திரு.சிங்கநெஞ்சம் சம்பந்தம் அவர்களுடன் சந்திப்பு

இன்று 03.02.2019 ஞாயிறு காலை 11 மணி அளவில் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் அடையார் பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றேன். அவரும் அவரது துணைவியாரும் முகமலர வரவேற்றார்கள்.கடற்கரை அருகில் இருந்ததால் நகரின் சத்தமின்றி அமைதியான வசிப்பிடத்தில் கணவன் மனைவி இருவரும் சிறிதுநேரம் அறிமுகம் செய்துகொண்டு இருவரின் பிறப்பிடம் ,படிப்பு,வாழ்விடம் குடும்பம் பற்றிய செய்தி பரிமாற்றங்களுடன் நான் அய்யா அவர்களை சந்திக்கும் நோக்கம் பற்றி எடுத்துரைத்தேன் அவரும் முகமலர்ந்து அவரது அனுபவத்தைக் கூறினார்.இந்திய அரசுபணியில் இருந்ததால் தான் பல ஊர்களுக்கு மாறிமாறி வந்ததாகவும் சென்னையிலேயே கடற்கரை அருகில் தனது வசிப்பிடத்தை விரும்பி அமைதுக்க் கொண்டதாகவும் கூறினார்கள். மேலும் அவர் தம் பணிசெய்த நாட்களில் நடந்த அனுபவங்களைப் பற்றியும் கடந்துவந்த நாட்களையும...