கார்த்திகைக் குளிரில் காதல் .......
கார்த்திகைக் குளிரில் காதல் கண்ணனின் அருகில் மகிழ்வாய் காரிகைக் கூட்டமும் இணைந்தே காத்திடும் காரணம் ஏனோ பலரும் சூடாய் இருக்க பருவம் மாறிய மழையும் பாவையர் மனதும் இனிக்க பயனாய் இருப்பதும் தவறா பூத்திடும் பூக்கள் கூட பூவையர் தலையில் சூடி புரியும் லீலைகள் காண புகலிடம் தேடி வருமாம் பூச்சிகள் ஒன்றாய் கூடியே பூத்திட்ட மலர்களைக் கண்டு போட்டிகள் நடத்திட வேண்டி புதிதாய் ஸ்வரங்கள் தருமாம் பூத்த மலர்களைத் தேடி புறப்பட்ட வண்டினைப் போல புயலாய்க் கண்ணன் வந்தே புதுமை அனுபவம் தருவான் விலங்குகள் ஒன்றாய் அமர்ந்து வேடிக்கை பார்த்தே சிரித்தே வீதியில் ஆடி இன்பமாய் விரும்பியே மகிழ்வாய் இருக்கும் இரவில் இன்றி பகலிலும் இனிமை விரும்பும் இனங்கள் இமையால் பேசும் கண்ணன் இனிமை தருமே கார்த்திகை [[[[[[[[ கவியாழி]]]]]]]]