கடவுள் போலச் சொல்வார்கள்
உதவி செய்ய வருவோர்கள் உரிமையோடு செய்வார்கள் உணரும் துன்பம் யாவையுமே உடனே தீர்க்கத் துணிவார்கள் எண்ணம் முழுதும் உண்மையாய் என்றும் துணையாய் இருப்பார்கள் எதிலும் உரிமை சொல்லியே எளிதில் அன்பைப் பொழிவார்கள் ஊரும் பேரும் தெரியாமல் உற்ற நட்பு என்பார்கள் உள்ளம் முழுதும் தெய்வமாய் உணர்ந்துப் பழகி வருவார்கள் இன்றும் நட்பாய் ஒருசிலரே இப்படி மகிழ்ச்சி கொள்வார்கள் இதயம் நிறைந்து எப்போதும் இன்முகத்தோடு வாழ்வார்கள் கடமை என்றே எண்ணியே கருத்தாய் செய்து முடிப்பார்கள் கடந்து வந்து வெற்றியக் கடவுள் போலச் சொல்வார்கள் (கவியாழி)