என்னடா வாழ்க்கையிது.......
விலைவாசி குறையலை
வருமானம் வழியில்லை
பிள்ளைக்குட்டி பொம்பளைக்கும்
பசியைப் போக்க முடியில
வேறவேலை தெரியலை
பொழைப்புக்கான வழியில்லை
போறதெங்கே புரியலை
பண்ணாட்டுக் கம்பனிகள்
பயன்படுத்தும் மெசினுனால
பகலிரவு உழைப்புக்கு
பணிக்கு ஆளை எடுக்கலை
அம்மாவும் கேட்கலை
அப்பாவும் கொடுக்கலை
அடுத்தமாச பீசுநானும் கட்டலை
அதனாலே பள்ளிக்குமே போகலை
பணம்காசு உள்ளவன்
பதுக்கிப் பதுக்கி வைக்கிறான்
பணியாளர் மட்டுமே -வரியை
பயத்தோடக் கட்டுறான்
லஞ்சக் காசுலே வாழுறான்
லட்சங்களில் கேட்கிறான்
வசதியாக வாழ்வதற்கு
வழிப்பறியும் செய்யுறான்
என்னடா வாழ்க்கையிது
எத்தனைபேர் நாட்டிலே
சொன்னதாய் பலநிகழ்ச்சி
சோகமாய் உள்ளதடா
(கவியாழி)
ம்... என்னங்கைய்யா செய்வது...?
ReplyDeleteஏதாவது சொல்லுங்களேன்
Deleteதிருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.......
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
மனிதனாக பிறந்தால் இதுதான் விதி என்று வாழ்வோம்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் த.ம 3
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நடுத்தர மக்களின் புலம்பலை கவிதையாக வடித்துவிட்டீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதற்கெல்லாம் ஓட்டுப்போட்டே ஏமாறும் நாம்தானே காரணம் ஐயா.
ReplyDeleteதமிழ் மணம் 4
என்ன செய்வது ஐயா
ReplyDeleteதம +1
என்னடா வாழ்கையிது என்று நொந்து நாளும் வெந்து போவது ஒன்றே,,,,,,,,
ReplyDeleteஎன்ன செய்வது? வாழ்ந்துதானே ஆகவேண்டியிருக்கிறது. உங்களுடைய ஆதங்கம் எங்களுக்கும் உண்டு.
ReplyDeleteஎப்படியோ, சில கவிஞர்கள் வாழ்ந்துதான் விடுகிறார்கள், தமிழ்மணத்தில் ஏழுக்குமேல் மதிப்பெண் வாங்கிவிடுகிறார்கள்!...எல்லாம் மச்சம்! ...
ReplyDeleteசிறந்த எண்ண வெளிப்பாடு
ReplyDeleteபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
இப்படிப்பட்ட உலகில் தான் கலாம் போன்றவர்களும் வாழ்ந்துள்ளார்கள்...நீங்கள் கூறுவது உண்மை.
ReplyDeleteவலைப்பதிவர் விழாக்குழு உங்களை அன்புடன் வரவேற்கிறது.நன்றி