உணர்ந்தவர் பிரிந்தால் துயரமே
உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா உலகினில் மீண்டும் திரும்புமா பழகிய நாட்களும் மறக்குமா பாசமும் நேசமும் கிடைக்குமா அழகிய நாட்களை மறந்திட அன்பை மீண்டும் கொடுத்திட பழகியே நேசத்தை காட்டிட படைத்தவர் உயிரை மீட்டிட தினமும் மகிழ்ச்சியே தந்திட்ட திங்களும் வணங்கிட செய்திட்ட மனிதருள் தெய்வமாய் திகழ்ந்திட்ட மகனாய் என்னை படைத்திட்ட உறவை மறந்து பிரிந்த உண்மையில் அன்பைப் பகிர்ந்த உணர்ச்சியில் நான் வருந்த உடையோரை எங்கே மறைந்தீர் தினம் தோறும் வேண்டுகின்றேன் திங்கள் தோறும் அழைக்கின்றேன் விரும்பாது சென்ற பிதாக்களே வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன் ---கவியாழி---