அவளுக்கு அப்படியொரு ஆசை
......... அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது . அதிகாலை வேளையில் கடற்கரை அருகில் அமைதியான சூழலில் காலாற நடக்க வேண்டுமென்று... அப்போது அவன் கேட்டான் ,ஆமா என்னஇங்கு எதுக்கு அடிக்கடி வரீங்க? அதையேன் இப்போ கேட்கிறீங்க? அவள் சொன்னாள் . உடனே சுதாரித்தவளாய் அங்கே பாருங்க மீன்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாய் துள்ளி விளையாடுகிறது அந்த அதிகாலையிலும் நிலவும் சந்தோசமாய் வெளிச்சத்தை கடலில் வீச இனிமையான கடல் காற்றும் மட்டுமே அவளுக்கு சந்தோசமாய் இருந்தது.அவளுக்கு அப்படியொரு ஆசை நான் கேட்டேனே பதில் சொல்லவில்லையே? உங்க பேரு என்ன எந்த ஊரு? சற்றே நிதானமாய் அவனை உற்று நோக்கினாள் ஏன்? இல்ல தெரிஞ்சுக்கலாமே என்றுதான்,தினமும் அந்த முதியோர் இல்லம் வரீங்க அங்குள்ளவங்களிடம் ஆதரவா பேசுறீங்க அதனால் அதனால் ? நா...