அருகிலே இருந்தும் அறிவில்லாக் கூட்டாளி
அப்பன் பங்காளி அவனுமே எதிராளி அருகிலே இருந்தும் அறிவில்லாக்கூட்டாளி சுப்பன் வந்து சண்டை போட்டால் சுருக்கெனக்கோபமாய்ச்சொந்தமென வருமாம் ! வசிக்கும் இடத்திலே வறப்புச்சண்டையிட்டு வருவோர் போவோரிடம் வசையான சொன்னாலும் கசக்கும் வார்த்தையால் கண்டபடி திட்டினாலும் பசிக்கும் நேரத்திலே பங்கிட்டு உண்பாராம் ஆடுகளும் மாடுகளும் அருகே சென்றாலே அதையும் விரட்டி அங்கிருந்து துரத்தி ஓடிச் சென்று ஓடோடி விரட்டிடுவான் ஓய்ந்த நேரம் உட்கார்ந்து பேசிடுவான் உழவுக்கு ஏர்பிடித்து உரிமையுடன் சென்றாலும் ஊருக்கு தெரிவதுபோல் உறக்கப் பேசிடுவான் இழவுக்குச் சென்றாலும் இணைந்தே போனாலும் இருப்பிடமே வந்தவுடன் இணைபிரிய மாட்டானாம் கிணற்றிலே நீரைக்காலமாய்ப் பங்கிட்டுக் கீழ்வயலில் பாத்தியிட்டுக் கீரைகளை விதைத்து பணத்திலே சரியாய்ப்பங்கும் தருவானாம் பங்காளி என்றழைத்துப் பாசமுடன் இருப்பானாம் உழைப்பவன் மட்டுமே உடனடி சச்சரவை ஊராரும் மெச்சும்படி உடன் பங்காளியென உரிமையுடன் சண்டையிட்டு உடனே கூடுவான் உலகமே வியக்கும்படி உரிமை கொண்டாடிடுவான் ! ( கவியாழி )