தமிழ் மரபுவழிப் பயணம்
17.03.2019 அன்று ஞாயிற்றுக்கிழமையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ் மரபுவழித் தேடி 36 பேர் குளிரூட்டப்பட்ட பேருந்தில் சென்றோம்.செல்வி.சுபாசினி அவர்களின் தலைமையில் திரு.ஸ்ரீதரன் அய்யா அவர்களின் வழிகாட்டுதலுடனும் திரு.காந்தி. அவர்களால் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு கோயம்பேட்டிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு முதலில் காஞ்சிபுரம் அடுத்த காவேரிபட்டினம் அருகிலுள்ள மகிந்திரவாடி எனும் சிற்றூரில் அமைந்த குடைவறைக் கோவிலுக்கு முதலில் சென்றோம். பின்னர் அங்கிருந்துப் புறப்பட்டு ராணிபேட்டை சிப்காட் வழியாக திருவலம் சென்றோம்,நாங்கள் பேருந்தைவிட்டு இறங்கி கோவிலுக்குள் நுழையுமுன்னே நடைசாத்திவிட்டார்கள் என்பது வருத்தமாக இருந்தாலும் அங்கு வெளியே இருந்த கலைநுட்பமான கல் தாழி மேலும் சுவரில் வரைந்திருந்த சிற்பங்கள் மற்றும் கல்கதவு போன்றவற்றை வியப்புடன் பார்த்தோம்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேல்பாடி நோக்கி பயணமானோம் ,நல்லவேளை அங்கு கோவில் திறந்தே இருந்தது அங்கே ஆர்வத்துடன் உள்ளே நுழைய முற்படுமுன் அதிக வெப்பத்தினால் தரையில் கால் வைக்கமுடியாத நிலையில் பலரும் தயக்கம் காட்ட