கண் கண்ணாடியைக் காணவில்லை
கண்கண்ணாடியைக் காணவில்லை
கண்டு பிடிக்க முடியவில்லை
கண் அழற்சியானதால் எப்போதும்
கண்சிவந்து எரிச்சல் தாளவில்லை
இல்லத்தார் எல்லோரும் கண்டுபிடிக்க
இண்டு இடுக்கு இடமெல்லாம்
இரண்டு நாளாய்த் தேடுகிறோம்
இயலவில்லை இருக்குமிடம் தெரியவில்லை
நாவறண்டு கத்தினாலும் முடியாது
நாநயமாய் பேசினாலும் வந்திடாது
நான்வைத்த இடத்தைக் காணாமல்
நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது
மூன்று வயது நினைவுகூட
முந்தி கொண்டு வருகிறது
மூக்கில் மாட்டும் கண்ணாடியின்
மூடிப்போன இடம் தடயமில்லை
பேயறைந்த முகத்தைப் பார்த்து
பேரன் பேத்தி சிரிக்கிறார்கள்
பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து
பேருதவி மனைவியும் செய்கிறார்கள்
வீட்டுக்கு வந்தவரின் கதையை
விருப்பமின்றிச் சொன்னபோது நானும்
விட்டுவிட்ட பொருள் கணக்கை
விபரமாகச் சொல்ல முடியவில்லை
கண்டு பிடிக்க முடியவில்லை
கண் அழற்சியானதால் எப்போதும்
கண்சிவந்து எரிச்சல் தாளவில்லை
இல்லத்தார் எல்லோரும் கண்டுபிடிக்க
இண்டு இடுக்கு இடமெல்லாம்
இரண்டு நாளாய்த் தேடுகிறோம்
இயலவில்லை இருக்குமிடம் தெரியவில்லை
நாவறண்டு கத்தினாலும் முடியாது
நாநயமாய் பேசினாலும் வந்திடாது
நான்வைத்த இடத்தைக் காணாமல்
நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது
மூன்று வயது நினைவுகூட
முந்தி கொண்டு வருகிறது
மூக்கில் மாட்டும் கண்ணாடியின்
மூடிப்போன இடம் தடயமில்லை
பேயறைந்த முகத்தைப் பார்த்து
பேரன் பேத்தி சிரிக்கிறார்கள்
பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து
பேருதவி மனைவியும் செய்கிறார்கள்
வீட்டுக்கு வந்தவரின் கதையை
விருப்பமின்றிச் சொன்னபோது நானும்
விட்டுவிட்ட பொருள் கணக்கை
விபரமாகச் சொல்ல முடியவில்லை
எப்போது தான் கிடைத்தது...?
ReplyDeleteஉங்களைப் போன்ற கண்ணாடியைத் தொலைத்தவரிடம் கேட்டுச் சொல்கிறேன்
Deleteபல சமயங்களில் கண்ணாடியை கை தவறி வைத்து விட்டு தேடுபவர்கள் பலர்....
ReplyDeleteநல்ல கவிதை. பாராட்டுகள்.
எல்லாஞாபகமறதிம் வாலிபமில்லா வயசுக் கோளாறுதான் அதாங்க
Deleteஎப்பொழுதுமே இரண்டு கண்ணாடி வைத்துக்கொள்வது நன்று.
ReplyDeleteமற்றொன்று எப்பொழுதுமேகண்ணாடியை செல் போனுடன் சேர்த்து வைப்பது.நமது செல் போனுக்கு நமது வீட்டில் உள்ள மற்றவரை போன் செய்யச்சொல்லி கண்டு பிடிக்கலாம் .
அவர் இரண்டு வருடம் முன்பு வாங்கிய கண்ணாடியை வைத்து புதிதாய் வாங்கியைதைத் தேடிக் கொண்டிருக்கிறார்
Deleteவீட்டுக்கு வந்தவரின் கதையை
ReplyDeleteவிருப்பமின்றி சொன்னபோது நானும்
விட்டுவிட்ட பொருள் கணக்கை
விபரமாகச் சொல்ல முடியவில்லை
அருமையான வரிகள்
என்ன செய்வது எல்லோருக்கும்போல குற்ற உணர்ச்சிதான்
Deleteகிடைத்ததா கண்ணாடி?
ReplyDeleteஹுஹும். தேடிக்கொண்டே இருக்கிறார்
Deleteகண்ணாடி மாட்டிக்கிட்டு நல்லா தேடித் பாருங்க ..தேடுவது எதுவுமே கிடைக்காமல் போகாது !
ReplyDeleteநீங்களும் வாங்க உதவி செய்யுங்க
Deleteகண்ணாடி மாட்டிக்கிட்டு நல்லா தேடித் பாருங்க ..தேடுவது எதுவுமே கிடைக்காமல் போகாது !
ReplyDeleteநீங்களும் வாங்க உதவி செய்யுங்க
Deleteநானும் இதுப்போல தேடுவதுண்டு என் பையனையும் பொண்ணையும் தேடி தர சொல்லி இம்சிப்பேன்.
ReplyDeleteஎல்லாமே வயசுக் கோளாறுதானா? தெரியவில்லை
Delete// வீட்டுக்கு வந்தவரின் கதையை
ReplyDeleteவிருப்பமின்றி சொன்னபோது நானும்
விட்டுவிட்ட பொருள் கணக்கை
விபரமாகச் சொல்ல முடியவில்லை //
நெகிழ்ச்சியான வரிகள்...
கண்ணாடித் தொலைந்தது பிரச்சனையாகி கணவன் மனைவிக்குமே வேறுபாடு சண்டைவேறு
Deleteகவியாழியாரே! நீங்கள் செய்வது நியாயமா? கண்ணாடியைத் தொலைத்தவன் நான்; கவி எழுதிப் பேர் வாங்குவது நீங்களா? அடுக்குமா அய்யா? – கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.
ReplyDeleteஉங்க கண்ணாடி கிடைத்தப்பின் வாபஸ் வாங்கிகிறேன்
Deleteவாழ்க்கைப்பதிவுகள்....
ReplyDelete//மூன்று வயது நினைவுகூட
ReplyDeleteமுந்திக் கொண்டு வருகிறது
மூக்கில் மாட்டும் கண்ணாடியின்
மூடிப்போன இடம் தடயமில்லை//
ரசித்த வரிகள்!
உண்மைதான்
Deleteஞாபக மறதி எனக்கும் உண்டு.. நல்ல பகிர்வு.
ReplyDeleteஅப்படியா நீங்களும் ராஜி அக்காவைப் போலவா?
Deleteகண்ணாடியை எங்காவது வைத்து விட்டு சமயத்தில் தேடுவோம்! கவிதையாய் தவிப்பை பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!
ReplyDeleteபகிர்வுக்கும் நன்றிங்க சுரேஷ்.
Delete//மூன்று வயது நினைவுகூட
ReplyDeleteமுந்திக் கொண்டு வருகிறது
மூக்கில் மாட்டும் கண்ணாடியின்
மூடிப்போன இடம் தடயமில்லை
//- ரசித்த வரிகள். ஞாபக மறதி அனைவர்க்கும் பொதுவான ஒன்று.. காரணம் அவசரம்தான் என்று நினைக்கிறேன்.
மாணவர்களுக்கே இப்போது மறதிநோய் அதிகமாகிவிட்டதே
Deleteஎல்லா கண்ணாடிக்காரர்களுக்கும் உரிய
ReplyDeleteபிரச்சனைதான். ஆனால் எல்லோராலும்
இப்படி இதனைப்போல் படைப்பாக்கிவிடமுடியுமா என்ன ?
உங்களைப் போன்ற நண்பரின் உள்ளக் குமுறலே கவிதையாகியது
Deletetha.ma 10
ReplyDeleteஉங்கள் கவிதைகளின் தரம் கூடிக் கொண்டிருக்கிறது. இந்தவாரம் தமிழ்மண முதல் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteபேயறைந்த முகத்தைப் பார்த்து
ReplyDeleteபேரன் பேத்திச் சிரிக்கிறார்கள்
பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து
பேருதவி மனைவியும் செய்கிறார்கள்
இரண்டு கண்ணாடிகள் தேவை..
பார்ப்பதற்கும் ,படிப்பதற்கும் ஒன்று...
மர்றொன்று கண்ணாடியை தேடுவதற்கு...!
ஆம்.உண்மைதானுங்கம்மா
Delete//நாவறண்டு கத்தினாலும் முடியாது
ReplyDeleteநாநயமாய் பேசினாலும் வந்திடாது
நான்வைத்த இடத்தைக் காணாமல்
நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது//
அசாத்தியமான அற்புதமான வரிகள்
தம்பி நீங்க சொன்னா சரிதான்
Delete//மூன்று வயது நினைவுகூட
ReplyDeleteமுந்திக் கொண்டு வருகிறது
மூக்கில் மாட்டும் கண்ணாடியின்
மூடிப்போன இடம் தடயமில்லை//
கலக்குறீங்க சார்...
அப்படிங்களா ? நன்றிங்க தம்பி
Deleteவாழ்க்கையின் நடப்புகளை படைப்புகளாகத் தருபவரே உண்மையான படைப்பாளி. அந்த வகையில் சும்மா பூந்து விளையாடுறீங்க அய்யா. தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும் (அடுத்தவர் தொலைத்தா இருக்கத் தானே செய்யும்) வரிகள் ஞாபகம் வருகின்றன. பகிர்வுக்கு நன்றி அய்யா..
ReplyDeleteஅவர்களேஅப்படிங்களா நண்பர் பாண்டியன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteதங்களுக்கும் நன்றி
ReplyDelete