இனிமேல் மரங்கள் வளர்க்கணும்
வனமும் வனப்பையும் இழந்தால்
வனத்தின் நிறமும் மாறுமாம்
வானமும் இயல்பை மாற்றியே
வானத்தின் தன்மையும் கூடுமாம்
எல்லா இடமும் வெளிச்சமாய்
எங்கும் வெய்யில் எரிக்குமாம்
ஏரிக் குளமும் வற்றுமாம்
எரிச்சல் அதிகம் இருக்குமாம்
பொல்லா நிலையால் பலபேரோ
பொசுங்கி மடிந்தே விழுவாராம்
பொழுதும் கழிந்தால் மட்டுமே
பொறுத்தே வெளியில் வருவாராம்
இந்த நிலைக்குக் காரணம்
இழந்த மரங்கள் அதிகமாம்
இதையே நாமும் அறிந்தேனும்
இனிமேல் மரங்கள் வளர்க்கணும்
மழையும் நன்றாய் பெய்யுமாம்
மரங்கள் அடர்ந்து வளருமாம்
மக்கள் துயரம் நீங்கியே
மக்கள் மனமும் குளிருமாம்
வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய்
வருடம் முழுக்க பெய்யுமாம்
வாழ்வில் இதையே மகிழ்ச்சியாய்
வானத்தைப் பெருக்கிக் காக்கணும்
=====கவியாழி=====
வனத்தின் நிறமும் மாறுமாம்
வானமும் இயல்பை மாற்றியே
வானத்தின் தன்மையும் கூடுமாம்
எல்லா இடமும் வெளிச்சமாய்
எங்கும் வெய்யில் எரிக்குமாம்
ஏரிக் குளமும் வற்றுமாம்
எரிச்சல் அதிகம் இருக்குமாம்
பொல்லா நிலையால் பலபேரோ
பொசுங்கி மடிந்தே விழுவாராம்
பொழுதும் கழிந்தால் மட்டுமே
பொறுத்தே வெளியில் வருவாராம்
இந்த நிலைக்குக் காரணம்
இழந்த மரங்கள் அதிகமாம்
இதையே நாமும் அறிந்தேனும்
இனிமேல் மரங்கள் வளர்க்கணும்
மழையும் நன்றாய் பெய்யுமாம்
மரங்கள் அடர்ந்து வளருமாம்
மக்கள் துயரம் நீங்கியே
மக்கள் மனமும் குளிருமாம்
வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய்
வருடம் முழுக்க பெய்யுமாம்
வாழ்வில் இதையே மகிழ்ச்சியாய்
வானத்தைப் பெருக்கிக் காக்கணும்
=====கவியாழி=====
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்னு முன்பு பஸ்ஸில் எழுதி வைத்திருந்தார்கள்....
ReplyDeleteநம்மாளுங்க இருந்ததையும் வெட்டி சாச்சிட்டானுங்க.
இனிமேலும் வளர்க்க வேண்டியே வற்புறுத்துவோம்
Deleteஇந்த பூமியை அழிவிலிருந்து காக்க ஆயுதங்களை அல்ல மரங்களையே அதிகப்படுத்த வேண்டும் என்ற நிலையை மனிதன் உணர்ந்தால் தான் இதற்கு விடிவு...
ReplyDeleteமரம் வளர்ப்போம்....
நல்லதொரு கவிதை
ஆம்.மரங்களை அதிகப்படுத்த வேண்டும்
Deleteஅனைவரும் உணர வேண்டியது ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமழையும் நன்றாய் பெய்யுமாம்
ReplyDeleteமரங்கள் அடர்ந்து வளருமாம்
மக்கள் துயரம் நீங்கியே
மக்கள் மனமும் குளிருமாம்
குளிர்ச்சியான பகிவுகள்..!
மரங்கள் வளர்த்தால் மகிழ்ச்சியாயும் இருக்கும்
Deleteஇனியேனும் விழிப்போம்...
ReplyDeleteஇனிதாய் ஒரு மரமேனும் வளர்ப்போம்...
ஆம். நண்பரே இன்னும் விழிப்புணர்வு வேண்டும்
Deleteதேவையான கருத்துடன் கூடிய கவிதை வாழ்க வளமுடன்!
ReplyDeleteநன்றிங்க ஆனந்த்
Deleteநல்லதொரு விழிப்புணர்வு கவிதை!
ReplyDeleteஆமாங்க அக்கா
Delete''..இந்த நிலைக்குக் காரணம்
ReplyDeleteஇழந்த மரங்கள் அதிகமாம்
இதையே நாமும் அறிந்தேனும்
இனிமேல் மரங்கள் வளர்க்கணும்...''
ஆம்.... வளர்ப்போம்...!
Vetha.Elangathilakam.
மரம் வளர்ப்போம் என்ற கவிஞரின் குரலுக்கு அனைவரும் செவி சாய்ப்போம்.
ReplyDeleteவானத்தைப் பெருக்கிக் காக்கணும்// உண்மை..
ReplyDeleteவனத்தையும் காக்கணும்
Deleteஇன்றைய நிலையில்
ReplyDeleteதேவையான கருத்து
சொல்லிப்போனவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்
//
ReplyDeleteஇந்த நிலைக்குக் காரணம்
இழந்த மரங்கள் அதிகமாம்
இதையே நாமும் அறிந்தேனும்
இனிமேல் மரங்கள் வளர்க்கணும்//
ரசித்த வரிகள்!
வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய்
ReplyDeleteவருடம் முழுக்க பெய்யுமாம்
வாழ்வில் இதையே மகிழ்ச்சியாய்
வானத்தைப் பெருக்கிக் காக்கணும்//
அருமையான வரிகள்.
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்.
நல்ல விழிப்புணர்வு கவிதை.
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteவனம் பெருகினால் வானம் பொழியும்! அருமையான கவிதை! நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteநல்லதொரு சிந்தனை அய்யா. வனங்கள் பெருக்கினால் வானம் பொழியும் என்ற கருத்தை கவிதையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகவிதை சொல்லும் கரு... மரம் வளர்ப்போம்...
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா....
வருகைக்கு நன்றி
Deleteஅருமை ஐயா.
ReplyDeleteமரம் இருக்கும் வரைதான்
மனிதன் இருப்பான்
இந்த உண்மையை மறந்து விட்டோம்
இனியேனும் விழித்துக் கொள்வோம்
Deleteமரம வளர்க்க சொல்லும் கவிதை அருமை
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteநல்ல கருத்து. மணல் சுரண்டி ஆற்றைக் கற்பழிப்பவர்கள் பற்றி ஒரு கவிதை ப்ளீஸ்...
ReplyDeleteவருகைக்க நன்றி
Deleteநன்றிங்க சார்
ReplyDeleteபசுமை புரட்சி பஸ்ஸில்
ReplyDeleteஇலைகள் காயாமல் பஸ்ஸை இருமுறை கழுவி இலைகளுக்கு நீர் பாய்ச்சுவார்கள்
ஆடு மாடுகளும் பஸ்ஸை கண்டு ஓடி வரும் இலைகளைக் கண்டு