எனது நண்பன்
கண்ணாலே கதை சொல்லும் கயவன் கண்டவுடன் வாலாட்டும் துணைவன் பண்போடு உடன் நடக்கும் இளைஞன்-வெளியோரை பார்த்ததுமே கத்துகின்ற மடையன் வேண்டுமென்றால் அருகில் வந்து வேடிக்கையாய் விளையாடிச் செல்வான் வேதனையில் நானிருந்தால் அருகில் -அமர்ந்து விழிதிறந்து என்னவென்று கேட்பான் கத்தாதேஎன்றாலும் நிறுத்தாமல் குறைப்பான் காக்காகுருவிடனும் விளையாடத் துடிப்பான் கன்னியரின் கன்னத்திலே முத்தமிட நினைத்தால் கண்ணிமைக்கும் நேரத்திலே முத்தமிட்டுச் செல்வான் மகிழுந்தில் செல்லவேண்டி அழுவான் மறுத்ததுமே குரைத்துக் கேள்வி கேட்பான் திகிலூட்டிக் கண்ணை உருட்டிப் பார்பான் தின்ன மறுத்துக் காரில்ஓடி அமர்வான் அன்பாய் இருப்பான் அருகில் வருவான் பண்பாய் இருந்தும் பணிவாய் வாழ்ந்தும் துன்பம் சிலநாள் தொடர்ந்தே இருந்தும் நண்பன் இன்னும் சிலநாள் மட்டும் (கவியாழி)