தெய்வங்கள்

தெய்வங்கள்

கார்த்திகைக் குளிரில் காதல் .......

கார்த்திகைக் குளிரில் காதல்
கண்ணனின் அருகில் மகிழ்வாய்
காரிகைக் கூட்டமும் இணைந்தே
காத்திடும் காரணம் ஏனோ

பலரும் சூடாய் இருக்க
பருவம் மாறிய மழையும்
பாவையர் மனதும் இனிக்க
பயனாய் இருப்பதும்  தவறா

பூத்திடும் பூக்கள் கூட
பூவையர் தலையில் சூடி
புரியும் லீலைகள் காண
புகலிடம் தேடி வருமாம்

பூச்சிகள் ஒன்றாய் கூடியே
பூத்திட்ட மலர்களைக் கண்டு
போட்டிகள் நடத்திட வேண்டி
புதிதாய் ஸ்வரங்கள் தருமாம்

பூத்த  மலர்களைத் தேடி
புறப்பட்ட வண்டினைப் போல
புயலாய்க் கண்ணன் வந்தே
புதுமை அனுபவம் தருவான்

விலங்குகள் ஒன்றாய் அமர்ந்து
வேடிக்கை பார்த்தே சிரித்தே
வீதியில் ஆடி இன்பமாய்
விரும்பியே மகிழ்வாய்  இருக்கும்

இரவில் இன்றி பகலிலும்
இனிமை விரும்பும் இனங்கள்
இமையால் பேசும் கண்ணன்
இனிமை தருமே கார்த்திகை

[[[[[[[[ கவியாழி]]]]]]]]



Comments

  1. வணக்கம்
    ஐயா

    கார்த்திகை மாதம் என்றால் சிறப்புத்தான் ஐயா... படைத்த கவிதை அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. என்ன சார் திடீர்னு. கார்த்திகைக் காதல் நல்லா இருக்கு

    ReplyDelete
  3. கவிதை அருமை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எதற்கு இந்த கார்த்திகை காதல் ஒத்திகை ?நடப்பவையாவும் நல்லவைக்கே !
    த.ம 3to4

    ReplyDelete
  5. கார்த்திகைக் குளிரில் காதல் -உடல்
    போர்திடப் போகுமே ஊதல்

    ReplyDelete
  6. கார்த்திகை மாதச் சிறப்பு -
    இனிய வாழ்த்து-
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  7. கார்த்திகை காதல் வாழ்க - அருமை....!

    ReplyDelete
  8. கார்த்திகையில் காணும் காட்சிகள்! - பொழுதோடு
    பார்த்திருக்கப் பிறக்கின்றதோ பாட்டு!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  9. கார்த்திகையின் சிறப்பை கவிதையில் வடித்தமை அழகு! நன்றி!

    ReplyDelete
  10. கார்த்திகை காதல் .நன்று.

    ReplyDelete
  11. எங்க வீட்ல கவிதை கருவி ஏதும் இருக்கா ..?
    நல்லா இருக்கு கவிதைகளும், உங்கள் தொடர் கவிதை போஸ்ட்களும்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more