நான் பார்த்த ஏற்காடு
எனது முதல் ஏற்காடு பயணம் நான் ஏற்காடு முதலில் சென்றது )சைக்கிளில் (மிதிவண்டி)அதாவது ஒரு ரூபாய் கொடுத்து பேருந்திலோ அல்லது சுமையுந்திலோ மேலே வைத்துவிட்டு மலையில் உள்ள ஏரிக்கு அருகில் இறங்கி அங்கு ஊர் சுற்றிவிட்டு பின்னர் மிதிவண்டியி லேயே இறங்கி வரவேண்டும் என எனது அண்ணன் சித்தப்பா மகன் சந்திரசேகர் கூறினார். ஏறக்குறைய இருபத்து மூன்று கிலோமீட்டர் மலைப்பாதையில் உன்னால் தைரியமாய் வர முடியுமா என்றார் அப்போது வயது பதினேழு இருக்கும் எனக்கு மனதில் பயம் இருந்தாலும் உடனே சரி போகலாம் என்று சொல்லி சனிக்கிழமை விடுமுறை என்பதால் அன்றே செல்லத் தீர்மானித்தோம் .நான் படிக்கும்போதே எனது படிப்புச் செலவுக்காக எனது தாய் தந்தையரை துன்புறுத்தாமல் நானே சுயமாக சம்பாத்தித்து வந்தேன் அதனால் என்னிடம் எப்போதும் சேமிப்பு வைத்திருப்பேன் அதிலிருந்து இருபது ரூபாய் செலவு செய்வது என தீர்மானித்து விரும்பியபடியே சென்றேன். பேருந்தில் இரண்டு ரூபாய் பயணக் கட்டணம் ஒருரூபாய் மிதிவண்டிக்கு ஒரு ரூபாய் என(2+1=3) மூன்று ரூபாய் இருவருக்கும் ஆறு ரூபாய் செலவு செய்து காலை 8.00 மணிக்குப் புறப்பட்டு ஒருமணி ந