தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....
நண்பரே அன்பரே வாருங்கள் நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள் நாட்டிலே நடக்கிற செய்தியும் நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள் வீட்டிலே ஆதரவு முக்கியம் விடியலில் எழுவதும் அவசியம் பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள் பார்த்ததும் படிப்பது அவசியம் தமிழ்மணப் பட்டையை வைத்தீர் தணிந்ததா தாகமே இனிமேல் கருத்துக்கள் அதிகமாய் சொன்னால் கடையில் வாடிக்கைப் பலபேர் அடிக்கடி வலைக்கு வாங்க அனைவரின் படைப்பையும் படிங்க பொறுப்புள்ள கருத்தையே சொல்லி புகழ்பெறம் வரிசையில் நீங்க எழுத்திலே உமக்கு ஏற்றம் இருப்பதாய் அறிந்தே உரைத்தேன் இன்னுமும் சிறப்பாய் எழுதி இமயம் போற்ற வாழ்க