தோல்வியில்லைத் தொடர்ந்திடு
அழுகின்ற குரலென்றும் அடங்காமல் முடியாது அடக்குமுறை எந்நாளும் அறவழியாய் ஆகாது துடிக்கின்ற உயிரென்றும் துணையின்றிப் போகாது துன்பமே எல்லோர்க்கும் வழித்துணையாய் மாறாது விழுகின்ற நொடிஎல்லாம் விரல்துடிக்க மறவாது விழுந்தாலும் மனதால் வீழ்த்திவிட முடியாது தோற்றதாய் சொன்னாலும் துவண்டுவிட முடியாது தோல்வியை தொடர்ந்தவன் வெற்றிபெற தடையேது மீண்டும் மீண்டுமென மகிழ்ச்சியாய் துவங்கிடு தாண்டுமுயரம்த் தடுத்தாலும் தோல்வியில்லைத் தொடர்ந்திடு