அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க !

பச்சை இலைகளோடோரு பழுத்த யிலை பாதிகாய்ந்ததோர் பளுக்கா யிலை மிச்ச இலைகளெல்லாம் மேலே னோக்க மீதியிரண்டு மேன் கீழே நோக்கி ? உச்சமடைந்து உயிரைபோக்க கீழே உதிரக் காக்கும் நோக்கம் ஏனோ அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க-பிறகு அதுவும் கருகி உரமாய்ப்போகும் மிச்சம் மீதி வாழும் நாட்கள தற்கு மீண்டும் கதிரவன் துணையே வேண்டாம் துச்சமில்லையென துடித்து விழாமல்-மரத்தில் தொங்கிக் கொண்டே விழுந்தே காயும் இயற்கை வழியில் இச்சைத் தீர்த்து இலைகள் போல மனிதன் வாழ்வும் சொற்ப நாட்கள் உலகில் உலவி-இறப்பு சோகமின்றி நல் நினைவாய் முடியும் .........கவியாழி.கண்ணதாசன்...... சென்னை.27.08.2020