தெய்வங்கள்

தெய்வங்கள்

வெட்கமாய் இருக்குது விளக்கணைங்க....

வெட்கமாய் இருக்குது விளக்கணைங்க
விடிந்ததும் சொல்லுறேன் தூங்கிடுங்க
சுத்தமாய் எனக்கு விருப்பமில்லை
சொல்வதைக் கேட்டு உறங்கிடுங்க

மிச்சமாய் எதுவும் தரவேண்டாம்
மேனியில் கையும் படவேண்டாம்
அச்சமாய் இருக்க வழியில்லையே 
அவங்களும் நமக்குத் துணையில்லையே

கூச்சமாய் எனக்கு இருக்குதுங்க
குறுகுறுன்னு எதுவோ ஓடுதுங்க
பேச்சினால் என்னை மடக்காதீர்
பிள்ளைக்குத் தெரிஞ்சா தவறில்லையா

மச்சினி இன்னும் ரகசியமாய்
மருமகள் இருந்தும் தெரிந்தவளாய்
துச்சமாய் எண்ணியே அவங்களெல்லாம்
தினமும் அடிக்கடி நடக்கிறதாம்

உங்களைப் பத்தித் தெரிந்துதானே
உடம்புல வலியும் மறந்துநானே
உள்ளுக்குள்ளே பயமாய் இருப்பதாலே
உடனே தள்ளிப் போயிடுங்க

சத்தியம் சொல்லி செய்யுறேண்டி
சங்கதி எதுவும் செய்யுலடி
மிச்சமும் தடவி அமுக்கிடுறேன்
முன்னம்போல் உடம்பும் இருக்குமடி

இப்பவே கழுத்து பரவாயில்ல
இடுப்புல வலியும் அதிகமில்ல
சுத்தமா முதுகுல வலியில்ல
சத்தியம் இன்னைக்குக் காத்திட்டிட்டீங்க


-----கவியாழி-----

(வயதாகி விட்டால் இப்படித்தான் நிலைமை இருக்குமோ?)

Comments

  1. சரிதான்! வயதானாலும் உணர்வுகள் சாவதில்லை!

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் அதுவும் சரிதான்!

    ReplyDelete
  3. உங்கள் குடும்ப விளக்கமா? இல்லை பாரதிதாசனின் குடும்பவிளக்கு -முதியோர்காதல் இரண்டாம் பாகமா? யாரப்பா அங்க? யாராவது முதியவர் இருந்தா படிச்சு அர்த்தம் சொல்லச் சொல்லு (நமக்கு 58வயசு முடிஞ்சு 59தானுங்களே வருது?) ம்...? கவிதை நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  4. "வெட்கமாய் இருக்குது
    விளக்கணைங்க..." என
    வாழ்க்கைப் பக்கம்
    திரும்பிப் பார்க்க வைக்கிறியள்...
    "(வயதாகி விட்டால்
    இப்படித்தான் நிலைமை இருக்குமோ?)" என
    நினைவூட்டவும் செய்யிறியளே...

    ReplyDelete
  5. பதற வச்சு பக்குவமா சொல்லிட்டீங்க.. ஹஹஹா..

    ReplyDelete
  6. அம்பது வயசுக்கு மேல் வெக்கம் என்னையா வேண்டி கெடக்கு? மொதல்ல ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டு வாங்க.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா.
    வாழ்க்கை சரித்திரத்தை வரிக்கு வரி வரி சொல்லியுள்ளீர்கள்.....நன்றாக உள்ளது.

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  8. என்னடா கவிஞர் ஒரு மாதிரியா போறாரேன்னு நினச்சேன். அப்புறம்தானே புரிஞ்சது.
    ஒ.கே

    ReplyDelete
  9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்