உச்சத்தைத் தொடுவதில்லை
அன்புக்கும் ஆசைக்கும் எல்லையில்லை
அனைவரின் மனதிலும் முடிவதில்லை
பண்புக்கும் பாசத்திற்கும் பின்னமில்லை
பார்ப்பவர் மனதில் துன்பமில்லை
நட்புக்கு எல்லையை யாரறிவார்
நாளுமே தொடர்ந்திடவே மறுப்பாரோ
தப்பேன்றே சொல்லாத நட்புடனே
தடுமாறி நின்றாலும் காத்திடுவர்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
எளிதில் விடை சொல்லி
அத்தனையும் மறந்திட்டு நீ
அடுத்த நொடியில் மகிழ்விப்பார்
பித்தனாய் இருக்காது மனதில்
பிழையின்றி சிரிப்போடு இருக்க
அத்தனையும் சொல்லுவார் அறிவை
அழகாக புதிதாக்கி மகிழ்ந்திடுவார்
கவியாழி கண்ணதாசன்
22.10.2026
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...