இனிமேல் மரங்கள் வளர்க்கணும்
வனமும் வனப்பையும் இழந்தால் வனத்தின் நிறமும் மாறுமாம் வானமும் இயல்பை மாற்றியே வானத்தின் தன்மையும் கூடுமாம் எல்லா இடமும் வெளிச்சமாய் எங்கும் வெய்யில் எரிக்குமாம் ஏரிக் குளமும் வற்றுமாம் எரிச்சல் அதிகம் இருக்குமாம் பொல்லா நிலையால் பலபேரோ பொசுங்கி மடிந்தே விழுவாராம் பொழுதும் கழிந்தால் மட்டுமே பொறுத்தே வெளியில் வருவாராம் இந்த நிலைக்குக் காரணம் இழந்த மரங்கள் அதிகமாம் இதையே நாமும் அறிந்தேனும் இனிமேல் மரங்கள் வளர்க்கணும் மழையும் நன்றாய் பெய்யுமாம் மரங்கள் அடர்ந்து வளருமாம் மக்கள் துயரம் நீங்கியே மக்கள் மனமும் குளிருமாம் வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய் வருடம் முழுக்க பெய்யுமாம் வாழ்வில் இதையே மகிழ்ச்சியாய் வானத்தைப் பெருக்கிக் காக்கணும் =====கவியாழி=====