இறைவனைக் காணவில்லையா?
இறைவனை இன்ப மாக்க இன்னிசைச் சத்தம் ஒலிக்கப் பறையடி மேளம் முழங்கப் பாட்டுப்பாடி ஆட்டமாடி வேட்டுச் சத்தம் கேட்டுமே வெளிச்சமாய் ஒளி வீச உடுக்கை அடித்துப் பாடி ஊரே ஒன்றாய் கூடி எல்லோரும் ஒன்று சேர்ந்து இறைவனுக்கு பொங்கல் வைத்து நல் விருந்துப் படைத்து நலமாக வாழ வேண்டி உள்ளவரும் இல்லாத ஏழையும் ஒன்றாக தேர் இழுத்து பல்லா ண்டாய் மகிழ்ந்தும் பரவசமாய் வேண்டி வந்தும் எல்லோரும் அன்பாய் அழைத்தும் யாருமே பார்க்க முடியாத பொல்லாத சக்தி அவன் பொய்யாக வாழ்கின் றானோ (கவியாழி)