Posts

Showing posts from April, 2020

தெய்வங்கள்

தெய்வங்கள்

சித்தமும் கலங்கிட செய்தாயோ ?

தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம் நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ தினம் பலபேர் மடிவதால் தீங்கு செய்யும் மக்களுக்கு பணமும் பொருளும்பயனின்றி-மக்களின் பாசம் நேசம்  பகிர்ந்தாயோ அழிவுப் பாதையை அறிந்தாயோ அழிக்கும் வேலையும் இதுவன்றோ இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும் இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே பூமியின் சுழற்சியை புரிய வைக்க புத்துயிர் மக்களை  தெளிய வைக்க நித்தமும்  நிம்மதி யிழக்க செய்து-மனிதன் சித்தமும் கலங்கிட செய்தாயோ கவியாழி. கண்ணதாசன்

மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே

மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே மறந்ததை இழந்ததை அறிவாயோ புகழ்சியின்  உச்சத்தில் உன்னை-இன்றும் பூமியில் தினமும் வணங்குகிறோம் இயற்கையை மனிதன் அழித்தனால் இளமையில் உழைக்கத் தவறியதால் உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின் உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு மானிடம் மறந்ததை அறிந்தாயோ மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ பிழைக்கவும் வழியே தெரியாமல் பிணமாய் மக்கள் உயிர்வாழும் பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே பயத்துடன் வாழ பணித்தாயோ கவியாழி.கண்ணதாசன் 07.04.2020- சென்னை

ரசித்தவர்கள்