Monday, 28 September 2015

சீக்கிரமா வாங்க..........

        வலைப்பதிவர்களின் எழுச்சித் திருவிழாநீண்ட இடைவெளிக்குப்பிறகு என்னை எழுதத்தூண்டிய எழுச்சிமிகு திருவிழா இந்த வருட வலைபதிவர்கள் சந்திப்புத் திருவிழா -2015.  

ஆம் மிகவும் மகிழ்ச்சியான இந்த வருட சந்திப்பு கடந்த நாட்களை விடச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குமென நம்புகிறேன்.
 காரணம் விழா ஏற்பாட்டாளர்கள் குழுவாக ஒருங்கிணைந்து திரு.முத்துநிலவன் அய்யா அவர்களின் வழிகாட்டல் விழாவை சிறப்பான பாதையில் செல்வது புரிகிறது .

மேலும் நாளொரு பதிவுகள் வெளிவந்த வண்ணம் இருப்பது ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டு முயற்சியிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே எண்ணுகிறேன். அதோடு மட்டுமல்லாமல் போட்டிகள், அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை . என்னால் பங்கேற்க முடியாவிட்டாலும் வலைப்பதிவர்கள் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது .
 
 வலைச்சித்தரும், கரந்தையாரும்  கொடுக்கும் ஒத்துழைப்பு  மற்றும் ஆதரவும் என்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மிகுந்த வேதனை தருகிறது .இருந்தாலும் இந்த வருடம் 300 பதிவர்கள் பங்கேற்பார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியுடன்  ஆர்வத்தைத் தூண்டுகிறது. 

 இன்னும்  அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்த்து நான் எனது பயணத்தை ஒருநாள் முன்னதாகவே தொடங்கி  சனிக்கிழமை காலையில் புதுக்கோட்டை செல்கிறேன். எனக்கும் வாய்ப்புக்கிடைத்தால் நானும்  உங்களையெல்லாம் வரவேற்க காத்திருக்கிறேன்.


கவியாழி

Thursday, 23 April 2015

என்னடா வாழ்க்கையிது.......விலைவாசி குறையலை
வருமானம் வழியில்லை
பிள்ளைக்குட்டி பொம்பளைக்கும்
பசியைப் போக்க முடியில

விவசாயம் சரியில்லை
வேறவேலை தெரியலை
பொழைப்புக்கான வழியில்லை
போறதெங்கே  புரியலை

பண்ணாட்டுக் கம்பனிகள்
பயன்படுத்தும் மெசினுனால
பகலிரவு உழைப்புக்கு
பணிக்கு ஆளை எடுக்கலை

அம்மாவும் கேட்கலை 
அப்பாவும் கொடுக்கலை
அடுத்தமாச பீசுநானும் கட்டலை
அதனாலே பள்ளிக்குமே போகலை

பணம்காசு உள்ளவன் 
பதுக்கிப் பதுக்கி வைக்கிறான்
பணியாளர் மட்டுமே -வரியை
பயத்தோடக் கட்டுறான்

லஞ்சக் காசுலே வாழுறான்
லட்சங்களில் கேட்கிறான்
வசதியாக வாழ்வதற்கு 
வழிப்பறியும் செய்யுறான்

என்னடா வாழ்க்கையிது
எத்தனைபேர் நாட்டிலே
சொன்னதாய் பலநிகழ்ச்சி
சோகமாய் உள்ளதடா

(கவியாழி)

Monday, 20 April 2015

எனது நண்பன்


கண்ணாலே கதை சொல்லும் கயவன்
கண்டவுடன் வாலாட்டும் துணைவன்
பண்போடு உடன் நடக்கும் இளைஞன்-வெளியோரை
பார்த்ததுமே கத்துகின்ற மடையன்

வேண்டுமென்றால் அருகில் வந்து 
வேடிக்கையாய் விளையாடிச் செல்வான்
வேதனையில் நானிருந்தால் அருகில் -அமர்ந்து 
விழிதிறந்து என்னவென்று கேட்பான்

கத்தாதேஎன்றாலும் நிறுத்தாமல் குறைப்பான்
காக்காகுருவிடனும் விளையாடத் துடிப்பான்
கன்னியரின் கன்னத்திலே முத்தமிட நினைத்தால்
கண்ணிமைக்கும் நேரத்திலே முத்தமிட்டுச் செல்வான்

மகிழுந்தில் செல்லவேண்டி அழுவான்
மறுத்ததுமே குரைத்துக் கேள்வி கேட்பான்
திகிலூட்டிக் கண்ணை உருட்டிப் பார்பான்
தின்ன மறுத்துக் காரில்ஓடி அமர்வான்

அன்பாய் இருப்பான் அருகில் வருவான்
பண்பாய் இருந்தும் பணிவாய் வாழ்ந்தும்
துன்பம் சிலநாள் தொடர்ந்தே இருந்தும்
நண்பன் இன்னும் சிலநாள் மட்டும்


(கவியாழி)


Tuesday, 7 April 2015

மார்கழி மலரே வா


மார்கழிப் பூவை சூடியதால்
மங்கையே மயக்கம் வருகிறதா 
மன்னவன் என்னிடம் ஏன்
மலருக்கே  தயக்கம் வருகிறது

தேனிக்களும் வண்டுகளும்
தேனிசை ராகமாய் பாடுகிறது
மயிலும மானுமே மகிழ்ந்து 
மகிழ்ச்சியாய் இங்கு  ஓடுகிறது

நங்கையே நல்லமுதே சுவையே
நானருந்த உனக்கு  நானமே
நாழியும் கடப்பதாய் கோபமோ
நல்விருந்து படைக்கிறேன் வா

என் அருகில் நீயும் வா
என் மடியில் சாய்ந்திடவா
நின் இதழ் எனக்குத் தா 
நிலையை மறந்த மகிழ்ச்சியைத் தா

Sunday, 5 April 2015

சொந்தவூர் செல்லுவேன்

சொந்தவூர் செல்லுவேன்
சொந்தங்களைக் காணுவேன்
சேர்ந்திருந்த நாட்களையே
சொர்கமாக எண்ணுவேன்
நண்பர்களைத் தேடுவேன்
நல்லபடிப் பேசுவேன்
நான்படித்த நாட்களிலே
நடந்ததையே  யோசிப்பேன்
ஆசிரியரைக் காணவும்
ஆசிபெற்று  மகிழவும்
நேசமுடன் நட்புடனே
நீண்டநேரம் தங்குவேன்
வந்தவேலை முடிந்ததும்
வாழ்ந்த நாட்கள் எண்ணியே
நொந்து நானும் வருந்தியே
நேரத்தோடு திரும்பி செல்லுவேன்

(கவியாழி)Friday, 27 March 2015

முற்போக்குச் சிந்தனையால் வாழும் மனிதமே!

சாதியெனும் பட்டத்தைத் தலைமீது தந்ததா
சக்தி வாய்ந்த எதிரிகளால் வளர்ந்து வந்ததா
மோதிவரும் கூட்டமெல்லாம் உழைக்க மறுப்பதால்
முன்னோர்கள் சொன்னதென வளர்த்து வருவதா

பாதிவயிறு உண்ணாமலே உழைக்கும் வர்க்கமே
பகலிரவாய் மோதிக்கொண்டு சாதி வளர்ப்பதா
மீதியுயிர் போகும்வரை வெட்டிச் சாய்ப்பதால்
மீண்டுவரும் பயனையாரோ மகிழ்ச்சிக் கொள்வதா?

பாடுபட்டுச் சேர்ந்து வாழும் கூட்டம் மட்டுமே
பகலிரவாய் அன்பு கொண்டு கூடிவாழுமே
நாடுவிட்டு நாடுபோவோர் அந்த நாட்டிலே
நாகரீக போர்வையாலே சொல்ல மறுப்பதேன்?

வேளாண்மை  நம்தொழிலாய்ப் போற்றி வாழ்வதால்
வேலைவெட்டி யில்லா நிலைமை மாறியே
ஏழைகளும் ஒற்றுமையாய் சேர்ந்து வாழவே
ஏற்றத்தாழ்வு மாறிவிடும் உண்மை உழைப்பிலே!

அன்புடனே ஒற்றுமையாய் இணைந்து செல்வதால்
அன்னியனும் பயப்படுவான் நம்மைப் பிரிக்கவே
பண்புடனே பழகுவதால் பயனும் உள்ளதே
படித்தோரே புரிந்தோரே உண்மை நிலையிதே!

படிப்பறிவு நிறைந்திருக்கும் இந்தநாளிலும்
பகைமையோடு வாழ்வதனால் பயனும் இல்லையே
முடிவேடுப்பீர் வாழும்வரை உண்மை நிலையினை
முற்போக்குச் சிந்தனையால் வாழும் மனிதமே!

(கவியாழி)


Saturday, 21 March 2015

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால்
கஷ்டமும் தருவானா?

கயவர்கள் நிம்மதியாய்
காசு பார்க்க விடுவானா?

திருடன்  துரோகிஎல்லாம்
தைரியாமாய் திரிவானா?

காசு பணத்திற்காக
கள்ள தொழில் செய்வானா?

இல்லாதவன் ஏங்குகிறான்
இருப்பவனோ  பதுக்குகிறான்

உள்ளதை சொல்பவன்
உயர்வின்றி தவிக்கிறான்

நல்லவனாய் இருப்பவன்
நாளும்  மனதால்இறக்கிறான்

பொல்லாங்கு சொல்பவன்
புகழோடு இருக்கிறான்

உனக்காக செய்வதை
ஏழைக்கு கொடுக்கசொல்!

உயர்வாக உன்னிடம்
ஒழுக்கத்தை பயிலசொல்!

தனக்காக உள்ளதுபோக
தருமம் செய்யச்சொல்!

மனித நேயம்  மறக்காமல்
மனிதனை இருக்கசொல்!

மனிதனாக இருக்க
மனிதாபிமானம் மதிக்கசொல்!

பெற்றோரை,மற்றோரை
மாண்புடனே மதிக்கசொல்!

தனியொழுக்கம் கற்றுதந்த
ஆசிரியரை மதிக்கசொல்!!!

(கவியாழி)
21.12.2012 ன் மறுப்பதிவு

Wednesday, 18 March 2015

குறள் வெண்பா

ஏனிந்த நாட்கள் இனிமை இழந்திங்கு? 
நானெங்குப் போவேன் நவில் 

பூமானே! பெண்ணே! பூத்தமுதே! வந்தெனக்குத்
தா..மானே இன்பம் தழைத்து!

திடுக்கிட வைத்த தொடரைப் பார்த்து
நடுங்கியே சென்றேன் நகர்ந்து!

உறவுகள் சோ்பணம் உள்ளவரைத் சேரும்!
சிறப்புகள் போகும் சிதைந்து

தலைகுனிந்து நிற்கின்றேன்! தாயே அருள்செய்! 
நிலையறிந்து காப்பாய் நிலத்து!

சொல்லாலே இன்றும் சுடுகின்றாய்! வாழ்நாளில் 
இல்லா நிலைஇஃது எனக்கு

இனத்தின் பெயரால் இடும்பை தொடரும் 
பணமே படைக்கும் பழி 

இறைவன் இருந்திங்கு மக்களைக் காத்தால்
குறைகள்  வருமோ குவிந்து? 

தாரணியில் போற்றித் தமிழை வளர்க்கின்ற 
பாரதி தாசனைப் பாடு!

Monday, 16 March 2015

அருகிலே இருந்தும் அறிவில்லாக் கூட்டாளி

அப்பன் பங்காளி அவனுமே எதிராளி
அருகிலே இருந்தும் அறிவில்லாக்கூட்டாளி
சுப்பன் வந்து சண்டை போட்டால்
சுருக்கெனக்கோபமாய்ச்சொந்தமென வருமாம்!

வசிக்கும் இடத்திலே வறப்புச்சண்டையிட்டு
வருவோர் போவோரிடம் வசையான சொன்னாலும்
கசக்கும் வார்த்தையால் கண்டபடி திட்டினாலும்
பசிக்கும் நேரத்திலே பங்கிட்டு உண்பாராம்

ஆடுகளும் மாடுகளும் அருகே சென்றாலே
அதையும் விரட்டி அங்கிருந்து துரத்தி
ஓடிச் சென்று ஓடோடி விரட்டிடுவான்
ஓய்ந்த நேரம் உட்கார்ந்து பேசிடுவான்

உழவுக்கு ஏர்பிடித்து உரிமையுடன் சென்றாலும்
ஊருக்கு தெரிவதுபோல் உறக்கப் பேசிடுவான்
இழவுக்குச் சென்றாலும் இணைந்தே போனாலும்
இருப்பிடமே வந்தவுடன் இணைபிரிய மாட்டானாம்

கிணற்றிலே நீரைக்காலமாய்ப் பங்கிட்டுக்
கீழ்வயலில் பாத்தியிட்டுக் கீரைகளை விதைத்து
பணத்திலே சரியாய்ப்பங்கும் தருவானாம்
பங்காளி என்றழைத்துப் பாசமுடன் இருப்பானாம்

உழைப்பவன் மட்டுமே உடனடி சச்சரவை
ஊராரும் மெச்சும்படி உடன் பங்காளியென
உரிமையுடன் சண்டையிட்டு உடனே கூடுவான்
உலகமே வியக்கும்படி உரிமை கொண்டாடிடுவான்!


(கவியாழி)


Friday, 13 March 2015

பார்த்ததும் திண்பதை நிறுத்து!

உறவுகள்  எனக்கு உதவி செய்யாது
உணர்தவர் கண்டும் உண்மை சொல்லாது
பிரிவினால் மனதில் பித்தம் பிடித்தேன்
பிரிந்தவர் சொல்லும் காரணம் கேட்டே!

வயிற்றில் கண்டதை விழுங்கி யதனால்
வந்ததை உண்பதும் வாழ்வைக் கெடுக்க
பயிற்சி தேவையா பலனேதும் உண்டா?
பார்த்ததும் திண்பதை நிறுத்து!

கொஞ்சிப் பேசும் கொழுந்தி யவளைச்
கிஞ்சித்தும் இடம் கிடைக்க வழியின்றி
வஞ்சித்துப் போகும் வாழ்க்கைத் துணையை
வார்த்தை யுண்டோ  வைய?

அந்த நாளில் கண்டதைத் தேடி
அலைந்த நட்பு அடங்காமல் இன்றும்
நொந்தக் கதையை நான் கேட்டே
நொடிந்தே கடிந்தேன் இன்றே

கண்ணும் இமையும் கலந்து பேசி
கண்ணன் வரவைக் கண்ட பின்னே
விண்ணைப் பார்த்து வீதியைக் காட்டி
விடுகதை போட்டது எதற்கோ?


(கவியாழி)

Tuesday, 10 March 2015

எனது 25 வது திருமண நாள் 10.03.2015

கடந்த வருடங்களில் கண்ட மகிழ்ச்சி
களிப்பூட்டிய நாட்கள் கணக்கி லடங்கா
கடனாகக் கிடைத்த கனிவான சொந்தங்கள்
கண்டதும் இன்பங் கொண்ட நட்புகள்

தொடந்த துன்பங்கள் தொலைத்த இன்பங்கள்
துரத்தி வந்தாலும் தாங்கினேன் நேசித்தேன்
அடர்ந்த மனதிலே அன்றாடம் பூசித்தேன்
அம்மா அப்பாவை அளவின்றி யாசித்தேன்

வெறுப்பேற்றி சென்ற  வீதிவழி உறவுகள்
வீணாய் சண்டையிட்ட வீண்பேச்சுக் காரர்கள்
பொறுப்பின்றி உறவாடி போய்விட்ட நண்பர்கள்
போதையைத் தூண்டிய பேதைகள் இருந்தும்

பணம்காசு சேர்க்காமல் பல்லிளித்துச் செல்லாமல்
பதவியிலே தன்மானம் பறந்தெங்கும் போகாமல்
குணம்மாறி சிறிதேனும் குற்றங்கள் செய்யாமல்
குடும்ப உறவாக குறைவின்றி காத்திட்டேன்

உறவுகள் என்னிடம் உதவி கேட்டால்
உடனே செய்வேன் உறவையும் காத்தேன்
பிரிவுகள் ஏற்பட பிணையின்றி செய்ததே
பின்னாளில் தெரிந்தேன் பிரிவையும் தாங்கினேன்

நட்புக்கு நான்தந்த நாட்களோ குறைவில்லை
நாள்தோறும் மறக்காமல் நன்றியுடன் தானிருந்தேன்
உட்பக்க இதயத்தில் ஓரிடத்தில் வைத்தும்
உளமார தொடந்தும் ஒதுங்கிச் சென்றார்

இக்கால வாழ்கையில் இடையூறு வந்தாலும்
இனிமேலே துன்பங்கள் தொடர்ந்து வராமல்
சிக்கலைத் தீர்த்து சிரித்து வாழவே
சிறப்பான வாழ்த்துக்கள் சொல்ல வருவீரோ
(கவியாழி)Tuesday, 3 March 2015

"காளியூட்டு " நாவல் அறிமுகம்-சிறு குறிப்புகள்

      கடந்த வாரம் 24.02.2015 அன்று தமிழ் புத்தக நண்பர்களால்  ஆழ்வார்பேட்டையில்  உள்ள " TAG " சென்டரில்  இந்நூல் அறிமுக விழா நடைபெற்றது .  எழுத்தாளர் திருவாளர்.மா.அரங்கநாதன் எழுதிய இந்நாவலை காவ்யா வெள்ளிவிழா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் இரண்டாவது நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

"பழந்தமிழ் வீரியமும் புதுமையும் இயைந்த மொழிநடை ,சொற்களைச் செதுக்கி சொற்களுட்புகுத்தும் தனித்துவம்  கொண்ட ஆளுமையில் " படைக்கப் பட்டிருக்கிறதுஅய்யா நா. கந்தசாமி அவர்கள் அணிந்துரையில் குறிபிட்டது:

   நூலாசிரியர் சிறு கதைகளிக் கவிதை மாதிரியே  பண்டைய மரபின் படி யெழுதியுள்ளார்."அறிய அறிய அறியமுடியாத அளவில் மர்மமும் புதிருங்கொண்டு இருப்பது" ,"வாழ்க்கைப் போலவே எளிதாகவும்-புரிவது மாதிரியே புரிபடாமலும் " என்று அவர்தம் குறிப்பில் சொல்லியுள்ளார்.


திருவாளர் .மாசிலாமணி,கலைஞன் பதிப்பகத்தார் சொன்னது;

"மண்ணோடும் மரபோடும் வாழ்க்கையின் யதார்த்தம் மேலோங்குகிறது.இவர் எழுத்து இயல்பு சொற்களுக்கு ஊடாக மனோதத்துவ ஒலி ஊடுருவிக் கொண்டிருக்கும்"

முனைவர்.எழுத்தாளர்.தமிழச்சி தங்கபாடியன் ஆய்வுரையில் சொன்னது;
ஒரு எழுத்தாளருக்கு இன்னொரு படைப்பாளியின் பாராட்டுக் கிடைப்பது அரிதான ஒன்று ,பண்முகங்கொண்ட  எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இன்னொரு எழுத்தாளரின் எழுத்தாளுமைத் திறன்பற்றி ஒரு பெரிய பாராட்டுப் பத்திரமே (44 நிமிடங்கள் )வாசித்த ஒவ்வொரு நிமிடமும்  புதுப்புதுச் சொற்களை பயன்படுத்தினார் , ஆம் .நூலாசிரியரின் வார்த்தை ஜாலங்களை விட இவரின் ஆய்வுரையில் நல்லத் தமிழ் சொற்களை பயன்படுத்தியிருந்தார் 


நூலாசிரியர் இறுதியாக ....
தான் கிராமத்திலிருந்து வந்தவன்  என்றும் ,இன்னும் எனது கிராமத்தின் மீதான  அக்கறை இருப்பதாகவும் ,இந்நூல் நாஞ்சில் நாட்டின் பற்றியதாகவும்  இதில்  குழுவன்,ராப்பாடி,கோமரத்தாடி  போன்றோருடன் முத்துக் கருப்பனின் பாத்திரம் மேலோங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.இந்த கதையில் பிராமணனை விட சாதிவெறி அதிகமாய் இருப்பதை கதையாசிரியர்  கூறினார். 

79 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பழமையான சொற்களைக் கையாண்டிருப்பது நூலாசிரியரின் புத்தக வாசிப்பின் அனுபவத்தையும்  பல நூல்களை படித்து  வார்த்தைகளை கையாண்ட விதம் குறித்து நூல் குறிப்பில் எழுதியுள்ளார்.கவித்திறன் கொண்ட வார்த்தைகளால் நூலின் ஒவ்வொரு பக்கமும் புதுப்புதுச் சொற்களை காண முடிகிறது.

--கவியாழி--


Thursday, 29 January 2015

கவிஞர் .கி.பாரதிதாசன் . வலைப்பதிவரின் இந்திய வருகை மற்றும் நிகழ்ச்சிகள்திருவாளர்.கவிஞர்.கி.பாரதிதாசன் அவர்களை கடந்த 26.01.2015 திங்கள்கிழமை இந்திய சுதந்திர தினத்தன்று புதுவையில் சந்தித்தேன்.
நான் "தமிழ்மாமணி" புலவர் .எழில்நிலவன் அவர்களை நான்  சந்திக்கச் சென்றிருந்தபோது  எதிபாராத விதமாக அவரது தந்தையும் புலவருமான .திருவாளர்.கலைமாமணி .கிருஷ்ணசாமி அவர்களுடன் கண்டு மகிழ்ந்தேன்.அந்த சந்திப்பு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.நான் கவிஞர்.பாரதிதாசன்.தமிழ்மாமணி புலவர் .எழில்நிலவன்,கி.பாரதிதாசன் அவர்களின் தந்தையும் கலைமாமணி,புலவர்.கிருஷ்ணசாமி அய்யா அவர்கள்

நானும் அவரும்


தமிழும் தமிழ்த் தொண்டுகள் பற்றிய கலந்துரையாடல்                                               மகனும்                                  தந்தையும்தமிழ்மாமணி.புலவர்.புதுவை.எழில்நிலவன் அவர்களின் புதல்வியும்  இளம் முனைவருமான இரா.எழிலரசி சனார்தணன் அவர்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கவிஞர்.கி.பாரதிதாசன் வாழ்த்தியபோது

மேலும்......


புலவர் கி.பாரதிதாசன்  அவர்கள் எழுதிய "ஏக்கம் நூறு" கனிவிருத்தம்" ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது .அதில்  பங்குபெற என்னையும் அழைத்துள்ளார்.அவ்விழா முடிந்ததும் பின்  ஓரிரு நாட்களில் சென்னை வருவதாக கூறியுள்ளார்

(கவியாழி)

Friday, 23 January 2015

இனிமேல் கணக்கைத் தொடங்கு...

மார்கழி மாதத்தில் வண்டுகள்
மலர்களைத் தேடி வருவதில்லை
மலரினில் சேர்ந்திடும் பனியினால்
மலரும் தேனைத் தருவதில்லை

பனியும் அதிகம் பெய்வதாலே
பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை
பெண்களும் பூக்களை நினைத்தே
பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை

பனியில் தேனிகள் வருவதில்லை
பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
அதிகப் பனியால் ஆண்களுக்கும்
அதற்கும்  இப்போ விருப்பமில்லை

இனிமேல் பனியும் குறைந்து
இளமை செடிபோல் வளர்ந்து
உறவும் மகிழ்வாய் இருந்து-மக்கள்
உடனே கணக்கைத் தொடங்கு

(கவியாழி

Wednesday, 7 January 2015

சென்னையிலிருந்து ரெய்ச்சூர் வரை ...05.01.2015 அன்று சென்னையிலிருந்து மும்பை மெயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதியுடைய தொடர்வண்டியில் இரவு 10.50 மணிக்குப் புறப்பட்டு  பிற்பகல் காலை 12.00க்கு ரெய்ச்சூர்  சேர்ந்தேன்அதிக வெய்யிலோ குளிரோ இல்லாமல் மிதமான சூழல் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.அதிக  கூட்டமோ  நெரிச்சலோ இல்லாமல் அமைதியான சூழலில் இருந்தது மிகவும் பிடித்திருந்தது

இங்குள்ள எல்லா உணவகங்களிலும்இதுபோன்ற பெரிய அளவிலான இட்லி கிடைத்தது.இரண்டு இட்லியே காலை,இரவு  உணவுக்கும் போதுமானதாக இருந்தது.சாம்பார் கொடுக்காமல் துவையலுடன் ஊறுகாய் போல மிளகாய் கரைசல் மட்டுமே தந்தார்கள்


அருகில்  ராகவேந்திரர் நிர்மானித்த மந்த்ராலயம்  இருக்கிறதாகவும் அங்கு சென்றுவிட்டு பஞ்சமுகி ஆஞ்சிநேயரை தரிசனம் செய்யலாம் என  என்னுடன் பயணித்த நண்பர் சொன்னதால் அங்கு சென்று ராகவேந்திர சாமிதரிசனம் செய்தப்பின் அங்கு அனைவருக்குமான இலவச மதிய உணவும்  சாப்பிட்டோம்.அங்கு அனைவரோடும்மிக சுகாதாரமான  தரையில் உட்கார்ந்து உணவருந்தியது மனதுக்கு இதமாகவே இருந்தது.

திங்கள் காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு மும்பை தாதர் விரைவு வண்டியில் மாலை எட்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்


(கவியாழி)


Friday, 2 January 2015

வாழ்த்து

downoad-new-year-images
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு  வாழ்த்துக்கள்.எல்லா வளமும் செல்வமும் அமைதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்