என்னடா வாழ்க்கையிது.......
விலைவாசி குறையலை வருமானம் வழியில்லை பிள்ளைக்குட்டி பொம்பளைக்கும் பசியைப் போக்க முடியில விவசாயம் சரியில்லை வேறவேலை தெரியலை பொழைப்புக்கான வழியில்லை போறதெங்கே புரியலை பண்ணாட்டுக் கம்பனிகள் பயன்படுத்தும் மெசினுனால பகலிரவு உழைப்புக்கு பணிக்கு ஆளை எடுக்கலை அம்மாவும் கேட்கலை அப்பாவும் கொடுக்கலை அடுத்தமாச பீசுநானும் கட்டலை அதனாலே பள்ளிக்குமே போகலை பணம்காசு உள்ளவன் பதுக்கிப் பதுக்கி வைக்கிறான் பணியாளர் மட்டுமே -வரியை பயத்தோடக் கட்டுறான் லஞ்சக் காசுலே வாழுறான் லட்சங்களில் கேட்கிறான் வசதியாக வாழ்வதற்கு வழிப்பறியும் செய்யுறான் என்னடா வாழ்க்கையிது எத்தனைபேர் நாட்டிலே சொன்னதாய் பலநிகழ்ச்சி சோகமாய் உள்ளதடா (கவியாழி)