தூக்கி செல்ல நால்வர்........
உடலும் கழிவாய் மாறும் உயிரும் பிரிந்து போனால் உணர்ந்தே நாளும் வாழ்ந்தால் உண்மை வாழ்க்கை புரியும் தூக்கி செல்ல நால்வர் துவண்டே அழவும் சிலபேர் தொடர்ந்தே வந்திட உற்றார் தொலைத்த குடும்ப உறவோர் வாழ்ந்த வாழ்க்கை போற்றி வாழ்த்தும் நண்பர் கூட்டம் வணங்கிச் செல்லும் மக்கள் வருந்தி அழைத்தால் வருமா ஆக்கம் செய்த பணிகள் அனைத்தும் முன்னே வருமாம் அன்பால் செய்த செயலே அருகில் நின்று அழுமாம் ஏக்கம் இல்லா வாழ்வும் ஏழ்மை உணரா உயர்வும் என்றும் நன்மை செய்யா எவரும் நம்மை மதியார் தூக்கம் விழித்துப் பார்க்கத் தோழமை வேண்டும் உலகில் தொடர்ந்தே குழிவரை வருவோர் துயரம் கண்டிட வேண்டும் உயிரும் உள்ள போதே உரிமை கொண்டோர் மகிழ உணர்வை மதித்துச் செய்தால் உடலும் மனமும் அழுமே எல்லா உயிரும் இதுபோல் ஏந்தல் செய்வது மில்லை பொல்லா மனித இனமே புரிந்தால் வாழ்க்கை நலமே ---------கவியாழி----------