தெய்வங்கள்

தெய்வங்கள்

இறைவனைக் காணவில்லையா?

இறைவனை இன்ப மாக்க
இன்னிசைச் சத்தம் ஒலிக்கப்
பறையடி மேளம் முழங்கப்
பாட்டுப்பாடி ஆட்டமாடி

வேட்டுச் சத்தம் கேட்டுமே
வெளிச்சமாய் ஒளி வீச
உடுக்கை அடித்துப் பாடி
ஊரே ஒன்றாய் கூடி

எல்லோரும் ஒன்று சேர்ந்து
இறைவனுக்கு பொங்கல் வைத்து
நல் விருந்துப் படைத்து
நலமாக வாழ வேண்டி

உள்ளவரும் இல்லாத ஏழையும்
ஒன்றாக தேர் இழுத்து
பல்லா ண்டாய் மகிழ்ந்தும்
பரவசமாய் வேண்டி வந்தும்

எல்லோரும் அன்பாய் அழைத்தும்
யாருமே பார்க்க முடியாத
பொல்லாத சக்தி அவன்
பொய்யாக வாழ்கின் றானோ


(கவியாழி)

Comments

  1. அதானே... நாம் தானே அப்படி வாழ வேண்டும்...?(!)

    ReplyDelete
  2. அதாவது, இறைவனைப் பொய் என்கிறீர்களா? நான் ஏற்க முடியாது. (த.மா.2 அல்லது 3).

    ReplyDelete
  3. இது என்ன புதுக்கதை நான் பார்த்திருக்கிறேனே நீங்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறன். பக்குவப்பட்டவர்களுக்கு மட்டும் தான் காட்சி தருவாராம். ஹா ஹா....(ஜோக்)
    ஆபத்து நேரங்களில் எல்லாம் யார் நம்முன் தோன்றி உதவுகிறார்களோ அவர்கள் தான் கடவுள். அவர் நேரில் ஒரு போதும் வருவதில்லை மனித வடிவில் வழிபோக்கனாகவும், நண்பனாகவும் கூட வரலாம்.அப்படி மட்டும் தான் வருவான். எனவே நம்பிக்கையோடு வழிபடுங்கள்

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.

    எல்லோரையும் நல்வழிப்படுத்தும் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. கவிதை வரிகள் அருமை!

    //எல்லோரும் அன்பாய் அழைத்தும்
    யாருமே பார்க்க முடியாத
    பொல்லாத சக்தி அவன்
    பொய்யாக வாழ்கின் றானோ//

    கவியாழி அவர்களே! இறைவன் பொல்லாத சக்தியுமல்ல! பொய்யாக வாழ்பவனும் அல்லன்! நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு சக்தி வடிவில் நாம் இறைவனை நம் வாழ்வில் உணரத்தான் செய்கின்றோம். உணரும் தருணங்களும் வரத்தான் செய்கின்ற்ன.. நாம் தான் அந்தத் தருணங்களை இழந்து விடுகின்றோம்!

    ReplyDelete
  6. என் வாழ்வும் வளமும் சிறந்து விளங்கக் காரணமே அந்த
    ஆதிபரா சக்தி தான் .வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  7. மிக அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  8. ஏழையும் தேடுகின்றனர். மாடமாளிகையில் வாழ்பவனும் தேடுகின்றான். ஏழையின் கண்ணீரும் குறையவில்லை. தேடிய கடவுளும் கிடைக்கவில்லை

    ReplyDelete
  9. சமூக மூட நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டும் ஆழமான வரிகள். இறைவன் இருக்கிறார் என்பதற்கு சான்று தேடியே வாழ்வைத் தொலைத்தவர்கள் தான் நம்மவர்கள். அழகான வரிகளைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரர்..

    ReplyDelete
  10. "எல்லோரும் அன்பாய் அழைத்தும்
    யாருமே பார்க்க முடியாத
    பொல்லாத சக்தி அவன்
    பொய்யாக வாழ்கின் றானோ" என
    வெளிப்படுத்தும் உண்மையை
    வரவேற்கின்றேன்!

    தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.

    ReplyDelete
  11. எல்லோரும் அன்பாய் அழைத்தும்
    யாருமே பார்க்க முடியாத
    பொல்லாத சக்தி அவன்
    பொய்யாக வாழ்கின் றானோ.............அவரையும் அப்படி ஆக்கிவிட்டார் மனிதர்

    ReplyDelete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?

    ReplyDelete
  13. எல்லோரும் அன்பாய் அழைத்தும்
    யாருமே பார்க்க முடியாத
    பொல்லாத சக்தி என்று தாங்கள் கூறினாலும் மனதார நினைத்தால் உணர முடியும் சக்தி அச்சக்தி என்பது என் எண்ணம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. அருமை.... உங்களுக்குள் இருக்கும் கடவுளை நீங்கள் உணரவில்லையா.....

    த.ம. +1

    ReplyDelete
  15. நாட்டு நடப்பை பார்க்கையில் சமயத்தில் யாருக்கும் இப்படித் தோன்றுவது உண்டு...
    இருந்தாலும் பக்தியை தனது மன அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் பாங்கை நான் ஆதரிக்கிறேன், (அடுத்த மதத்தை குறை கூற, அவரது வழிபாட்டுத்தளங்களை பொய் கூறி கைப்பற்ற சிலர் பக்தியை பயன்படுத்தும் பொழுது தக்காளி நீ சாமியாடா என்று கேட்கத் தோன்றும்)

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்