Showing posts with label கட்டுரை/நாட்டுநடப்பு/உண்மை. Show all posts
Showing posts with label கட்டுரை/நாட்டுநடப்பு/உண்மை. Show all posts

Wednesday, 25 December 2013

வேலைக்கு ஆட்கள் தேவை

வேலைக்கு ஆட்கள் தேவை ,ஆண்-பெண் ,அதிகச் சம்பளம், ஏ.சி வசதியுடன் வேலை வாய்ப்பு,தங்குமிடம் உணவு இலவசம்,குறைந்த நேரம், அனுபவமில்லாத,குறைந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்,வாகனம் இலவசம்,குழந்தைகள் காப்பகம் உண்டு, போனஸ் ,வீட்டுவாடகை ,
குடும்பத்துடன் தங்குமிடம் இலவசம் போன்ற  பல சலுகைகளுடன் அழைத்தாலும் உள்ளூரில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

ஆனாலும் மும்பை,குஜராத்,டெல்லி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா  போன்ற வெளியூர்களுக்குச் சென்று அங்குக் கடுமையாக உழைத்தும் அந்தந்த ஊர்களில் தங்கியும் வேலைச் செய்கிறார்களே ஏன் அப்படி இங்கு நம்மூரிலேயே ஏன் உழைக்க முன்வருவதில்லை .பல நேரங்களில் கொத்தடிமை மீட்பு ,அங்குத் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள்,சம்பளம் கொடுக்கவில்லை  போன்ற எல்லாப் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளூரில்  வேலைசெய்வதில்லை 

இது ஏன்? யாரால் ? எப்படி? இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதோ? ஏழ்மை என்பதே தமிழ் நாட்டில் இல்லையோ? அல்லது தொழில் வளம் மிகுந்த நிலையில் உள்ளதோ?.
தமிழர்களின் பொருளாதார நிலை  உயர்ந்து விட்டதோ? இப்படி எண்ணற்ற கேள்விகள் என்மனதில் எழுகிறது ,உண்மையா? உங்களுக்கும் இதுபோல் மனதில் கேள்வி  வருகிறதா? இல்லையா?

இன்று தமிழகத்தில் எல்லா மக்களும் மகிழ்ச்சியாய் உயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை ஆனாலும் இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை அதனால் தொழிலில் மந்த நிலை ஏற்படுகிறது உற்பத்தி குறைச்சல் ,ஏற்றுமதி குறைச்சல் ,விவசாயம் செய்வதற்கும்  ஆட்கள் இல்லாமல் இருப்பதாகப் பேசப்படுகிறது.ஆனாலும்  மக்கள்  வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று பெரும்பாலான தொழில் நகரங்களில் வெளியூர் ஆட்கள் வேலைச் செய்து வருகிறார்கள் அதுவும் குறைந்த சம்பளத்துடன் அதிக நேரம் வேலை,கடுமையான உழைப்பு  இருந்தாலும் நிச்சயமான வேலை நிரந்தரமாய்க் கிடைக்கிறது. பணியிடம் அருகிலேயே தங்குமிடம் ,பள்ளி ,
போக்குவரத்து வசதி போன்ற இன்னபிற சலுகைகளுடன் மகிழ்ச்சியாய்க் குடும்பத்துடன் வேலைச் செய்து வருகிறார்கள்.

வெளியூர் ஆட்களை நேரடியாய் நியமனம் செய்யாமல் குத்தகை ஊதிய அடிப்படையில் வேலைகள் விடப்படுவதால் முதலாளிகளுக்கு அவர்களால் எந்தப் பிரச்சனையுமில்லை.சம்பளப் பட்டுவாடா,  ,போனஸ்,ஊதிய உயர்வு ,சீருடை,சிறப்பு ஊதியம் ,விடுமுறை,இதர பல சலுகைகள் போன்ற பல  முதலாளி-தொழிலாளி பிரச்சனையின்றியும் இருப்பதால் நிம்மதியாய்த் தொழில் நடத்த முடிகிறது என்ற வாதமே பெரும்பாலான  முதலாளிகளுக்கு வசதியாய் உள்ளது. 

இதற்குப் பல காரணங்கள் சொன்னாலும் ரயில்,பஸ், போன்ற போக்குவரத்து வசதிகளும் .மேம்பட்ட சாலை வசதியும் ஒரு காரணம் என்றே எனக்குத் தோணுகிறது.இந்தியாவில் எந்தப் மூலையிலும் வேலைக் கிடைத்தால் மகிழ்ச்சியே என்று மற்ற ஊர்களுக்கு சென்று அங்கும் கடுமையான வேலையே செய்து உள்ளூர் மக்களின் பழைய  பழக்கவழக்கங்கள் இன்றி சுதந்திரமான சூழ்நிலை வேண்டியே பலரும்  சென்று விடுவதால் உள்ளூர் வேலையாட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவே எண்ணுகிறேன்.

ஆனால் ஒருசிலரே இதனால் மேன்மையான வாழ்க்கையைத் தொடருகிறார்கள்,சிலரோ எனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி வேலைக்கு செல்வதைத் தவிர்த்து வீணான பிரச்சனைகளுக்கு ஆட்பட்டு விரக்தியான நிலையில் தானும் கேட்டு பிறரின் மனநிம்மதியையும் கெடுத்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

வெளியூர் மக்கள் இங்கு வந்து வேலை செய்யும்போது நம்மூர் மக்களுக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது.இதில் யோசிக்க வேண்டிய விஷயமென்றாலும்  சமூகத்தில் தானும் மதிக்கப்பட வேண்டும் எந்த வேலையானாலும் பரவாயில்லை என்ற மனமாற்றம்  இருந்தால் எல்லோரும் ஒற்றுமையாக சிறப்பாய் வேலை செய்யவும் வாழவும் முடியும் அயல் நாட்டினர் இங்கு வந்து வேலை பார்த்து செல்லும்போது நம்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.