தருவேனே
பதிலும் தினமும் கொடுப்பனே

உருகி உருகி எழுதியும்
உணர்ச்சி மிகுந்தே சொல்லியும்
உண்மைத் தன்மை மாறாது
உள்ளதை நன்றே சொல்வேனே

எதுகை மோனை எழுத்திலே
என்றும் தொடர்ந்தே காப்பேனே
எல்லா நேரமும் நல்லதாய்
எதையும் எழுதி விடுவேனே

காதல் காமம் எழுதுவேன்
கண்ணீர் வந்திட சொல்லுவேன்
ஊர்கள் சென்றதை சொல்லுவேன்
உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன்

மனதில் தோன்றும்  எல்லாமே
மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே
மக்கள் என்னை ஒதுக்கும்வரை
மகிழ்வாய் கவிதை படைப்பேனே


அழகாய் கவிதை படைப்பதால்
அன்பாய் நாளும் இருப்பதால்
அனைவரும் என்னை விரும்புவதால்
அதனால் நானும் இறைவனேTuesday, 8 October 2013

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது
என்று கேட்டாலும் தப்பேது
முப்போதும் ஓடினாலும் தப்பாது
முறையாக ஓடிடுவாய் எப்போதும்

ஒவ்வொரு மணித் துளியும்
ஓய்வுக்காய் என்றுமே தவறாது
ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல்
ஒருபோதும் தடுமாறி நிற்காது

நொடியுமே தவறாக ஓடவில்லை
நிமிடமும் தனக்காக நின்றதில்லை
மணியுமே அவசரமாய் சென்றதில்லை
மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை

ஏழையாய் இருந்தாலும் எப்போதும்
எல்லோரும் அவசியமாய் தன்னோடு
எப்போதும் துணையாக வந்திடும்
எந்நாளும் சரியாகக் காட்டிடும்

இருதயம்போல எப்போதும் ஓடிடும்
இன்முகமாய் காலத்தைக் காட்டிடும்
இதையாரும் வெறுக்கிறவர் இல்லார்
இலவசமாய் தருகிறவர் உண்டா--கவியாழி--

Monday, 7 October 2013

மீசை மட்டுமே அழகா

மீசை இருந்தால் அழகேதான்
மாதமும் மழித்தால் நல்லதுதான்
ஆசை அதனால் குறையாது
ஆயுளில் அதனால் பயனேது

மீசை இல்லா முதியோரே
மீண்டும் வசந்தம் கேட்பாரோ
மீண்டும் மீசை வையுங்கள்
மிகுந்த இன்பம் கொள்ளுங்கள்

ஆண்கள் அனைவரும் பெரும்பாலும்
ஆசைக் கொண்டே வளர்திடுவர்
ஆயுள் முழுக்க சிலபேரோ
அதையும் துறந்தே இருக்கின்றனரே

அய்யா பெரியவர்  என்னிடமே
அதனால் கடிந்தே பேசியதால்
என்னா செய்வேன் இளையவன்நான்
எப்படி மறுத்தே சொல்லிடுவேன்

அய்யா வயதில் மூத்தோரே
அய்ந்தாம் நிலையில் உள்ளவரே
அடியேன் என்னை வெறுக்காதீர்
அன்பைக் கொடுக்க மறக்காதீர்


Saturday, 5 October 2013

இன்பமாய் உலா.....செல்லுங்கள்

இன்பமாய் உலா செல்வீரே
இல்லறம் சிறக்குமே  கண்டீரா
இன்னலும் தீர்ந்திட சென்றிரா
இன்பமாய் இனியச் சுற்றுலா

மலைப்பகுதியும் மரங்கள் வளர்ந்த
மிதமாய் குளிரும் தரைபகுதியும்
நீரால் சூழ்ந்த நீர்ப்பகுதியும்
நிலமேத் தெரியாத பணிப்பகுதியும்

உல்லாசமாய் எல்லாமும் நினைத்தே
ஊரெல்லாம் தொலைதூரம் சென்றே
பொல்லாதக் கோபத்தைக் குறைத்தே
பொறுமையாய் செல்வீரே அடிக்கடியே

துன்பமும் நீங்கிடும் துணையாலே
தினந்தோறும் மகிழ்ந்திடும் வாழ்கையில்
அன்பையும் கூட்டிடும் மகிழ்ச்சியில்
அனைவரும் விரும்பிடும்  சுற்றுலா

பண்பையும் நன்றே மாற்றிடும்
பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும்
இன்பமாய் சிலநாள் இருந்தால்
இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம்---கவியாழி---

Friday, 4 October 2013

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமே

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா
உலகினில் மீண்டும் திரும்புமா
பழகிய நாட்களும் மறக்குமா
பாசமும் நேசமும் கிடைக்குமா

அழகிய நாட்களை மறந்திட
அன்பை மீண்டும் கொடுத்திட
பழகியே நேசத்தை காட்டிட
படைத்தவர் உயிரை மீட்டிட

தினமும் மகிழ்ச்சியே தந்திட்ட
திங்களும் வணங்கிட செய்திட்ட
மனிதருள் தெய்வமாய் திகழ்ந்திட்ட 
மகனாய் என்னை படைத்திட்ட

உறவை மறந்து பிரிந்த
உண்மையில் அன்பைப் பகிர்ந்த
உணர்ச்சியில்  நான் வருந்த
உடையோரை எங்கே மறைந்தீர்

தினம் தோறும் வேண்டுகின்றேன்
திங்கள் தோறும் அழைக்கின்றேன் 
விரும்பாது சென்ற பிதாக்களே
வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன்


---கவியாழி---

Thursday, 3 October 2013

இன்றைய மாணவர் வாழ்க்கை


இன்றைய  மாணவர் வாழ்க்கையோ
இழிந்தே செல்லும் நிலையாலே
பண்பை மறந்தே மாணவனும்
பகலில் குடித்து கெடுவதுமேன்

மகனும்  மறைந்து குடிப்பதில்லை
மாணவனாய் இருந்து படிக்கவில்லை
அவனின் வாழ்வைக் கெடுப்பதற்கா
தினமும் பணமே கொடுப்பதுமேன்

அறிவை வளர்க்கும் மாணவன்
அடிமையாகும் மதுவைக் குடித்து
அறியாமல் செய்யும் தவறுக்கு
அப்பனும் ஆத்தாளுமே துணையாமே

இளமை  வாழ்வோ சிலகாலம்
இனிமை சேர்க்க ஒழுங்காக
இல்லமும் உன்னைக் கொண்டாட
இருப்பாய் சிறப்பாய் பொறுப்பாக

தலைமைப் பொறுப்பை அறிந்தேநீ
தினமும் கற்பாய் முறையாக
தினமும் படிப்பைத் தொடங்கினால்
தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்

Tuesday, 1 October 2013

வெள்ளையப்பன் வேதனையை மறைப்பவன்

வெள்ளை நிறத்தவன்  அவன்
வேதனையை மறைக்க வைப்பவன்
எல்லா  வீட்டிலும் இருப்பவன்
ஏழையின் வீட்டிலும் குடியிருப்பவன்

கொள்ளைப் பணத்தை முழுங்கி
குடும்பம் முழுதையும் வதைப்பவன்
இல்லை யென்றாலும் விடமாட்டன்
இம்சையை தீர்க்கவே  விரும்புவான்

தொல்லை கொடுக்கும் வலிக்கு
தோதாய்  வந்து காப்பவன்
பிள்ளைத் தாத்தா பாட்டிக்கும்
பிணியைத் தீர்த்து வைப்பவன்

எத்தனை  நிறத்திலும் இருந்தாலும்
எல்லோர் மனதைப் போலவே
துள்ளிச் சிரித்தே தொடர்வான்
துணையாய் கூடவே வருவான்

வறுமை வயதும் பாராமல்
வாழ்வை தொடர விரும்பினால்
வள்ளல் போலவே  நிம்மதியை
வாரிவழங்கியே மகிழ்ந்திடுவான்

முதியோர்தின வாழ்த்துக்கள்

---கவியாழி--