வெட்கமாய் இருக்குது விளக்கணைங்க....
 வெட்கமாய் இருக்குது விளக்கணைங்க   விடிந்ததும் சொல்லுறேன் தூங்கிடுங்க   சுத்தமாய் எனக்கு விருப்பமில்லை   சொல்வதைக் கேட்டு உறங்கிடுங்க     மிச்சமாய் எதுவும் தரவேண்டாம்   மேனியில் கையும் படவேண்டாம்   அச்சமாய் இருக்க வழியில்லையே    அவங்களும் நமக்குத் துணையில்லையே     கூச்சமாய் எனக்கு இருக்குதுங்க   குறுகுறுன்னு எதுவோ ஓடுதுங்க   பேச்சினால் என்னை மடக்காதீர்   பிள்ளைக்குத் தெரிஞ்சா தவறில்லையா     மச்சினி இன்னும் ரகசியமாய்   மருமகள் இருந்தும் தெரிந்தவளாய்   துச்சமாய் எண்ணியே அவங்களெல்லாம்   தினமும் அடிக்கடி நடக்கிறதாம்     உங்களைப் பத்தித் தெரிந்துதானே   உடம்புல வலியும் மறந்துநானே   உள்ளுக்குள்ளே பயமாய் இருப்பதாலே   உடனே தள்ளிப் போயிடுங்க     சத்தியம் சொல்லி செய்யுறேண்டி   சங்கதி எதுவும் செய்யுலடி   மிச்சமும் தடவி அமுக்கிடுறேன்   முன்னம்போல் உடம்பும் இருக்குமடி     இப்பவே கழுத்து பரவாயில்ல   இடுப்புல வலியும் அதிகமில்ல   சுத்தமா முதுகுல வலியில்ல   சத்தியம் இன்னைக்குக் காத்திட்டிட்டீங்க       -----கவியாழி-----     (வயதாகி விட்டால் இப்படித்தான் நிலைமை இருக்குமோ?)   
