தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்ச்சியான தீப திருநாள்மகிழ்ச்சியான தீபாவளி -2012
---
மகிழ்ச்சியான நேரமிது மக்களின் நாளிது
புகழ்ச்சிக்காக பொருள் சேர்க்கும் நன்னாழிது
இகழ்ச்சியாக பேசியோரும் வாழ்த்தும்நாள்-எல்லோரும்
நெகிழ்ச்சியாக கொண்டாடி மகிழும் தீபத்திருநாள்

ஏழைப் பணக்காரன் என்றதொரு வித்தியாசம்
எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள்
எல்லோரும் ஏற்று இனிதாய் போற்றி-தீபாவளியை
எளியோரும் விரும்பும் இனிய பெருநாள்

எப்போது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க
இளசுகள் ஓடிவந்து பட்டாசு வெடிச்சிருக்க
குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைஞ்சிருக்க-சேவல்
கூப்பாடு கேட்காமல் எழுந்திருக்கும் ஒருநாள்

புத்தாடையில் புதுமஞ்சள் சாந்திட்டு உடுத்திட்டு
புதுநாளைக் கொண்டாட மாப்பிள்ளை அழைத்திட்டு
வித்தாரம் பேசாமல் வீடெங்கும் கூறாமல் சண்டை
விநியோகம் செய்யாத தீபாவளி திருநாள்

காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியேனும்
ஓசி வாங்காமல் உழைத்து வைத்திருந்து
புதுத்துணி வாங்கும் பொல்லாத தீபாவளி-இன்று
இளசுபெரிசு எல்லோரின் இனிமையான திருநாள்

கடந்த நாட்களில் பட்ட கஷ்டமெல்லாம்
காணாது மறந்து இஷ்டமாக விரும்பும்
எல்லோரும் விரும்பும் பொன்னான நாள்-இனிதாக
நல்லோரும் இல்லாரும் மகிழும் தீபாவளி
 


கவியாழி.கண்ணதாசன்,(kaviyazhi.blogspot.com)சென்னை +91 9600166699

Comments

 1. Replies
  1. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

   Delete
 2. தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

   Delete
 3. ம்ம்ம்... தீபாவளிக் கவிதை நன்று- உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

   Delete
 4. அழகிய கவிதை...


  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

   Delete
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணே,உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்


   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more