பெற்றோரும் பிள்ளைகளும் .......
உறவு, உரிமை என்ற பந்தம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் மட்டுமே தொடர்வது. இந்த இரண்டும் செவ்வனே கடைபிடிக்க முடியுமானால் இந்தப் பிறப்பும் இந்த உறவும் இனிமையாய் இருக்கும். இல்லையென்றால் சொல்லொணாத் துன்பமும் மனவலியுமே மிஞ்சும். பெற்றோர்கள், பிள்ளைகளின் நேர்மையான ஆசைகளை வளர்ப்பதும் அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற முயலுவதும் அவசியம். பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமே தம் பிள்ளைகள் நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, நல்லவிதமாக மணமுடித்து, பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் இருந்தால் போதும் என்பதே ஆகும். அதற்காக, அவர்களின் படிப்பு விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு படிக்கும் காலத்தில் பொறுப்புடன் இருந்து எதிர்காலத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்பட வழிகாட்டுவது பெற்றோர்களின் முதல் கடமையாகும். நல்ல உடை, உணவு, சேமிப்பு, சுகாதாரம் நட்புடன் கூடிய நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் அறிவுறுத்துதல் பெற்றோர்களின் அடுத்த கடமையாகும். தாங்கள் வசதியின்றி நடுத்தர வர்க்கத்தைச்