அரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும்
கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆரம்ப பள்ளிகளின் ஆசிரியர்களே முக்கிய பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது.குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப் படுத்தும் விதமாக சொந்த பணத்தில் மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தியும் ஆசிரியர்களே அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துப் பாடம் சொல்லித்தந்தார்கள். பெற்றோர்களையும் சந்தித்து கல்வியறிவின் தேவையையும் படித்தால் பிற்காலத்தில் அறிவு மேம்பாடு ,வாழ்க்கைத்தரம் உயர்வு அரசு வேலை போன்ற அறிவுரைகளைச் சொல்லி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்துவார்கள்.மாணவர்களை படிக்க வைக்க வேண்டி அரசு வழங்கும் மதியஉணவுத் திட்டத்தில் ஏழை மானவர்களைச் சேர்த்து மதிய உணவு தந்து படிக்க வைத்தார்கள்.மாணவர்களின் குறைநிறைகளை பெற்றோர்களுக்குத் தெரியப் படுத்தி மாணவர்களின் கல்விக்குப் பேருதவி செய்தார்கள் நானும் அரசுப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்புவரைப் படித்தேன்.நான் ஆரம்பக் கல்வி படிக்கும்போது மாணவர்கள் மேல் அக்கறையுள்ள பல ஆசிரியர்கள் தாங்களாகவே மாணவர்களை அழைத்துவர கிராமத்திற்குள் ச...