சொல்வீரே... நல்லோரே...
 இல்லா நிலையில் உள்ளோர்க்கு-இயைந்து  இருப்பதைக் கொடுக்கச் சொல்வீரே   பொல்லா வார்த்தையைச் சொல்லாமல் -புரிந்து  புகழை மட்டும் சொல்வீரே   நல்லோர் வாழ்த்த நாளும்- நகைந்தே  நட்புடன் வாழச் சொல்வீரே   எல்லா நாட்களும் நல்லதென்றே -உணர்ந்து  எதையும் மகிழ்ந்தே சொல்வீரே   தினமும் நல்ல வார்த்தைகளைத் -தொடர்ந்து  தெரிந்தே வாழ்த்தச் சொல்வீரே    (கவியாழி)    
