விதியின் வேதனையும் விலகிடு.....கட்டுரை
தமிழ்நாடு 24.03.2020 க்குமுன் அதற்குப்பின் இன்றுவரை கடந்தகலங்களில் கண்ணீர் சிந்தாத மனிதனே இல்லை.மதத்தை கடந்து மனிதம் தேடி அலைய வேண்டிய அவலநிலையை கடந்து யாரும் சென்றிருக்க வாய்ப்பே இல்லை.கையில் காசில்லை கடனாக கொடுப்பவர் இல்லை.உழைத்த உழைப்புக்கே உறுதியான வேலையில்லை. ஆலைகள் ,அலுவலகங்கள் ,பள்ளிகள்,கல்லூரிகள் பேருந்துகள் ,கடைகள்,காட்சியாகங்கள்,மண்டபங்கள் மணவிழாக்கள்,கட்சிக்கு கூட்டங்கள்,கடைத்தெருக்கள் என எல்லாமே மூடிக்கிடக்க உழைக்கத்திறனிருந்தும் ஓய்வெடுக்க நிர்பந்தித்து வீட்டில் முடக்கி விதி விளையாடியது. அலுவலகம் செல்வோர் முதல் அன்றாடம் உழைப்பவர் வரை சொல்ல முடியாத சோகங்களை கடக்கவேண்டிய நிலையில் வேண்டா வெறுப்பாக தள்ளிவிடப்பட்டனர்.மூன்று வேலைச்சோறு ,முழுநாள் ஓய்வு நேரத்தில் தூங்கி வழிந்ததும் சில நேரங்களில் துயரத்தை எண்ணி வருத்தியவர் பலர். அனைத்து மத ஆலயங்களும் மூடின.ஆண்டவனுக்கு ஓய்வு கொடுத்தனர்.அத்தனையும் பார்த்துக்க கொண்டு அவர்களும் அமைதியாயினர். ஏழையும் வறுமையில் எப்போதும் வேண்டிக்கொள்ளும் இறைவனுக்கு ஏற்பட்ட நிலையெண்ணி எல்லோரும் வருந்தினர்.எதுவும் செய்ய முடியாத நிலைய...