தெய்வங்கள்

தெய்வங்கள்

தமிழை மணந்து தழுவி மகிழ்கின்றேன்

தடம்கேட்டும் தவிக்கின்ற இந்நாளில்
தானாக முன்வந்து வழி சொல்லும்
புடம்போட்ட நண்பர்களாய் புறப்பட்டு-என்
இடம்தேடி  வாழ்த்தும் நண்பர்களே

தென்றலாய் வந்து தீண்டியவரும்
தினமும் என்னை நாடிவரும்
அன்றலர்ந்த பூவைப்போல சூடி-நாளும்
அன்பாக நட்பு சொல்லும் அன்பர்களே

விதையாக தொடரும் எனது கவிதைகள்
விரைவில் முளைக்க துணைபுரிந்து
விளையாடும் இலக்கிய மேடைதனில்-நானும்
விரைவாக விழுந்து எழ விரும்புகிறேன்

துணையாக இருந்து வழி சொல்லி
தினமும் என் கவியை படித்து
தெரிகின்ற தவறை  தினம் சொன்னால் -நான்
திகட்டாமல் ஏற்பேன் திருத்திக் கொள்வேன்

தமிழோடு விளையாடி தனியாக உறவாடி
துளியாக மனதில் துளிர்கின்ற சிந்தனையை
தரணியோரும் படித்து வாழ்த்த-தமிழனாய்
பிறந்ததே பேரின்பம் ஆனந்தம் உற்சாகம்

வளமாக வேண்டும் வரைகின்ற கவிதை
வாழ்நாளில் தோன்றும் நிறைவான  நினைவே
தளமாக எண்ணி தாங்கி கொண்டே-உயிராக
தமிழை மணந்து தழுவி மகிழ்கின்றேன்

Comments

 1. Replies
  1. நன்றி முனைவர் ,உங்களது அருமை என்ற கருத்து எனக்கு ஊக்கமாகிறது

   Delete
 2. விதையாக தொடரும் எனது கவிதைகள்
  விரைவில் முளைக்க துணைபுரிந்து
  விளையாடும் இலக்கிய மேடைதனில்-நானும்
  விரைவாக விழுந்து எழ விரும்புகிறேன்

  விதை விரைவில் முளைத்து வரும். தொடருங்கள்.

  ReplyDelete

 3. // தடம்கேட்டும் தவிக்கின்ற இந்நாளில்
  தானாக முன்வந்து வழி சொல்லும்
  புடம்போட்ட நண்பர்களாய் புறப்பட்டு-என்
  இடம்தேடி வாழ்த்தும் நண்பர்களே//

  கலக்கல் கவிதை அருமை!

  ReplyDelete
 4. ஐயாவின் ஆசி கிடைத்தமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 5. தமிழோடு விளையாடி தனியாக உறவாடி
  துளியாக மனதில் துளிர்கின்ற சிந்தனையை
  தரணியோரும் படித்து வாழ்த்த-தமிழனாய்
  பிறந்ததே பேரின்பம் ஆனந்தம் உற்சாகம்“

  அருமை அருமை...
  தமிழ் நம்மை என்றும் உயர வைத்தே தானும் உயரும் ஐயா.

  ReplyDelete
 6. நம்மை ஒருங்கிணைக்கிறது உண்மை

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more