தெய்வங்கள்

தெய்வங்கள்

பாக்கெட் மணி கொடு

கல்லூரிக்கு போகணும் காசு கொடு
கைசெலவுக்கு வேணும்  காசு கொடு
பேப்பர் வாங்க பேனா வாங்க-நண்பனோடு
ஆட்டோ பேருந்தில் செல்ல காசுகொடு

புதுப்படம் பார்க்கனும் பிறந்த நாளுக்கு
படிக்கும் நண்பனுக்கு பார்ட்டி கொடுக்கணும்
பெட்ரோல் போடணும் பழுது பார்க்கனும்-காசுகொடு
 பஞ்சர் ஓட்டனும் பார்கிங் செய்ய

பரீட்சை கட்டணம் பதிவு கட்டணம்
கேண்டீன் போகணும் பிச்சா திங்கணும்
படத்துக்கு போகணும் பந்தா காட்டனும்-சேமிப்பு
கணக்கில் போடணும் காசு கொடு

ஆணும பெண்ணும் அழகை ரசிக்க
நானும் போடணும் நல்லதாய் தெரியணும்
சென்ட் வாங்கணும் சிறப்பாய் இருக்கணும்-செலவுக்கு
நாளும் காசுகொடு அப்பா காசுகொடு

Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more