Posts

Showing posts from December, 2014

தெய்வங்கள்

தெய்வங்கள்

தூக்கி செல்ல நால்வர்........

உடலும் கழிவாய் மாறும் உயிரும் பிரிந்து போனால் உணர்ந்தே நாளும் வாழ்ந்தால் உண்மை வாழ்க்கை  புரியும் தூக்கி செல்ல நால்வர் துவண்டே அழவும் சிலபேர் தொடர்ந்தே வந்திட உற்றார் தொலைத்த குடும்ப உறவோர் வாழ்ந்த வாழ்க்கை  போற்றி வாழ்த்தும் நண்பர் கூட்டம் வணங்கிச் செல்லும் மக்கள் வருந்தி அழைத்தால் வருமா ஆக்கம் செய்த பணிகள் அனைத்தும் முன்னே வருமாம் அன்பால் செய்த செயலே அருகில் நின்று அழுமாம் ஏக்கம் இல்லா வாழ்வும் ஏழ்மை உணரா உயர்வும் என்றும் நன்மை செய்யா எவரும் நம்மை மதியார் தூக்கம் விழித்துப் பார்க்கத் தோழமை வேண்டும் உலகில் தொடர்ந்தே குழிவரை வருவோர் துயரம் கண்டிட வேண்டும் உயிரும்  உள்ள போதே உரிமை  கொண்டோர் மகிழ உணர்வை மதித்துச் செய்தால் உடலும் மனமும் அழுமே எல்லா உயிரும் இதுபோல் ஏந்தல் செய்வது மில்லை பொல்லா மனித இனமே புரிந்தால் வாழ்க்கை நலமே ---------கவியாழி----------

இன்றும் வாழும் பாரதியே....

Image
இன்றும் வாழும் பாரதியே எப்படி மறப்பேன் உனையே ! எழுச்சித் தமிழை உணர்த்தி-அன்று எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாய்! உன்னை விட்டு வைத்தால் உலகையே மாற்று வாயென, பெண்மை யொத்த சிலரால்-மனதால் பெரும்பிணி யேற்றும் வாழ்ந்தாய் கண்ணைபோல் வளர்த்த மகளை கலப்புத் திருமணம் செய்து கடவுள் இதையும் ஏற்பாரென-விரும்பி கண்குளிர பார்க்க எண்ணியதை, திண்ணைத் தோறும் சென்று தீராப்பழி சுமத்தி வந்தோர் பெண்ணை மயக்கிப் பிரித்தே-நீயின்றி திருமணம் செய்து வைத்தார் கண்ணை இழந்துக் கலங்கிக் கடின வாழ்க்கை வாழ்ந்தும் காளையெனச் சுற்றித் திரிந்ததை-சூழ்சியால் கண்துயில வைத்து விட்டனரே! (கவியாழி) 

பிடிவாதம் மனநோயா? ஊனமா?

          பிடிவாதம் என்பது தவறோ சரியோ ஆனால் இது எல்லா வயதினரையும்  விட்டு வைப்பதில்லை. எப்போதாவது அல்லது எப்பவுமே பிடிவாதத்தையே  இயல்பாக கொண்டவர்கள் நிறையப்பேர் உள்ளனர். தான் சொல்வதுதான் சரி என்று வாதிட்டு அவர்களே தம்மைத்தாமே சரி என்று சுயநிர்ணயம் செய்து பிடிதளராமல் தான் நினைத்ததையே செய்வார்கள்.          குழந்தைப்பருவத்தில் இருக்கும் பிடிவாதம் நாளாவட்டத்தில் எடுத்துச் சொன்னால் சரியாகிவிடும், போகப்போக தனது குணத்தை மாற்றிக் கொண்டு விடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் அன்பாகப் பேசிப்பேசியே காரியத்தைச் சாதித்துக்கொள்ளும். அப்படிப் பிடிவாதமாய் இருக்கும் பிள்ளைகள் அப்பா அம்மா சண்டையிட்டுக் கொண்டால் இது நம்மால் வந்த பிரச்சனையோ என்று அஞ்சி பின்பு சரியாகி விடுவார்கள்.           பத்திலிருந்து பதினைந்து வயதிற்குள் மாறி விடுவார்கள். இவ்வயதையும் தாண்டிய குழந்தைகள் அப்படியேதான் இருப்பார்கள். அதைப் பிறவிக்குணம் அப்பா,அம்மா மாதிரி  என்று பெற்றோரும் சமாதானமாகி விடுவார்கள். ஆனால் அது சரியல்ல. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கேற்ப மாற்ற முயற்சித்தால் நிச்சயம் மாறி விடுவார்

சொல்வீரே... நல்லோரே...

இல்லா நிலையில் உள்ளோர்க்கு-இயைந்து இருப்பதைக் கொடுக்கச் சொல்வீரே பொல்லா வார்த்தையைச் சொல்லாமல் -புரிந்து புகழை மட்டும் சொல்வீரே நல்லோர் வாழ்த்த நாளும்- நகைந்தே நட்புடன் வாழச் சொல்வீரே எல்லா நாட்களும் நல்லதென்றே -உணர்ந்து எதையும் மகிழ்ந்தே சொல்வீரே தினமும் நல்ல வார்த்தைகளைத் -தொடர்ந்து தெரிந்தே வாழ்த்தச் சொல்வீரே (கவியாழி)

ரசித்தவர்கள்